7 வருடங்கள் பின்னோக்கி வரும் இந்த நாளை நான்!? உருக்கமாக பதிவிட்ட நடிகர் சேதுராமனின் மனைவி
தன்னுடைய ஏழாவது வருட திருமண நாளில் நடிகர் சேதுராமன் மனைவி உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
சென்னை: கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகர் சேதுராமன் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
ஒரு மருத்துவரும் நடிகருமாக இருந்த சேதுராமன் திடீரென சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார்.
அவருடைய மரணத்திற்கு பிறகு தற்போது ஏழாவது திருமண நாள் வாழ்த்துக்களை அவருடைய மனைவி சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.

மறைந்த சேதுராமன்
மறைந்த நடிகர் சேதுராமனின் மனைவி தன்னுடைய திருமண நாளில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். நடிகர் சேதுராமன் 2013 ஆம் ஆண்டு வெளியான கண்ணா லட்டு தின்ன ஆசையா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர். கடந்த 2020இல் மார்ச் மாதம் திடீரென மாரடைப்பால் காலமான சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நடிகர் சேதுராமன் காலமடையும்போது அவருடைய மனைவி கர்ப்பமாக இருந்தார். அவர் இறந்து ஐந்து மாதங்கள் கழித்து அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. சேதுராமனே தன்னுடைய மகனாக பிறந்து விட்டார் என்று அவர் அப்போது உருக்கமாக பதிவு வெளியிட்டிருந்தார்.

மருத்துவரும் நடிகரும்
அது மட்டுமில்லாமல் நடிகர் சேதுராமன் வாலிப ராஜா, சக்க போடு போடு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் அவர் சரும நிபுணர் எனப்படும் dermatology என்ற துறையில் மடித்துவ படிப்பையும் முடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 2016 ஆம் ஆண்டு சொந்தமாக ஒரு தோல் நோய் மருத்துவமனை ஒன்றையும் திறந்து இருந்தார்.அது மட்டுமல்லாமல் அதை தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு அண்ணா நகரில் தனது இரண்டாவது மருத்துவமனையும் திறந்தார். மருத்துவர், நடிகர் என்று இரண்டு துறைகளிலும் தன்னுடைய திறமையை காட்டி வந்த டாக்டர் சேதுராமன் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி உமா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்த நிலையில் அவருடைய மறைவிற்கு பிறகு அவருடைய மனைவி தன்னுடைய திருமண நாளில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஏழாவது திருமண நாள்
அதில் இதே நாளில் ஏழு ஆண்டுகள் திரும்பிப் பார்க்கும்போது காலங்கள் எப்படி கடந்துவிட்டது என்பதை உணருகிறேன். நம்மை சுற்றி அனைத்தும் மாறிவிட்டது. ஆனால் அன்பு மட்டும் அப்படியே இருக்கிறது. உங்களுக்கு அழிவே கிடையாது. எப்போதும் நீங்கள் வானத்தை தொட நினைக்கும் ஒரு சிறந்த மருத்துவர் தான். உங்கள் மீதான என்னுடைய காதலும் எப்போதும் அழியாது. இந்த நாளை நாம் எப்போதும் கொண்டாடியது இல்லை. ஏனென்றால் உங்களுக்கு வெளிகாட்டுவது பிடிக்காது. ஆனால் ஒவ்வொரு ஆண்டும் நான் இதை வெளிக்காட்டி இந்த நினைவுகளை எண்ணி மகிழ்ந்தேன். இனிவரும் காலங்களில் இதையே நான் செய்வேன். இனிய ஏழாவது திருமண நாள் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

உத்வேகம் கொடுக்கும் பெண்
நடிகர் சேதுராமனின் மறைவிற்குப் பிறகு அவருடைய மனைவி தன்னுடைய குழந்தைகளை கவனித்து வரும் நிலையில் சேதுராமனின் மருத்துவமனைகளையும் கவனித்து வருகிறார். இந்த நிலையில் அவர் வெளியிட்ட பதிவிருக்கு அதிகமான ரசிகர்கள், பிரபலங்கள் பலர் தங்களுடைய கருத்துக்களை கூறி வருகின்றனர். அதில் பலர் காதலின் நினைவுகள் என்றும் அழியாமல் இருக்க 7வது திருமண நாள் வாழ்த்துக்கள் என்றும், நீங்கள் பல பெண்களுக்கு உத்வேகமாக இருக்கிறீர்கள் என்றும், மேலும் அன்பும் வலிமையும் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றும் இவருக்கு வாழ்த்துக்களையும், ஆசீர்வாதங்களையும் கூறி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications