Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஷிவானியின் அழகுக்குக் காரணம் இது தானாம்...உற்றுப் பார்த்து ரசிக்கும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை : தன்னோட பளபளக்கும் அழகுக்கு கையில் இருக்கும், இதுதான் காரணம் என்று தூக்கி காட்டிய ஷிவானியை பார்த்து ரசிகர்கள் புல்லரித்துப் போய்விட்டார்களாம்.

சின்னத்திரையில் நடித்து விட்டு தற்போது வெள்ளித்திரைக்கு காலடி எடுத்து வைத்திருக்கும் ஷிவானிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கலக்கலான அழகால் புன்னகை சிந்தியபடி ரசிகர்களை சொக்க வைத்து விட்டாரே ஷிவானி என்று ரசிகர்களின் கூக்குரல் இன்ஸ்டாகிராமில் தெறிக்க விடுகிறது.

ரசிகர்களின் அன்பு பெருசுதான்

ரசிகர்களின் அன்பு பெருசுதான்

சின்னத்திரையிலேயே இவர் பின்னாடி இத்தனை ரசிகர்கள் கூட்டம் சுற்றிக் கொண்டிருக்கும் போது இனி வெள்ளித்திரைக்கு போனால் அதற்கு அழகை மெருகேற்ற வேண்டாமா என்று தன்னுடைய அழகு சீக்ரெட்டை ஷிவானி வெளியே சொல்லி விட்டார். இவர் புதிய படத்தில் நடிக்கப்போகிறார் என்ற அறிவிப்பை இன்ஸ்டாகிராமில் இன்று அவருடைய ரசிகர்களின் கேள்விக்கு பதிலாக கூறிவிட்டார். ஆனால் இவர் எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்பதை மட்டும் சொல்லவில்லை இதனால் இவருடைய ரசிகர்கள் இவர் எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்று ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தற்போது இவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து கொஞ்சம் சொக்கி போய்விட்டார்களாம்.

கையில் அது என்ன

கையில் அது என்ன

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலின் மூலம் சீரியலில் காலடி எடுத்து வைத்த ஷிவானி தற்போது சமூக வலைத்தளத்தில் ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார். வெள்ளித்திரை கதாநாயகிகளில் டாப்பில் இருக்கும் கதாநாயகிகளின் ரேஞ்சில் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரசிகர்களின் பேராதரவினால் தற்போது சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றுவிட்டார். தற்போது இவர் வெள்ளித்திரையில் நடிக்க ஆரம்பித்து விட்டார் என்று தெரிந்ததுமே சந்தோஷத்தில் கொந்தளிக்கும் அவருடைய ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது தன்னுடைய அழகான செல்பி போட்டோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார். இதைப் பார்த்து அசந்து போன ரசிகர்களின் கைகள் ஆட்டோமேட்டிக்காக கமெண்ட் களில் ஹாட்டின்களை பறக்க விடுகிறது. அதுமட்டுமல்லாமல் லைக்களும் சும்மா தெரிக்கிறது.

அலைப்பாயும் ரசிகர்களின் மனது

அலைப்பாயும் ரசிகர்களின் மனது

ரசிகர்கள் ஒரு பக்கம் ஷிவானி வெள்ளித்திரைக்கு செல்வதை நினைத்து சந்தோசப் பட்டாலும் நெட்டிசன்கள் கொஞ்சம் மனதளவில் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் போல அவர்களுடைய கமெண்ட்களிலே தெரிகிறது,அவர்களின் பாதிப்பு. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சென்ற பிறகுதான் ஷிவானி முன்பு மாதிரி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட வில்லை என்று சிலர் பதறிக் கொண்டிருக்கும் நேரத்தில் இவர் வெள்ளித்திரைக்கு சென்றால் அப்போ சுத்தமா ரசிகர்களை மறந்துவிடுவாரா? என்று இப்போவே பீல் பண்ண ஆரம்பித்துவிட்டனர். இவர் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது கூட சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், டுவிட்டரில் ஆக்டிவாக போஸ்ட் போட்டுக்கொண்டிருந்தார். அதுவும் நான்கு மணிக்கு இவர் போஸ்ட் போடுவதை பார்ப்பதற்காகவே ஒரு கூட்டம் சமூகவலைத்தளத்தில் சுற்றிக் கொண்டே இருக்கும். விதவிதமாக இவர் போடும் போஸ்ட் பார்த்து வெட்டியாக இருப்பவர்கள் மட்டுமல்லாமல் வேலையில் இருப்பவர்களும் உடனுக்குடன் கமெண்ட்டுகளை கொட்டிக் கொண்டிருந்தனர்.

ஏங்கி போன மனது

ஏங்கி போன மனது

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு இவர் போஸ்ட் போடுவதை குறைத்துக்கொண்டு உடற்பயிற்சியில் அதிதீவிரம் காட்ட ஆரம்பித்து விட்டார். இவர் உடல் எடையை குறைத்து அழகாக மாறி இருப்பதை பார்த்து சந்தோஷமாக இருந்தாலும் இவர் போஸ்ட் போடவில்லையே என்று தான் பல பேருக்கு வருத்தமாக இருந்து கொண்டிருக்கிறதாம். அதனாலேயே மீண்டும் எங்களைவிட்டு வெள்ளித்திரைக்கு போய்விட்டாலும் பழைய மாதிரியே போஸ்ட் போட்டு கொண்டே இருங்கள் என்று அன்பு கட்டளை களையும் விடுகின்றனர். இதேபோலத்தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு அவரிடம் அவருடைய ரசிகர்கள் நீங்கள் நூறு போட்டோக்களை எடுத்து உங்கள் அட்மினிடம் கொடுத்து விட்டு சென்று விடுங்கள், தினமும் 4 மணிக்கு அவரை போஸ்ட் போட சொல்லி விடுங்கள் என்று குறிப்பிட்டிருந்தனர். அதேபோல ஷிவானியும் பல போட்டோக்களை எடுத்து கொடுத்து விட்டு சொல்ல வேண்டியதை எல்லாம் சொல்லிவிட்டு தான் சென்றிருப்பார் போல. பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போதும் ஷிவானியின் இன்ஸ்டாகிராம் ஐடியிலிருந்து சுட சுட ஷிவானியின் சூடான போட்டோஸ்கள் வந்துகொண்டுதான் இருந்தது.

சந்தோசமான செய்தி தன்

சந்தோசமான செய்தி தன்

கொஞ்ச நாட்களுக்குப் பிறகு தற்போது ஒரு சில நாட்களாக ஷிவானியும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக போஸ்ட் போட ஆரம்பித்துவிட்டார். இது அவருடைய ரசிகர்களுக்கு சந்தோசமாக இருந்தாலும் தற்போது இவர் கமல் நடிக்கும் விக்ரம் திரைப்படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கப் போகிறார் என்ற செய்தி பரவி வருகிறது. இதை கேட்டு இவருடைய ரசிகர்கள் ஒரு பக்கம் சந்தோசம், மறு பக்கம் சிறிது பீலிங்காக இருக்கின்றனர். மீண்டும் தங்களை கண்டுக்காம போய்விடுவாரோ என்று தான் பலர் புலம்பி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் இன்று இவருடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரில் ரசிகர்கள் பலர் இவரிடம் கேள்விகளை குவித்திருக்கிறார்கள். அதில் ஒரு சில கேள்விகளுக்கு மட்டும் பதில் கூறி பதிவிட்டிருக்கிறார். இதுவரைக்கும் தனக்கு கமெண்டுகளை பதிவிடும் ரசிகர்களுக்கு பதிலளிக்காமல் இருந்த ஷிவானி, தற்போது இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியில் பதில் அளித்திருப்பது அவருடைய ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் ஜாலியாகவும் இருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+