Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விடை தெரியாமலேயே போன Vj சித்ராவின் இறப்பு! விடுதலை செய்ததும் கணவர் ஹேம்நாத் செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சின்னத்திரை நடிகையான விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி அவருடைய அறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் அவரோடு இருந்த அவருடைய கணவர் ஹேம்நாத் தான் விஜே சித்ரா தற்கொலைக்கு காரணம் என்று விஜே சித்ராவின் அம்மா கொடுத்திருந்த வழக்கு காரணமாக ஹேம்நாத் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில் இன்று அவர் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். இப்போது அவர் செய்த செயல் இணையத்தில் பலரால் விமர்சிக்கப்படுகிறது.

விஜே சித்ரா சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி அதற்குப் பிறகு ஒரு சில சீரியல்களில் நடித்திருந்தார். அதிலும் சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில் காமெடி கேரக்டரில் பெரிய அளவில் பிரபலம் அடைந்திருந்தார். அதை தொடர்ந்து அவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கி கொடுத்தது என்றால் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான்.

Television VJ Chitra

இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்தார் என்று சொல்வதை விடவும் வாழ்ந்து வந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு அந்த கேரக்டருக்கு இவர்தான் பக்காவாக பொருத்தம் என்று சொல்லும் அளவிற்கு பொருந்தி இருந்தார். அதோடு சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்த விஜே சித்ரா தன்னுடைய ரசிகர்களிடம் அடிக்கடி சமூக வலைதளத்தில் பேசிக்கொண்டிருந்தார். அதுபோல தன்னுடைய பிறந்த நாளில் ரசிகர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.

தன் பெயரில் பேன்ஸ் பேஜ் ஓபன் செய்த ரசிகர்களுக்கு அவர்களுக்கு வீட்டிற்கு சென்று பல முறை விஜே சித்ரா அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தார். அடிமட்டத்திலிருந்து பல போராட்டங்களுக்கு பிறகு ஓரளவு புகழில் உச்சத்தில் வந்த நேரத்தில் தான் சித்ராவின் இறப்பு நடந்து விட்டது. சைக்காலஜி படித்திருந்த விஜே சித்ரா எப்போதும் பேட்டிகளில் தன்னம்பிக்கையோடு பேசிக் கொண்டிருந்தார்.

அதுபோல ரீல்ஸ் வீடியோக்களிலும் தன்னோடு நடித்த நடிகர்களோடு ஜாலியாகவே வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டிருந்தார். ஆனால் அவர் கடந்த 2020 ஆம் ஆண்டு பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது அவருடைய குடும்பத்தாரை மட்டும் அல்லாமல் அவரோடு நடித்த நடிகர்கள் நடிகைகள் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

television vj chitra

தான் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு கூட விஜய் டிவியில் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியில் தான் கலந்து கொண்ட வீடியோக்களை இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் பதிவிட்டு இருந்தார். ஆனால் அவர் எப்படி தற்கொலை செய்து இருப்பார் என்று பலரும் கேள்வி எழுப்பு வந்தனர். அதை எடுத்து சித்ராவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் சித்ராவின் கணவர் ஹேம்நாத் கைது செய்யப்பட்டார்.

சித்ரா இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்புதான் தான் ஹேமநாத்தை காதலித்து வருவதாக அறிவித்திருந்தார். அதோடு விஜய் டிவி நிகழ்ச்சியில் அவர்கள் இருவருக்கும் ரிசப்ஷன் ஒன்றையும் நடத்தி வைத்திருந்தார்கள். அதுபோல இவர்கள் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதாகவும் சித்ராவின் நண்பர்கள் தெரிவித்து இருந்தனர். ஆனால் வி.ஜே சித்ராவின் இறப்பிற்கு பிறகு நான்கு வருடங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் இன்று இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

அதில் நீதிபதி ரேவதி கூறுகையில் சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத்துக்கு எதிராக எந்த ஒரு ஆதாரத்தையும் போலீசார் சமர்ப்பிக்கவில்லை என்பதால் ஹேமநாத்தை விடுதலை செய்வதாக அறிவித்திருக்கிறார். இந்த அறிவிப்பு வெளியானதும் ஹேம்நாத் நீதிமன்றத்தில் கண்கலங்கி அழுது இருக்கிறார். இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இப்போது இணையத்தில் பரவி வருகிறது.

இதை பார்த்ததும் ரசிகர்கள் பீல் பண்ணி சித்ராவிற்காக வருத்தப்பட்டு வருகிறார்கள். பல பேரை சிரிக்க வைத்துக் கொண்டிருந்த விஜே சித்ரா எப்படி இறந்தார்? என்று விடை தெரியாமலேயே போய் விட்டதே என்று தங்களுடைய ஆதங்கத்தை தெரிவித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+