கோடி ரூபாய் கொடுத்தாலும் அப்படி நடிக்க மாட்டேன்.. கடைசி வரை உறுதியாக இருந்த செவ்வாழை ராசு
சென்னை: கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க மாட்டேன். கடவுள் மறுப்பு கொள்கை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று நடிகர் செவ்வாழை ராசு தனது கொள்கையில் உறுதியாக இருந்தார். இதன் காரணமாக அவருக்கு வந்த பல வாய்ப்புகளை தட்டி கழித்துள்ளார். இது தொடர்பாக நடிகர் செவ்வாழை ராசு பேசிய பழைய வீடியோ தற்போது பரவி வருகிறது.
தேனியை சேர்ந்த காமெடி நடிகர் செவ்வாழை ராசு (70), முதன் முதலாக பாரதிராஜா இயக்கத்தில் 'கிழக்கு சீமையிலே' படத்தில் நடித்தார். அதன்பின்னர் தனுஷின் தந்தையான கஸ்துாரிராஜா இயக்கத்தில் 'தாய்மனசு' படத்தில் நடித்தார். 90களில் ஏராளமான படங்களில் நடித்த செவ்வாழை ராசு, பாரதிராஜாவின் பல படங்களில் நடித்தார்.

இந்நிலையில் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் திரைப்படமும் தேனியை சுற்றித்தான் எடுக்கப்பட்டது. அப்போது பொணந்திண்ணி என்ற கதாபாத்திரத்தில் செவ்வாழை ராசு நடித்தார். அந்த கதாபாத்திரம் பெரிய அளவில் புகழை அவருக்கு பெற்றுத்தந்தது. அந்த சமயத்தில் மைனா, கந்தசாமி , வேலாயுதம் உள்பட பல திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் செவ்வாழை ராசு நடித்தார்.
செவ்வாழை ராசுவின் மகன் எஸ்ஆர் தமிழன், தேனியில் செல்வாக்குள்ள பிரமுகராக திகழ்ந்தார். அவர் திடீரென சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அவரது இறப்பை செவ்வாழை ராசுவால் தாங்கி கொள்ள முடியவில்லை.இதனால் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாமல் சொந்த ஊரிலேயே இருந்த செவ்வாழை அரசு சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே அவர் சிகிச்சை பலனின்றி இன்று ( மே 18 ) காலமானார். செவ்வாழை ராசுவின் மறைவு ரசிகர்கள், திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
செவ்வாழை ராசுவின் உடல் சொந்த ஊரான தேனி மாவட்டம் வருசநாடு அருகே கோரையூத்து கிராமத்தில் கிராம மக்களின் அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது. செவ்வாழை ராசுவின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு செவ்வாழை ராசு அளித்த பேட்டி ஒன்று இப்போது பேசுபொருளாகி உள்ளது. அவர் தனது பேட்டியில், " என் பெற்றோர் வைத்த பெயர் ராசு. குழந்தையாக நான் இருந்தபோது சிவப்பாக இருந்ததால், என்னை 'செவ்வாழை' என அழைத்தனர். பின்னர் பெயரும் செவ்வாழை ராசு என மாறிவிட்டது.

நான் கார்த்தியுடன் நடித்த 'பருத்தி வீரன்' எனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுத்தது. மைனா, கந்தசாமி, வேலாயுதம், பெரியமனுஷன், கருத்தம்மா, மலைக்கோட்டை, வல்லமை தாராயோ என 140க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்கிறேன். என்னுடைய 100 வது படம் விஜய்யுடன் நடித்த வேலாயுதம் படம் ஆகும்.
பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் நான் நடிக்க வரவில்லை. பொழுதுபோக்காக தான் நான் நடிக்க வந்தேன். கோடி ரூபாய் கொடுத்தாலும் நான் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்க மாட்டேன்.கடவுள் மறுப்பு கொள்கை வேடங்களில் நடிக்க ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்படி வந்த பல வாய்ப்புகளை தட்டி வேண்டாம் என சொல்லி இருக்கிறேன்" இவ்வாறு செவ்வாழை ராசு பேசிய வீடியோ இன்று மீண்டும் பரவி வருகிறது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications