வடிவேலுவை மாமாவாக தான் பார்த்தோம்! ஆனால், அப்பா சொன்னது இதுதான்! வருத்தப்பட்ட சண்முக பாண்டியன்
சென்னை: நடிகர் விஜயகாந்தின் இரண்டாவது மகனான சண்முக பாண்டியன் நடிக்கும் படைத்தலைவன் திரைப்படம் இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது நடிகர் வடிவேலு குறித்து சண்முக பாண்டியன் சில விஷயங்களை பகிர்ந்து வந்தார். வடிவேலு தன்னுடைய அப்பா விஜயகாந்த்தை விமர்சித்து பேசியது குறித்து தன்னுடைய வருத்தத்தையும் தெரிவித்து இருந்தார்.
நடிகர் விஜயகாந்த் தமிழ் சினிமா மற்றும் அரசியல் பிரபலமாக இருந்து வந்தால் அதனால் பலருக்கும் தெரிந்தவர்தான். அவருடைய இரண்டாவது மகன் சண்முக பாண்டியன் படைத்தலைவன் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பல வருடங்களாக இந்த திரைப்படத்தில் சூட்டிங் நடைபெற்று வந்த நிலையில் இப்போது இன்னும் சில நாட்களில் வெளியாக இருக்கிறது. இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்ற போது தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்கள் குறித்து சண்முக பாண்டியன் பேசிக்கொண்டிருந்தார்.

விஜயகாந்தின் பேவரைட் காமெடி
அப்போது நடிகர் வடிவேலு குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு சிரித்தப்படியே பதில் அளித்து இருந்தார். வடிவேலு சாருக்கு ஆரம்பத்தில் அப்பா உதவிகள் செய்திருந்தார். ஆனால் அவருடைய திறமையால்தான் அவர் முன்னுக்கு வந்திருந்தார். ஆனாலும் அவர் ஒரு கட்டத்தில் அப்பாவை விமர்சித்து பேசியது தவறுதான். அது எங்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அவரை எப்போதுமே மாமாவாக தான் நினைத்தோம்.
விஜயகாந்துக்கு வருத்தம்
வடிவேலு சார் இப்படி பேசிட்டாரு என்றதும் அப்பா முதலில் வருத்தப்பட்டார். பிறகு சரி அவன் நிலைமை எப்படியோ அதனால் அவன் அப்படி பேசி விட்டான். அதனால அதை விட்டுவிடுங்கள் என்று சொன்னாரு. அப்பா சொன்ன பிறகு அதை பற்றி நாங்க பேசக்கூடாது. அப்பா ஏதாவது டென்ஷனா இருந்தா கூட டிவியில் வடிவேலுவின் காமெடியை போட்டு தான் பார்ப்பாரு. என்னுடைய படத்தில் கூட வடிவேலு நடிக்க வைக்கலாம் என்று யோசித்து இருந்தோம்.
வாய்ப்பை தடுத்தது கிடையாது
அதற்கு அப்பா சம்மதம் சொல்லி இருந்தார். ஆனால் எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகமாக இருக்கும் என்று நினைத்ததால்தான் அவரிடம் பேசவில்லை. அப்பா எந்த இடத்திலும் வடிவேலுவின் வாய்ப்புகளை தடுத்தது கிடையாது. ஏதாவது வாய்ப்புகள் வந்தால் கூட வடிவேலுவிடம் பேசிப் பாருங்க என்றுதான் அனுப்பி வைப்பாரு என்று சண்முக பாண்டியன் பேசி இருக்கிறார்.
வடிவேலு பேட்டி
அதே நேரத்தில் சில வாரங்களுக்கு முன்பு வடிவேலு ஒரு பேட்டியில் பேசும்போது, எனக்கு தமிழ் சினிமாவில் தெய்வம் என்றால் ராஜ்கிரண் தான். ராஜ்கிரண் சார் தான் எனக்கு சினிமா வாய்ப்பு கொடுத்தாரு. அவரோட ஆபீஸில் எனக்கு இடம் கொடுத்தாரு. பல வருடங்களாக அவருடைய ஆபீஸில் தான் என்னுடைய முகவரியாக இருந்தது. ஒரு சிலர் எனக்கு சாப்பாடு வாங்கிக் கொடுத்தேன், டிரஸ் வாங்கி கொடுத்தேன் என்று சொல்லுறாங்க. வடிவேலு மதுரையிலிருந்து வரும்போது டிரஸ் போடாமலா வந்தேன் என்று நக்கலா பேசியிருந்தார். அந்த வீடியோவை இப்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications