சித்ரா இடத்தில் நானா.. வாய்ப்பே இல்லை.. உதறித் தள்ளிய நடிகை.. உருகும் ரசிகர்கள்
சென்னை: சித்ரா இடத்தில் நான் நடிப்பதா.. அதுக்கு நான் சரிப்பட்டு வரமாட்டேன் என்று தான் முல்லையாக நடிக்கப் போவதாக உலா வரும் தகவல்களை மறுத்துள்ளார் நடிகை சரண்யா துராடி.
விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர் சீரியலும் ஒன்று. இந்த சீரியலுக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றனர்.
இந்த சீரியல் வழக்கமான குடும்ப சீரியல் ஆக இருந்தாலும் இந்த சீரியலில் நடிக்கும் முல்லை கதாபாத்திரத்திற்கும் முல்லை கதிர் ஜோடிக்கும் தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது .

அகால மரணம்
இதுவரைக்கும் இந்த சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து வந்த சித்ரா தற்போது தற்கொலை செய்து கொண்டதால் அவருடைய ரசிகர்கள் பெரும் துயரத்தில் இருந்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இந்த சீரியலில் முல்லை கேரக்டரை இனி யார் நடிக்கப் போகிறார் என்றும் பெரும் பரபரப்பு போய்க்கொண்டிருக்கிறது.

பெயர் தேடித் தந்த முல்லை
சித்ரா முதன் முதலில் மக்கள் டிவியில் அறிமுகமாகி பல்வேறு சேனல்களில் வேலை செய்திருந்தாலும் அவருக்கு நடிப்பு துறையில் பெரிய சிம்மசொப்பனமாக இருந்தது முல்லை கேரக்டர் தான் .இந்த கேரக்டர் மூலமாக தான் ஒவ்வொரு வீட்டு பெண்களும் இவரை தன் வீட்டு பெண்ணாக நினைக்க ஆரம்பித்து விட்டனர் .அந்த அளவுக்கு இவருக்கு பெரும் புகழையும் வாங்கி தந்தது இவரது நீண்ட நாள் கனவான விருதுகளும் இந்த சீரியலுக்கு அவருக்கு கிடைத்திருக்கிறது.

ரசிகர்கள் அதிகம்
இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் நடிகையாக வலம் வந்த அவர் தற்போது இல்லை என்றாலும் அவர் இல்லை என்பதையே ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய ரசிகர்கள் தவித்து வரும் நிலையில் இந்த
சீரியலை இனி அவருக்கு பதிலாக யார் நடிக்கப் போகிறார்கள் என்று பல்வேறு கருத்துக்கள் பரவி வருகின்றன.

நடிப்பாரா சரண்யா
இந்த நிலையில் இவரது நெருங்கிய தோழியான சரண்யா தான் இந்த சீரியலில் முல்லையாக நடிக்கப் போகிறார் என்று ஒரு செய்தி வெளியாகி வருகிறது. அதற்கு பல்வேறு ரசிகர்களும் இந்த சீரியலில் இனி முல்லை கேரக்டரில் யாரையும் நடிக்க வைக்காதீர்கள் எங்களால் பார்க்க முடியாது கேரக்டர் இறந்து விட்டதாகவே காட்டி விடுங்கள் என்றுதான் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

முடிச்சு வைப்பாங்களா
ஆனால் சானல் தரப்பில், அப்படி செய்ய முடியாது அவருக்கு பதிலாக யாரையாவது நடிக்க வைக்கலாம் என்று ஏற்பாடுகள் நடந்து வந்து கொண்டிருக்கின்றன .இந்த நிலையில் சரண்யா துராடி தான் முல்லை கேரக்டரில் நடிக்க போவதில்லை என்னால் அதில் நடிக்க முடியாது. முல்லை என்று சொன்னாலே அது சித்ரா மட்டும்தான். அவர் அந்த கேரக்டரில் நடிக்கவில்லை வாழ்ந்து விட்டு போய்விட்டார்.

வாழ்ந்து விட்ட கேரக்டர்
பல்வேறு இடங்களில் கூட என்னிடம் சொல்லியிருக்கிறார். நான் இப்போது இந்த சீரியலில் நடித்து முல்லையாகவே மாறிவிட்டேன் என்று அந்த அளவிற்கு அவருக்கு நெருக்கமான இதை என்னால் தட்டி பறிக்க முடியாது என்று வருத்தத்தோடு இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருக்கிறார். ஆனால் கடைசியாக சரண்யா துராடியும் சித்ராவும் ஜாலியாக எடுத்த வீடியோக்கள் தான் இன்ஸ்டாகிராமில் சித்ரா போஸ்ட் பண்ணி இருக்கிறார் .
வற்புறுத்தும் ரசிகர்கள்
இதைப்பார்த்து சித்ராவின் நெருங்கிய ரசிகர்கள் சித்ராவின் கேரக்டரில் இனி சரண்யா மட்டும் தான் நடிக்க முடியும் .அவர்தான் சித்ராவின் சாயலிலும் இருக்கிறார், நெருங்கிய தோழியாகவும் இருந்திருக்கிறார். அதனால் அவரால் தான் அந்த இடத்தை நிரப்ப முடியும் ப்ளீஸ் தயவுசெய்து ஒத்துக்கோங்க என்று சரண்யாவுக்கு பதில் கமெண்டுகளை போட்டு வருகிறார்கள்.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications