மஞ்சக் கலர் டி சர்ட் போட்டு.. கடலோரம் போய் காற்று வாங்கிய சரண்யா.. ஜில் ஜில்!
சென்னை: இன்ஸ்டாகிராமில் வைரலாகப் போய்க் கொண்டிருக்கும் போட்டோஷூட் களில் தற்போது சரண்யா துராடியும் களமிறங்கி இருக்கிறார்.
இவர் நடித்துக்கொண்டிருந்த ஆயுத எழுத்து சீரியல் திடீரென்று முடிவடைந்ததும் இவர் வீட்டில் சும்மா இருப்பதற்கு பிடிக்காமல் போட்டோஷூட்டில் கலக்க ஆரம்பித்து விட்டார். அவருடைய அரை டவுசர் போட்டோஸ்கள் வைரலாக பரவி வருகிறது.
திரைப்படங்களை விடவும் சீரியல் தான் தற்போது இருக்கும் சூழ்நிலையில் ரசிகர்கள் மனதில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றிருக்கிறது . வாரத்தில் 6 நாட்களும் பார்த்த முகங்களையே பார்த்துக்கொண்டு இருப்பதால் ரசிகர்கள் இவர்களின் கேரக்டர்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள் என்றுதான் சொல்லவேண்டும்..

ஏமாற்றம்
மொக்கை கதையாக இருந்தாலும் சரி சூப்பர் கதையாக இருந்தாலும் சரி தினமும் அதை பார்ப்பதால் அந்த சீரியல்களுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அந்த வரிசையில் தான் பல சீரியல் நடிகர்களும் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து வருகிறார்கள். அதேபோல தாங்கள் பார்த்து பழகிப்போன ஒரு சீரியலை திடீரென்று நிறுத்தினாலும் பல ரசிகர்கள் அந்த சீரியலில் நடித்தவர்களையும் அந்த சீரியலையும் ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள்.

இன்ஸ்டாவில் முகங்கள்
அந்தக் குறையை தீர்ப்பதற்காக தற்போது அதில் நடித்த சீரியல் நடிகைகள் ரசிகர்களின் முன்பு தங்களது முகத்தை அடிக்கடி காட்டி வருகிறார்கள்.
முன்னாடி எல்லாம் இந்த அளவிற்கு இணையதள வசதிகள் கிடையாது. அதே நேரத்தில் ஒரு சீரியல் முடித்த பிறகு அடுத்த சீரியலில் தான் அவர்களை பார்க்க முடியும் .ஆனால் தற்போது இணையதளங்களில் பெரும் வளர்ச்சி காரணமாக சீரியலில் மட்டுமல்லாமல் அடிக்கடி இவர்களின் போட்டோக்களையும் ஆட்டங்களையும் பார்த்துக் கொண்டிருக்கலாம்.

ஜவ்வு மிட்டாய் மாதிரி
அந்த மாதிரிதான் விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்த ஆயுத எழுத்து சீரியலும் திடீரென்று முடிக்கப்பட்டது. இந்த சீரியல் ஆரம்பமான புதிதில் படு சூப்பராக இருந்தது. பின்பு நாட்கள் போகப்போக ஜவ்வு மிட்டாய் போல இழுத்துக் கொண்டிருந்தது .ஆனால் தற்போது தான் நல்ல கதை சூடு பிடிக்க ஆரம்பித்து இருந்த நிலையில் எதற்காக என்று கூட தெரியாமல் திடீரென்று சீரியலை முடித்துவிட்டார்கள். இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருந்த சரண்யா துராடிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது.

திரைப்படங்களிலும்
சரண்யா சீரியலில் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். முதலில் நியூஸ் சேனல் வாசிப்பாளராக தான் அறிமுகமாகி பின்பு திரைப்படங்கள் சீரியல்களில் கலக்கிக் கொண்டிருந்தார். இவர் முதல் முதலாக நடித்த நெஞ்சம் மறப்பதில்லை சீரியல் மூலமாக இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த சீரியல் இவர் ஒரு டாக்டராக நடித்திருந்தாலும் போல்டான ஒரு மனைவியாகவும் கலக்கியிருப்பார்.

பெண்களின் ரோல்மாடல்
சரண்யாவைப் பார்த்து பல பெண்கள் ரோல்மாடலாக இவரை கருதினர் .அந்த அளவிற்கு இந்த சீரியலில் இவரது நடிப்பு கச்சிதமாக இருந்தது. அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பான ரன் சீரியலிலும் நடித்துக் கொண்டிருந்தார் .ஆனால் தொடர்ந்து அந்த சீரியலில் நடிக்காமல் அதிலிருந்து விலகிவிட்டார் . அதன்பிறகுதான் ஆயுத எழுத்து சீரியல் நடிக்க ஒப்பந்தம் ஆனார். ஆயுத எழுத்து சீரியலிலும் இவர் ஒரு கலெக்டராக நடித்திருப்பது பல ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்ததாக இருந்தது.

மாமியாருக்கு அடங்கியது சரியில்லையே
ஆனால் அதன்பிறகு இவர் வீட்டுக்குள் அடங்கி பெட்டிப்பாம்பாக பல கொடுமைகளை தாங்கும் பழைய கிராமத்து பெண்ணாகவே நடித்திருந்தார் .ஏற்கனவே இந்த மாதிரி சீன்களை பல சீரியல்களில் பார்த்திருந்த ரசிகர்களுக்கு இது கொஞ்சம் சலிப்பு தட்ட தான் செய்திருந்தது. இவரை ஒரு புதுமைப் பெண்ணாக பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் திடீரென்று இப்படி இவர் அடிமையாக இருப்பது பலருக்கு பிடிக்கவில்லை. அதன்பிறகு கொஞ்சம் கொஞ்சமாக இந்த சீரியலில் இவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் தரப்பட்டது அதன் பிறகு ரசிகர்கள் இந்த சீரியலை ரசிக்க ஆரம்பித்தார்கள்.

ரசிகர்களுக்கு பீலிங்ஸ்
ஆயுத எழுத்து சீரியல் நன்றாகப் போய்க் கொண்டிருந்த நிலையில் திடீரென்று முடித்து விட்டது. இந்த சீரியலின் ரசிகர்கள் கொஞ்சம் பீல் பண்ண தான் செய்திருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் பல ரசிகர்களும் தொடர்ந்து கமெண்ட் போட்டு இந்த சீரியல் எதற்காக முடித்தது என்று இவரிடம் கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு இவரும் சத்தியமாக எனக்கும் தெரியவில்லை தெரிந்தால் உங்களுக்கு கூறுகிறேன் என்று கூறியிருந்தார்.

போட்டோஸால் குஷி
அத்தோடு, தொடர்ந்து நடித்துக் கொண்டு இருப்பேன். அதனால் எனக்கு இன்னும் உங்களுடைய ஆதரவை தாருங்கள் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது இவர் அடுத்த சூட்டிற்கு ஆயத்தமான வேலையில் ஈடுபட ஆரம்பித்து விட்டார். அதுதான் விதவிதமான வகையில் போட்டோஸ் எடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சீரியல்களில் ஹோம்லியாக பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள போட்டோஸால் குஷியாகியுள்ளனர்.

போட்டோஸ் சூப்பரப்பு
முட்டிக்கு மேலே சின்ன குழந்தை போடும் டிரஸை போட்டுக் கொண்டு போட்டோஸ்கள் போட்டிருப்பது பல ரசிகர்கள் இவரை ரசித்தாலும் சில நெட்டிசன்கள் கலாய்த்தும் கொண்டிருக்கிறார்கள். இதெல்லாம் ரசிகர்களை கவர்வதற்கு வழிமுறை தானே நீங்கள் கலக்குங்கள் மேடம் என்று இவருடைய ரசிகர்கள் இவரை என்கரேஜ் பண்ணிக் கொண்டும் வருகிறார்கள். அதிலும் இப்போது வெளியாகியுள்ள பீச் போட்டோஸ் சூப்பராக உள்ளது. ஆதரவு தரும் ரசிகர்கள் இருக்கும் வரை எல்லாமே ஆரவாரம்தான்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications