கிணத்திலிருந்து அவ வெளியில வந்துட்டா.. வெள்ளை புடவை... விரித்து போட்ட தலை முடி...!
சென்னை: சன் டிவியின் அருந்ததி சீரியல் திகில் சீரியல்களில் சற்று வித்தியாசமாகதான் இருக்கிறது.
வழக்கமா திகில் சீரியல் அல்லது பேய் துஷ்ட ஆன்மா சீரியல்களில் அம்மன்தான் காக்கும் கடவுளாக காண்பிக்கப்படுவாள்.
இதில் தமிழ் கடவுள் அழகன் முருகன் துஷ்ட ஆவிகளிடம் இருந்து காக்கும் கடவுளாக இருக்கார். அருந்ததி சீரியலுக்கு எந்த டைட்டில் சாங்குமில்லை.

அருந்ததி
அருந்ததியின் ட்ரேட் மார்க்ன்னு சொன்னா ரெண்டு கண்ணு மட்டும்தான். அருந்ததின்னு ஒரு குரல் அவ்ளோதான்...எந்த டைட்டில் சாங்கும் இல்லாமல் சீரியல் தொடங்குது.

தெய்வானை
கிணற்றில் இருந்து வெளியில் வந்து ஒரு கை ஈஸ்வரி அம்மா பையனை இழுத்துக்கிச்சே ...அந்த கை தெய்வானை கிணத்துல குதிச்சத்தும் அவளோட ஓம் முருகா டாலரை பார்த்து விட்டுருச்சு.

சண்முகத்தை
சண்முகத்தை தன்னுடன் சேர்த்து கயித்துல கட்டி இருக்க, சுற்றி இருந்த ஆட்கள் வந்து கயித்தை இழுக்கறாங்க. ஷண்முகத்தை காப்பாத்தின தெய்வானை அவனுடன் மேலே வர்றா.

ஆவிக்கு விடுதலை
கிணத்துல ஒம் முருகா டாலருடன் தெய்வானை குதிச்சதால துஷ்ட ஆவி விடுதலையாகி வெளியில வந்துருது. முருகன் அங்கு இருக்கும்போது அதுக்கு வேலை இல்லைதானே.

ஈஸ்வரி அம்மா
ஈஸ்வரி அம்மாவும் தன் பிள்ளை கிணத்துல விழுந்ததை அறிஞ்சு அங்க வந்துடறாங்க. பிள்ளையை காப்பாத்தினது தெய்வானைதான்னு தெரிஞ்சுருது அவங்களுக்கு.

பொண்ணுக்கு காப்பு
ஷண்முகம் அமெரிக்காவில் தான் காதலிச்ச பொண்ணை கல்யாணம் செய்துக்க அழைச்சுக்கிட்டு வந்திருக்கான். அவளுக்கும் கைகையில் குடும்ப காப்பை போட்டு விடறாங்க ஈஸ்வரி அம்மா.

காப்பை நக்கல்
காப்பை பார்த்து நக்கல் செய்து சிரிக்கறா அந்த பொண்ணு. விளையாட்டாய் அவள் காப்பை கையில் வைத்து விளையாட, கதவு படபடன்னு அடிச்சுக்குது. காத்து உய்னு வேகமா அடிக்குது. பார்த்தா இவ கையில காப்பு அணியலை.

சமாதானம்
ஈஸ்வரி அம்மா சமாதானம் செய்து அந்த காப்பை மீண்டும் அணிவிச்சு விடறாங்க.நாளைக்கு நடக்கற நிச்சயதார்த்தத்தில் தெய்வானையும் கலந்துக்கணும். அவளை அழைச்சுட்டு வர ஏற்பாடு பண்ணுப்பான்னு சொல்றாங்க. அவளுக்கு உதவி செய்யவா பெரியம்மான்னு கேட்க, இல்லை அவ உதவிதான் நமக்கு தேவைப்படுதுன்னு சொல்றாங்க.

காதல்
தெய்வானைக்கு ஷண்முகத்தின் மேல காதல்..அவளை வளர்த்த பாட்டி, சுற்றி இருக்கும் குழந்தைகள் உன் ஆளுக்கு நிச்சயதார்த்தம் நீ போகப் போறியான்னு கேட்கறாங்க.

நான் எங்கே
அவர் எங்கே நான் எங்கே.. எனக்கு அது தெரியும். நான்மட்டும்தான் காதலிக்கறேன்.. அவர் எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும்னு சொல்றா.

ஆவி கிளம்பிருச்சு
இந்த சமயத்துல கினத்துலேர்ந்து புறப்பட்ட வெள்ளை புடவைக்காரி ஈஸ்வரி அம்மாவின் வீட்டு கேட்டை திறந்து ஈரப்புடவையுடன் நிக்குது.
என்ன நடக்குமோ...பார்க்கலாம்...
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications