இனி இவர்தான் "முல்லை"?.. ஆனால் சித்ராவை மறக்க முடியலையே!
சென்னை: பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இனி முல்லையாக அவரது தோழியும், நடிகையுமான சரண்யா துராடிதான் நடிக்கப் போவதாக சொல்கிறார்கள். ஆனால் சித்ராவின் இடத்தில் யாரையும் பொருத்திப் பார்க்க மனசு வராமல் ரசிகர்கள் தொடர்ந்து சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
விஜய் டிவியில் வெற்றிகரமாக முதலிடத்தில் ஓடிக்கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்துக் கொண்டிருந்த விஜே சித்ரா திடீரென்று தற்கொலை செய்து கொண்டு விட்டார்.
அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து இருக்கும் நேரத்தில் அந்த சீரியலில் இருந்து அவருக்கு பதிலாக அவருடைய நெருங்கிய தோழியான சரண்யா துராடிதான் நடிக்கப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களால் முடியலை
ஆனாலும் இவரது இழப்பை ஏற்றுக் கொள்ள முடியாமல் தவித்து வரும் ரசிகர் இந்த சீரியலில் கேரக்டரில் சித்ராவை தவிர வேறு யாராலயும் எங்கள் முல்லையாக பார்க்கவும் முடியாது ஏற்றுக்கொள்ளவும் முடியாது என்று கூறிவரும் நிலையில் சீரியலின் நிலைமையை எண்ணி சீரியல் நிர்வாகமும் இந்த மாதிரி ஒரு முடிவை எடுத்திருப்பதாக ரகசியங்கள் வெளியாகியிருக்கிறது.

அடுத்த முல்லை யார்
அதுவும் அவருடைய ரசிகர்களே இனி முல்லை கதாபாத்திரத்தில் சரண்யாவை தான் தேர்ந்தெடுப்பார்கள் என்று கூறியிருக்கிறார். கடைசியாக முல்லை சித்ரா சரண்யா உடன் தான் வீடியோவை வெளியிட்டிருந்தார் .அந்த வீடியோக்களை பார்த்து அவரது ரசிகர்கள் கதறிக் கொண்டு இருக்கும்போது அவருடைய இடத்திற்கு இனி இவர் தான் பொருத்தமாக இருப்பார் என்று அவருடைய ரசிகர்களும் கூறி வருகின்றனர்.

மனசு வரலை
இருப்பினும் எங்களால் இனி யாரையும் முல்லை கேரக்டரில் பார்க்கவே முடியாது. அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் நிறைந்து இருந்தார். எப்போதுமே சந்தோஷத்தை மட்டுமே ரசிகர்களுக்கு காட்டிக் கொண்டிருந்த அவரின் சோகமான மறுபக்கம் யாருக்கும் தெரியாமலேயே போய்விட்டது. இவருடைய சந்தோசத்தை பார்த்து ரசித்த ரசிகர்கள் அவரின் சோகமான இந்த மாதிரி ஒரு முடிவை ஜீரணிக்க முடியாமல் தான் தவித்து வருகின்றனர்.

ஷேர் பண்ணாம போயிட்டாரே
சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக இப்ப வரைக்கும் இவருடைய இறப்பு பற்றி தான் பேசப்பட்டு வருகிறது .இது கொலையா தற்கொலையா என்னும் விவாதம் போய்க்கொண்டு இருக்கும்போது அவசரப்பட்டு விட்டார் சந்தோஷத்தை எல்லோரிடமும் ஷேர் பண்ணுன இவர் கஷ்டங்களை ஒருவரிடம் கூட கூறாமலேயே மனதிற்குள்ளேயே வைத்து விட்டாரே என்று தான் அனைத்து ரசிகர்களுக்கும் வேதனையாக இருக்கிறது.

எல்லோருமே நெருக்கம்தான்
சித்ராவிற்கு எப்போதுமே நெருங்கிய தோழி என்று ஒருவர் என யாரையுமே குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவிற்கு அனைவரிடமும் நெருக்கமாக இருந்திருக்கிறார் .ஆனால் அனைவரிடமும் சந்தோஷங்களை மட்டுமே பகிர்ந்து இருக்கும் இவர் தன்னுடைய கஷ்டங்களை எந்த தோழியிடம் கூறவே இல்லையாம் அதுதான் அனைத்து பிரண்ட்ஸ்களுக்கும் மிகவும் வேதனையாக தற்போது இருக்கிறது.

அனைவருமே அதிர்ச்சி
சின்னத்திரை முதல் வெள்ளி வரை அனைத்து நடிகர் நடிகைகளும் தங்களுடைய அதிர்ச்சியையும் இரங்க லையும் தெரிவித்து கொண்டிருக்கும்போது ரசிகர்களும் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர். அவர் கடைசியாக நடித்த பாண்டியன் ஸ்டோர் சீரியல் அவரை மையமாக வைத்தே பல பெண் ரசிகர்களும் ஆண் ரசிகர்களும் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வந்து கொண்டிருந்தனர்.

கடைசியாக பார்க்க ஆர்வம்
திடீரென்று அவர் இந்த சீரியலில் இனி இல்லாததை எங்களால் பொறுத்துக் கொள்ளவும் முடியவில்லை. தொடர்ந்து பார்க்கவும் முடியவில்லை என்று சமூக வலைத்தளங்களில் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் நேற்று கடைசியாக ஒளிபரப்பப்பட்ட பாண்டியன் ஸ்டோர் சீரியல் எபிசோட்டில் தொடரும் என்று இவரை வைத்து முடித்து விட்டனர் .

கடைசியாக நடித்த சீன் எது
அவரை கடைசியாக இந்த சீரியலில் பார்ப்பதற்காகவே பலரும் ஆர்வமாக நேற்று அந்த சீரியலை பார்த்திருக்கின்றனர். கடைசியாக அவரை தொடரும் என்றும் போட்டு முடித்ததும் இனி அவர் நடித்த சீன்களையாவது ஒளிபரப்புவார்களா இல்லை புது நடிகரை வைத்து நடிக்க வைத்து ஒளிபரப்பி விடுவார்களோ என்றும் பல்வேறு ரசிகர்கள் தவித்து வருகிறார்கள்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications