ஆண் நண்பர் மூலம் கணவரை கொல்ல முயற்சி.. ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சுந்தரி சீரியல் நடிகை கைதால் பரபரப்பு
சென்னை: கணவரை கொலை செய்ய நண்பரை வைத்து முயற்சி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் சுந்தரி சீரியலின் துணை நடிகை ரம்யா கைது செய்யப்பட்டார்.
கோவை பொள்ளாச்சி அருகில் உள்ள டி நல்லகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ். இவர் அந்த பகுதியில் உள்ள குளிர்பான கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவருக்கும் கோவை பீளமேட்டை சேர்ந்த ரம்யாவுக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு தற்போது இரு குழந்தைகள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவி இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தெரிகிறது.

ரம்யா
இதனால் ரம்யா குழந்தைகளை அழைத்துக் கொண்டு பீளமேட்டில் உள்ள தனது அம்மா வீட்டிற்கு சென்றுவிட்டார். சினிமா மீது இருந்த மோகம் காரணமாக கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த டேனியல் என்ற சந்திரசேகர் என்பவருடன் ரம்யாவிற்கு பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. டேனியல் மூலம் ரம்யாவுக்கு சீரியலில் துணை நடிகை வாய்ப்பு கிடைத்தது.

சுந்தரி
அதன்படி அவர் சுந்தரி, கண்ணெதிரே தோன்றினாள் சீரியலில் நடித்து வருகிறார். இந்த நிலையில் குழந்தைகளை தனது தாய் வீட்டில் ரம்யா விட்டு சென்ற நிலையில் குழந்தைகளை பார்க்க ரமேஷ் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்த நிலையில் ரம்யா தனது கணவர் குடித்துவிட்டு கொடுமைப்படுத்துவதாகவும் அவரை எப்படியாவது ஒழித்துக் கட்ட வேண்டும் என்றும் டேனியலிடம் கூறி அழுதுள்ளார்.

ரம்யாவும் ரமேஷும்
இதையடுத்து நேற்று முன் தினம் இரவு ரம்யாவும் ரமேஷும் இரு சக்கர வாகனத்தில் சென்றிருந்தார்கள். அப்போது அடையாளம் தெரியாத மர்மநபர்கள் இரு சக்கர வாகனத்தில் மோதியுள்ளனர். இதில் ரமேஷும் மற்றொரு பைக்கில் வந்தவரும் கீழே விழுந்தனர். அப்போது அந்த மர்ம நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரமேஷின் கழுத்து, கை, கால், தலைபகுதிகளில் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

மருத்துவமனையில் ரமேஷ் அனுமதி
இதையடுத்து படுகாயங்களுடன் ரமேஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ரமேஷ் பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரமேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ரம்யாவின் செல்போனை ஆய்வு செய்த போது செல்போன் அழைப்புகளின் மூலம் அவர் ரமேஷை கொலை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து ரம்யா மற்றும் டேனியல் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுகிறேன்.. அறிவித்தார் செல்வபெருந்தகை! பின்னணி இதுதான் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
திண்டுக்கல் எஸ்ஐக்கு மனமகிழ் மன்றத்தில் இருந்து வந்த அழைப்பு.. கனவிலும் நினைக்காத சம்பவம் -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை லெப்ட் ரைட் வாங்கிய மீனா.. அண்ணாமலை கொடுத்த ஐடியா! மாஸ் காட்டிய முத்து












Click it and Unblock the Notifications