செவ்வந்தி சீரியல் நடிகைக்கு பிறந்த நாளில் நடந்த சோகம்.. கழுத்தை இறுக்கி.. கண்ணீரோடு வெளியிட்ட வீடியோ
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் செவ்வந்தி சீரியல் நடிகை சிவன்யா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளத்தில் பிரபலமாக இருக்கும் சிவன்யா தன்னுடைய பிறந்தநாளில் கண்ணீரோடு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

தனக்கு நடந்த நிகழ்வு குறித்தும் அதனால் பலரும் விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்றும் இவர் பேசியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் களில் நடிக்கும் நடிகர்கள் பலரும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து இருக்கின்றனர். அந்த வகையில் செவ்வந்தி சீரியலில் நடிகை சிவன்யா முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். ஏற்கனவே செவ்வந்தி சீரியலில் கதாநாயகியாக திவ்யா ஸ்ரீதர் நடித்துவரும் நிலையில் அவருடைய குடும்ப பிரச்சினை காரணமாக செவ்வந்தி சீரியல் பலருக்கும் தெரிந்ததுதான்.
அதே நேரத்தில் சீரியலில் மட்டுமல்லாமல் சிவன்யா சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார் அதிலும் அவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர் இந்த நிலையில் சமீபத்தில் தான் அவருடைய பிறந்தநாள் வந்து இருந்தது. பிறந்தநாள் அன்று அவருடைய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார். அதற்கு அதிகமான ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்.
தன்னுடைய பிறந்தநாள் அன்று instagramல் லைவில் ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருப்பாராம். ஆனால் இந்த முறை அப்படி பேசவில்லையாம். அதற்கு என்ன காரணம் என்பது குறித்து கண்ணீரோடு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் பேசுகையில் நான் கோவிலுக்கு என்னுடைய தம்பியோடு பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.
அப்போது நான் கழுத்தில் பெரிய ஷால் போட்டு இருந்தேன். அதையும் கழுத்தை சுற்றி போட்டிருந்தேன். கையை வைத்து என்னுடைய தம்பியை பிடித்தபடி சரியாக தான் அமர்ந்திருந்தேன். அப்போது அதிகமாக காற்று வீசிக் கொண்டிருந்தது. அந்த ஒரு நிமிடம் என்ன நடந்தது என்று தெரியவில்லை. என்னுடைய ஷால் பைக் சக்கரத்தில் சுற்றி விட்டது. நல்ல வேலையாக நான் உயிர்பிழத்தேன். என்னுடைய கழுத்தில் காயம் பட்டிருக்கிறது.
கீழே விழுந்து இருந்தால் என் நிலைமை என்ன ஆயிருக்கும் என்று சொல்ல முடியாது. காரணம் நான்கு வழி சாலையில் எப்படியோ நான் உயிர் பிழைத்து விட்டேன். அதனால் யாரும் இனி பைக்கில் போகும்போது கவனமாக போக வேண்டும் என்று கண்ணீரோடு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது. பலர் அவருக்கு ஆறுதல் கூறி வரும் நிலையில் இந்த மாதிரி இனி யாருக்கும் நடக்கக்கூடாது கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர்.
-
Blast Movie Review: ப்ளாஸ்ட் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! அர்ஜுனுக்கு கம்பேக்? முழு விமர்சனம் இதோ! -
ஒருபுறம் அஜித் அம்மா மறைவு... மறுபுறம் அனாதையாக விடைபெற்ற சத்யேந்திரா! சமூகத்தின் இரட்டை முகமா? -
பிரச்சனை இருந்தது.. விட்டு கொடுக்க மனசு இல்ல.. ஆனாலும், கருப்பு படம் குறித்து நடிகர் இந்திரன்ஸ் உருக்கம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications