வீல் சேரில் ஷில்பா ஷெட்டி.. இன்ஸ்டா பதிவால் ரசிகர்கள் அதிர்ச்சி.. ஏன் என்னாச்சு?
மும்பை: பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி வெப் சீரிஸில் சண்டை காட்சியில் டூப் போடாமல் நடித்த போது கால் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாச வீடியோ எடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இது குறித்து ஷில்பா ஷெட்டியிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ராஜ் குந்த்ரா அண்மையில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனால் ஷில்பா ஷெட்டி தனது கரியரில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தற்போது வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

வெப் சீரிஸ்
புதிதாக இந்தியன் போலீஸ் போர்ஸ் எனும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார். இந்த தொடரை இயக்குநர் ரோஹித் ஷெட்டி காப்யுனிவர்ஸின் ஓர் அங்கமாக இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பின் போது ஷில்பா ஷெட்டிக்கு கால் எலும்பு முறிந்துள்ளது. வீல் சேரில் அமர்ந்திருக்கும் படியான புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார்.

இன்ஸ்டாகிராம்
இதுதொடர்பாக ஷில்பா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: அவர்கள் ரோல் கேமரா ஆக்ஷன் என்றார்கள். ஷூட்டிங்கில் பிரேக் ஏ லெக் என்றார்கள். ஆனால் நான் உண்மையிலேயே காலை உடைத்துக் கொண்டேன். 6 வாரங்களுக்கு என்னால் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியாது.

வலிமை
மீண்டும் வலிமையுடன் திரும்பி வருவேன். உங்கள் பிரார்த்தனைகள் எனக்கு தேவை என ஷில்பா ஷெட்டி அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். அவருக்கு ரசிகர்களும் பாலிவுட் பிரபலங்களும் ஷில்பாவுக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள். இந்த வெப் சீரிஸில் சித்தார்த் மல்ஹோத்ரா, விவேக் ஓபராய், ஈஷா தல்வார் போன்றோர் நடித்துள்ளனர்.

அமேசான் பிரைம்
இந்த வெப் சீரிஸ் அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. ஷில்பா ஷெட்டி இந்த வெப் சீரிஸ் தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதமே அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அவரது கணவர் குந்த்ரா ஆபாச வீடியோ வழக்கில் சிக்கியிருந்தார். அவர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வரும் எந்த படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். இப்போது முழு வீச்சில ஷூட்டிங்கில் கலந்து கொண்டு வேகவேகமாக முடித்து வருகிறார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications