ஆத்தாடி.. குச்சிய வச்சு இப்படி குத்திருச்சே.. பதற வச்ச ஷிவாங்கி!
சென்னை: கையில் கம்போடு சுத்தோ சுத்து ௭ன சுத்தி பக்கத்துல இருக்கவங்களை கதிகலங்க வைத்த ஷிவாங்கியைப் பார்த்து வயிறு குலுங்கச் சிரிக்கிறார்கள் ரசிகர்கள்.
செய்வதையும் செய்து விட்டு ஒன்றும் தெரியாத பிள்ளை மாதிரி இருக்கிற முகத்தை எங்க தான் வாங்கி இருக்கிறாறோ தெரியவில்லை என அவருடைய ரசிகர்கள் உருகுகின்றன்றனர்.
குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியின் லேட்டஸ்ட் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கோமாளி புகழ் ஷிவாங்கி
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிவடைந்து விட்டது என அந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் பீல் பண்ணி இருக்கும் போது அதில் கலந்து கொண்ட ஷிவாங்கியை பல பேர் மிஸ் பண்ணி கொண்டு இருந்தனர் .ஆனால் நான் எங்கும் போய்விடவில்லை இங்கேதான் சுற்றிக் கொண்டிருக்கின்றேன் ௭ன சூட்டிங் ஸ்பாட்டில் ரகளை செய்தும் சிவானியின் வீடியோக்களை அவருடைய ரசிகர்களும் அடிக்கடி பதிவிட்டு வருகின்றனர் .

சேட்டை ஜாஸ்தி
அந்த மாதிரி இவர் சூட்டிங் ஸ்பாட்டில் செய்த சேட்டை ஆன சிலம்பம் சுற்றும் வீடியோஸ்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாக பரவி வருகிறது .இந்த நிகழ்ச்சியில் பலர் கலந்துகொண்டு இருந்தாலும் ஷிவாங்கியின் க்யூட்டான எக்ஸ்பிரஷனையும் அழகான பாட்டு திறமையும் அடிக்க யாராலும் முடியாது என இவருடைய ரசிகர்கள் கூறிவருகின்றனர் .

இன்னொசன்ஸ்
இவருக்கு சமூக வலைத்தளங்களில் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுவாரஸ்யத்திற்கு இவரும் ஒரு பெரிய காரணம் தான் இவர் அஸ்வினுக்கு ஜோடியாக சேர்ந்துகொண்டு செய்யும் காதல் சேட்டைகள் ஆக இருந்தாலும் சரி புகழுடன் சேர்ந்து செய்யும் அண்ணன் தங்கச்சி பாசமாக இருந்தாலும் சரி இரண்டிலுமே இவரை அடிச்சிக்கவே முடியாது .

துருதுரு சேட்டை
அந்த அளவிற்கு தன்னுடைய துருதுருன்னு சேட்டைகளால் பலபேர் மனதில் நல்ல இடத்தில் இருந்து வருகிறார் .இந்த நிகழ்ச்சிக்கு முன்பாக இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கரில் கலந்துகொண்டு இசைத்துறையில் தனது திறமையை நிரூபிக்க வேண்டும் என இவர் களமிறங்கி இருந்தாலும் அதில் தெரியாத இவருடைய திறமை தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலமாக தான் வெளியே வந்திருக்கிறது .

அதிக ரசிகர்கள்
இந்த நிகழ்ச்சியிலிருந்து இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும் ரசிகர்கள் உருவாகி விட்டனர் . அதிலும் குழந்தைகளுக்கு இவர்தான் ஃபேவரைட் டாக இருந்து வருகிறார் .இவரும் ஒரு குழந்தை போல தான் பல பேர் மனதில் ஜொலித்து வருகிறார். என்னதான் நெட்டிசன்கள் இவரை காலாய்த்தாலும் இவரை பாப்பா என்று தான் அனைவரும் அழைத்து வருகின்றனர்.

கம்புடன் சிலம்பம்
ஆனாலும் இந்த சுட்டிக்குழந்தை பாப்பா தற்போது சூட்டிங் ஸ்பாட்டில் கையில் கம்போடு சிலம்பம் சுற்றுகிறேன் என்கிற பெயரில் பக்கத்தில் இருப்பவர்களின் மண்டையை பதம் பார்த்துவிட்டு நீங்க ஏன் நடுவில் இங்க வந்தீங்க என அடாவடியாக பேசியிரப்பது பார்த்ததும் அனைவரும் வயிறு வலிக்க சிரித்து வருகின்றனர் .இவருடைய செல்லமான சேட்டைகளால் தான் பலபேர் மனக்கவலைகளை தீர்க்க முடிகிறது என கூறியிருக்கின்றனர்.

விரைவில் வாங்க
ஆனாலும் இந்த நிகழ்ச்சி மீண்டும் எப்போது தொடங்கும் என ஆவலாக ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கும் நிலையில் அதுவரைக்கும் இந்த மாதிரி ஜாலியான வீடியோக்களை போட்டுக் கொண்டு இருங்கள் எனவும் கூறி வருகின்றனர். ஷிவாங்கியை கம்பைப் பிடிச்சு சுத்துனா பக்கத்துல நிக்காதீங்க.. கொஞ்சம் தள்ளிப் போயிருங்க.. சேப்டிக்குத்தான் சொல்றோம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications