வழக்கத்துக்கு மாறா போன் பேசிட்டே இருந்தாங்க சித்து.. சரண்யா பரபர தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வழக்கத்துக்கு மாறாக நேற்று முழுக்க போன் பேசிக்கிட்டே இருந்தாங்க சித்து என்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் அவரது தோழியும், சின்னத்திரை நடிகையுமான சரண்யா துராடி.

தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை கேரக்டரில் நடித்த விஜே சித்ரா மரணம்தான் இன்ஸ்டாகிராம் முதல் பல்வேறு சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவலாக பரவி வருகிறது.

அதுவும் அவருடைய ரசிகர்களும் உறவினர்களும் அதிர்ச்சியில் இருக்கும்போது அவருடன் கடைசியாக வீடியோ எடுத்து வெளியிட்ட சரண்யா துரோடி தற்போது நேற்று என்ன நடந்தது என்பதை வெளியிட்டிருக்கிறார்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

இந்த வீடியோக்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் அவர் நாங்கள் எவ்வளவுதான் நெருங்கிய தோழியாக இருந்தாலும் அவர் தன்னுடைய பர்சனல் விஷயங்களை அந்த அளவிற்கு யாரிடமும் ஷேர் பண்ண வில்லை .அதனால் எனக்கு ரொம்ப தெரியவில்லை.

எதுவும் பேசிக்கலை

எதுவும் பேசிக்கலை

சித்துவின் வருங்கால மாமியார் அவரை நன்றாக பார்த்துக் கொள்வதாக மட்டும் கூறியிருக்கிறார். அதையும் நேற்றுதான் சரண்யாவிடம் கூறியிருந்தாராம் . அழகான டிரஸ் போட்டுக்கிட்டு விதவிதமாக போட்டோக்களையும் வீடியோக்களையும் எடுக்கும் இவர் நேற்று எந்த வீடியோக்களையும் எடுக்கவில்லையாம்.

வீடியோ எதுவும் போடலை

வீடியோ எதுவும் போடலை

எப்பவுமே ஷூட்டிங் போய்ட்டு வந்தாலே இன்ஸ்டாகிராமில் பத்துக்கும் மேற்பட்ட ஸ்டோரிஸ் போடும் இவர் நேற்று எந்த ஸ்டோரிஸுமே போடவில்லை. அவர் அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து தான் நான் அவரை வம்புக்கு இழுத்து வீடியோ எடுத்தேன் .அதையும் என்னுடைய இன்ஸ்டாகிராமில் நான் போஸ்ட் பண்ணின பிறகு தான் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராமில் ரிபோஸ்ட் பண்ணியிருக்கிறார்.

வந்த சந்தேகம்

வந்த சந்தேகம்

எப்போதுமே இந்த மாதிரி ரிபோஸ்ட் அவர் பண்ணுவது இல்லையாம். ஆனால் அதுதான் அவர் கடைசியாகப் போட்ட போஸ்ட்டாக இருந்திருக்கிறது .தேவதை போல சுற்றிக் கொண்டிருந்த இவர் வீடியோக்களை எடுக்காதது இன்றுதான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது .ஆனால் நேற்று முன்தினம் கூட சித்து நாளைக்கு நிறைய வீடியோக்கள் எடுக்க வேண்டும் என்று பிளான் போட்டிருக்கிறார்.

பார்ட்டி வைப்பேன்

பார்ட்டி வைப்பேன்

ஆனாலும் அவருடைய காதல் திருமணத்தை பற்றி எங்களிடம் எதுவுமே பேசவில்லை நேற்று. ஆனால் எல்லோருக்கும் பேச்சிலர் பார்ட்டி என்று கூறியிருக்கிறார் .அதற்கு சரண்யாவும் அது தான் கல்யாணமே முடிச்சாச்சு என்று கிண்டல் பண்ணுனதற்கு இருந்தாலும் ஊர் அறிய கல்யாணம் பண்ணனும் இல்ல. அதுக்கு முன்னாடி பேச்சிலர் பார்ட்டி கண்டிப்பாக வைப்பேன் என்று கூறியிருக்கிறார்.

திருமணமானதை சொல்லலை

திருமணமானதை சொல்லலை

அதுமட்டுமல்லாமல் இவரது எங்கேஜ்மெண்ட் சமயத்தில் கூட இவர்களிடம் எதுவும் இவர் கூறவில்லையாம். இன்ஸ்டாகிராமில் எங்கேஜ்மெண்ட் அன்று சித்துவின் போஸ்ட் பார்த்து தான் தெரிந்திருக்கிறது. அது போலத்தான் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணினதையும் யாரிடமும் சொல்லாமல் இருந்திருக்கிறார் .இது எதற்காக என்று யாருக்கும் தெரியாது என்றும் கூறியிருக்கிறார்.

என்னால் நம்ப முடியலை

என்னால் நம்ப முடியலை

காலையில் டிவியிலிருந்து தான் உங்களுடைய பிரண்டு சூசைட் அட்டென்ட் பண்ணி இருக்கிறார்கள் என்று சரண்யாவிற்கு கால் வந்து இருக்கிறது . அதற்கு சரண்யாவும் கண்டிப்பாக சித்து வாக இருக்க முடியாது. இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தான் பார்த்துவிட்டு வந்தோம் என்று கூறி இருக்கிறார். ஆனால் செய்திகளில் அவரது போட்டோக்களை பார்த்த பிறகுதான் இவர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார். ஆனாலும் இப்ப வரைக்கும் இவருடைய இறப்பை நம்ப முடியவில்லை ஒரு கனவு போலத்தான் இருந்துகொண்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+