சாலை விபத்து! ரத்த வெள்ளத்தில் போலீஸ்காரர்.. சீரியல் நடிகை ஆண் நண்பரோடு கைது? வெளியான தகவல்
சென்னை: சீரியல் நடிகை ஒருவர் சாலையில் வேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதாக செய்தி ஒன்று பரவி வருகிறது. சமீபத்தில் தமிழில் பிரபலமாக இருக்கும் சீரியலில் நடிக்கும் நடிகை சென்னை சோழிங்கநல்லூர் பகுதியில் தன்னுடைய ஆண் நண்பரோடு காரில் பயணிக்கும் போது ராங் ரூட்டில் சென்று எதிரே வந்த போலீசார் வாகனத்தின் மீது மோதியதால் அந்த போலீசார் ஆபத்தான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் தான் அந்த நடிகை கார் வாங்கியிருந்தார். இந்த நிலையில் அவருடைய ஆண் நண்பரோடு குடிபோதையில் இருந்ததாகவும் போதையில் இருவருமே காருக்குள் இருந்தபோது கார் வேகமாக வந்ததால் தான் இந்த விபத்து ஏற்பட்டது என்றும் கூறப்படுகிறது. அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

அந்த வகையில் சீரியலுக்கு பெயர் போன சேனல் ஒன்றில் பிரபலமான சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் சீரியல் நடிகை குறித்த செய்தி தான் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த சீரியல் நடிகை அவர் நடிக்கும் சீரியலில் பெண்களின் முன்னேற்றம் மற்றும் சமூக பொறுப்பு குறித்து அதிகமாக பேசிக் கொண்டிருக்கும் கேரக்டர்.
ஆனால் அவர் செய்திருக்கும் செயல்தான் இப்போது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. அதாவது சமீபத்தில் சாலை விபத்துக்கள் கட்டுக்கடங்காமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நாம் சரியாகப் போனால் கூட எதிரே வருபவர்களின் அலட்சியத்தால் பலர் உயிரை இழந்து இருப்பதை தெரிந்து இருப்போம். அதுபோல ஒரு சிலரின் கவனக்குறைவால் எதிரே வருபவர்களின் வாழ்க்கையை இழந்த கதைகளையும் தினசரி செய்திகளாக கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
ஆனாலும் பல பேர் அலட்சியப் போக்கு இன்னும் தெளிவாகவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அந்த மாதிரி தான் சீரியலில் கருத்து பேசி பலருடைய கவனத்தை ஈர்த்து வரும் கதாநாயகி நிஜத்தில் குடிபோதையில் தன்னுடைய ஆண் நண்பரோடு சாலையில் வேகமாக வந்ததால் எதிரே வந்த போலீஸ்காரரின் பைக்கில் நடிகையின் கார் மோதியதால் அந்த போலீஸ்காரர் இப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாராம்.
இந்த சம்பவத்தை தெரிந்து கொண்ட போலீஸ் உடனடியாக அந்த இடத்திற்கு வந்தபோது காருக்குள் சீரியல் நடிகையும் அவருடைய ஆண் நண்பரும் போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால் சீரியல் நடிகை இது ஒரு சின்ன தப்பு தான், என்னுடைய நண்பர் தான் தெரியாமல் இப்படி பண்ணி விட்டான்... அவன் மீது தான் தப்பு இதை நான் பெருசு படுத்த முடிவு விரும்பவில்லை என்று கூறியிருக்கிறார்.
போலீசார் அந்த சீரியல் நடிகை மற்றும் அவருடைய ஆண் நண்பரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துப் போனதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்து இரண்டு நாட்கள் ஆன நிலையில் நேற்று தான் இது வெளியே தெரிய வந்திருக்கிறது. அதோடு அந்த சீரியல் நடிகை கடந்த வருடத்தில் தான் அந்த காரை வாங்கி இருந்தார். கார் வாங்கியதும் அது குறித்து சில ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு இருந்தார் அது பெரிய அளவில் ரீச் ஆனது என்பதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications