விவாகரத்து போட்டோ சூட் எடுக்க காரணம் இதுதான்..வெளிச்சத்துக்கு வந்த உண்மை..கடைசியில் இப்படியா?
சென்னை: சீரியல் நடிகை சமீபத்தில் எடுத்த விவாகரத்து போட்டோ சூட் சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
விவாகரத்து குறித்தும் விவாகரத்து கொண்டாட்டங்கள் குறித்தும் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பேசப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் எதற்காக தான் இப்படி ஒரு முடிவு எடுத்தேன் என நடிகை ஷாலினி மனம் திறந்து பேசி இருக்கிறார்.

சீரியல் நடிகை ஷாலினி ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் எனும் சீரியலில் நடித்து பிரபலம் அடைந்திருக்கிறார். அது மட்டும் அல்லாமல் பல ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் கூட ஜீ தமிழில் ஒளிபரப்பான சூப்பர்மாம் நிகழ்ச்சியில் அவரும் அவருடைய மகள் ரியாவும் கலந்து கொண்டிருந்தார்.
நடிகை ஷாலினிக்கு ஏற்கனவே மேட்ரிமோனியம் மூலமாக வீட்டில் பார்த்து ஒரு திருமணம் முடிந்திருக்கிறது. ஆனால் அந்த திருமண வாழ்க்கை ஒரு சில மாதங்கள் கூட நீடிக்கவில்லையாம். இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து ஆகிவிட்டதாம். அதற்கு பிறகு தான் ரியாஸ் என்கிற நபரை இவர் சந்தித்தாராம். இவர் தனியாக வாழ்ந்து வந்த நேரத்தில் ரியாஸ் ஆரம்பத்தில் இவரிடம் ஒரு ரசிகர் என்று பழகி பின்பு காதலிக்கும் செய்தியை கூறினாராம். அப்போதே அவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் என்றும் மனைவியோடு இல்லை என்று கூறியதாக ஷாலினி கூறியிருக்கிறார்.

அதே நேரத்தில் ரியாஸை, ஷாலினி அளவுக்கு அதிகமாக காதலித்து வந்தாராம். குழந்தைகள் விஷயத்தில் ஷாலினி அதிகமாக பாசத்தோடு எதிர்பார்த்து இருந்த நிலையில், ஷாலினி கர்ப்பமாக இருந்திருக்கிறார். அவருக்கு பெண் குழந்தையும் பிறந்து இருக்கிறது.
அதுவரைக்கும் தன்னுடைய குழந்தைக்காக தான் ரியாஸ் உடைய அடி உதைகளை எல்லாம் பொறுத்துக் கொண்டு இருந்ததாகவும், ஆனால் தன்னுடைய குழந்தை முன்பு அடித்து குழந்தை அழுவதை பார்த்தும் நிறுத்தாமல் அடித்த பிறகு தனக்கு இந்த கணவர் இனி வேண்டாம் என்று முடிவெடுத்ததாக கூறியிருக்கிறார்.
ஏற்கனவே குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு அவர் சென்னையில் தான் இருந்திருக்கிறார் துபாய்க்கு செல்லாமல் இருந்த நிலையில் ரியாஸ் அப்போது தன்னோடு வரும்படி அடிக்கடி கூப்பிட்டுக் கொண்டிருந்த நிலையில் இதற்கு முன்பு என்னை அடித்தாய் உதைத்தாய் சரி என்று பொறுத்துக் கொண்டேன் ஆனால் இனி குழந்தை வந்துவிட்டது, குழந்தை முன்பு என்னை அடிக்கக்கூடாது என்று நான் கூறினேன். ஆனால் அப்போது சரி என்று சொல்லிவிட்டு பிறகு அதே சித்திரவதை தொடர்ந்தது என்று கூறி இருக்கிறார்.

அத்தோடு நான் இன்று இந்த கஷ்டத்தை சந்தோஷமாக கொண்டாடுகிறேன் என்றால் எவ்வளவு வலியும் வேதனையும் என்னுடைய வாழ்க்கையில் இருக்கும் என்பது பலரும் புரிந்து கொள்ள வேண்டும். இது எனக்கு மட்டுமல்ல என்னை போல பல பெண்கள் இதே நிலையில் தவிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியே சமூகம் என்ன சொல்லும் என்று பயந்தபடி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இனி வாழ வேண்டிய அவசியம் இல்லை என்று இது உணர்த்துவதற்காக என்றும் அவர் கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளத்தில் இந்த போட்டோ சூட் வைரலாகி வரும் நிலையில் இதுவரைக்கும் சீரியல் நடிகை ஷாலினி பற்றி தெரியாமல் இருந்த பலரும் கூட இப்போது தெரிந்து கொண்டிருக்கின்றனர். அதனால் இது பிரபலமாவதற்காக தான் இப்படி ஒரு போட்டோ சூட் என்று சிலர் கலாய்த்து வருகிறார்கள். இன்னும் ஒரு சிலர் இந்த மாதிரி விவாகரத்துகளை சந்தோஷமாக கொண்டாடுவதில் தப்பு இல்லை என்றும், இன்னும் ஒரு சிலர் இப்படி கொண்டாடுவது பலருக்கு மனதில் சஞ்சலத்தை கொடுத்து விடும் என்றும் கருத்து கூறி வருகிறார்கள்..
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications