எந்த ஆணும் இந்த மாதிரி சொன்னது கிடையாது.. விவேக்கை நினைத்து நெகிழும் ஷகீலா
சென்னை: எந்த ஆணும் என்னிடம் எந்த மாதிரி சொன்னது கிடையாது .விவேக் சாரால் மட்டும்தான் என்னிடம் அந்த மாதிரி ஒரு வார்த்தையை சொல்ல முடிந்தது என்று கூறி கலங்கியுள்ளார் நடிகை ஷகீலா.
அதனால்தான் அவருடைய இறப்புக்கு கூட நான் நேரில் செல்லவில்லை என குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கிக் கொண்டிருக்கும் ஷகிலா பேசிய வீடியோககள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது.
வெள்ளித்திரையில் தன்னுடைய ஜாலியான காமெடியிலும் சமூக சிந்தனைகளை விதைத்து பெரும் புரட்சியை செய்து கொண்டிருந்தவர் விவேக்.

விவேக் மரணம்
விவேக்கின் மரணம் அவருடைய ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது அவருடன் நடித்தவர்களும் பழகியவர்களும் அவருடைய நினைவுகளை அனைவரிடமும் பகிர்ந்து வருகின்றனர் .அதில் விவேக்கின் மரணத்தை கேள்விப்பட்டதும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இதுவரைக்கும் தன்மீது இருந்த பார்வையை முழுவதுமாக மாற்றிக் கொண்ட ஷகிலா விவேக்கை பற்றி பல தகவல்களை வெளியிட்டிருக்கிறார் .

ஷகீலா வேதனை
இதைக் கேள்விப்பட்டதும் அவருடைய ரசிகர்கள் மனமுருகி இருக்கின்றனர். விவேக் அனைவருக்கும் என்கரேஜ் கொடுக்கும் விதமாக பெரியவர்கள் சிறியவர்கள் என யாரையும் தகுதியைப் பார்க்காமல் சகஜமாக பழகி அவர்களுடைய திறமையையும் அங்கீகரிக்கும் விதமாக மோட்டிவேஷனல் கொடுப்பவர். அந்த மாதிரிதான் ஷகிலாவிற்கும் அவர் துவண்டு போயிருந்த நேரத்தில் மோட்டிவேஷனல் ஆகவும் தமிழ்ப்பெண் மீது தனக்கு இருக்கும் அக்கறையையும் தெரிவித்திருக்கிறார்.

ஆறுதல் தந்த விவேக்
அதில் அவர் கேரளாவில் இவருக்கு வாய்ப்பு கொடுக்காமல் அனுப்பி வைத்த நேரத்தில் எவ்வளவு கஷ்டப்பட்டு இருப்பார் என்பதை உணர்ந்து. நீ ஒரு தமிழ் பெண்ணாக இருக்கும் நிலையில் கேரளாவில் உனக்கு வாய்ப்பு தராமல் துரத்தி விட்டனர் என்ற அந்த ஒரே காரணத்திற்காக தான் நான் அவர்களுக்கு கால்ஷீட் கொடுக்கவில்லை என கூறியிருந்தார். அந்த வார்த்தை இப்ப வரைக்கும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

பார்க்க முடியவில்லை
அதுவும் நான் துவண்டு போகும் நேரத்தில் எனக்காக ஆறுதலையும் தைரியத்தையும் கொடுத்தவர் அவர்தான் .அதனால்தான் அவருடைய மகன் இறப்பிற்கு சென்றேன். ஆனால் அவரின் இறப்பிற்கு செல்லவில்லை காரணம் அவருடைய மனைவியின் முகத்தை என்னால் பார்க்க முடியாது என கூறியிருக்கிறார். ஷகீலாவின் இந்தப் பேச்சு பலரையும் நெகிழ வைத்துள்ளது.

மறக்க முடியாத மனிதர்
விவேக்கின் மறக்க முடியாத நினைவுகளை பற்றி பலரும் கூறிக் கொண்டிருக்கும் போது ஷகிலா கூறியிருப்பதை கேள்விப்பட்டதும் அவருடைய ரசிகர்கள் இந்த அளவிற்கு அனைவரின் மீதும் பாசம் வைத்திருப்பவரா எனவும் மிகுந்த வேதனையோடு இருந்து வருகின்றனர். இப்படிப்பட்ட ஒருவருக்கு இவ்வளவு சீக்கிரத்தில் இந்த ஒரு நிலையா என அவர்கள் வருத்தத்தோடு கமெண்டுகளை போட்டு வருகின்றனர்.

விவேக்கின் கனவு
ஆனாலும் இனி விவேக்கின் கனவு பல ரசிகர்களின் கனவாக நிறைவேற வேண்டுமெனவும் ஷகிலா தெரிவித்திருக்கிறார் .ஷகிலா மட்டுமல்லாமல் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகழ், அஸ்வின் ,ஷிவாங்கி என பலரும் தங்களுடைய வருத்தத்தையும் வேதனையும் தெரிவித்து வருகின்றனர் .அவர்களும் தங்களுடைய இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் விவேக்கின் ஆன்மா சாந்தியடைய வருத்தத்துடன் வேண்டுதல்களை வைத்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications