Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அந்த "சேர்" என்ன புண்ணியம் பண்ணுச்சோ.. ஷிவானியைப் பார்த்து உச்சு கொட்டும் ரசிகர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இணையதளத்தில் படு டாப் ல இருக்கிற டிவி நடிகைகளில் ஷிவானி யும் ஒருவர். இவர் சினிமாக்களில் நடிக்கும் நடிகைகளை விடவும் கவர்ச்சி புயலாக உருமாறி வந்திருக்கிறார்.

Recommended Video

    Shivani, Darshan, Reshma Trends of Lockdown • Motta Maadi Photoshoot

    தினம் தினம் இவருக்கு ரசிகர்கள் அதிகரிச்சுட்டே போய்க்கிட்டு இருக்கும் போது இவரை பார்த்து உருகி உருகி கவிதைகளாக வழிந்தோடிக் கொண்டிருக்கும் கமெண்டுகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

    சின்னத்திரையில் அறிமுகமாகி ரியாலிட்டி ஷோக்களில் நடனத்தால் ரசிகர்களை கவர்ந்து இழுத்தவர் ஷிவானி. ஆனால் இதிலெல்லாம் கிடைக்காத பெயரும் புகழும் இணையதளத்தில் இப்போது இவருக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.

    ரசிகர்கள் கூட்டம்

    ரசிகர்கள் கூட்டம்

    நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகரிக்க அதிகரிக்க இவரின் கவர்ச்சியும் கூடிக்கொண்டே இருக்கிறது. பகல் நிலவு சீரியலில் அறிமுகமாகும்போது புசுபுசுன்னு பப்ளிமாஸ் மாதிரி இருந்தார். ஆனால் தற்போது சிக்குனு நயன்தாரா ரேஞ்சுக்கு இறங்கி இருக்கிறார். இவர் தினமும் இணையதளத்தில் சரியாக 4 மணிக்கு போஸ்ட் போட்டு என்டர் ஆகி விடுகிறார்.

    டான்னு மணி அடிச்சதும்

    டான்னு மணி அடிச்சதும்

    இதனால் அவரது ரசிகர்கள் நாலு மணி எப்போது ஆகும் இன்னைக்கு எப்படி எல்லாம் ஃபோட்டோ போடுவாரோ என்று கற்பனையோடு அப்பப்ப வந்து இன்ஸ்டாகிராமில் பார்த்துட்டு பார்த்துட்டு போயிட்டு இருக்காங்க. நாலு மணிக்கு இவர் போஸ்ட் போட்டதும் போட்டி போட்டுக்கொண்டு கமெண்டுகளும் வந்து குவிகிறது. தினமும் விதவிதமாக உடையணிந்து இவர் போடும் போட்டோஸ்கள் வைரலாக இணைய தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

    குவித்து விடுகிறார்கள் கமெண்ட்டுகளை

    குவித்து விடுகிறார்கள் கமெண்ட்டுகளை

    இவருடைய ரசிகர்கள் இவரது போட்டோவுக்காக காத்துக் கொண்டிருப்பது போல பல நெட்டிசன்கள் இவரது போட்டோக்களுக்கு கமெண்ட் போடவும் காத்துக்கொண்டிருக்கிறார்கள். இவர் போஸ்ட் போட்டதும் அந்த போட்டோவை வைத்து ட்ரோல் பண்ணி வீடியோவையும் போட்டோக்களில் மீம்ஸ்களையும் போட்டு இணைய தளத்தில் பதிவிட்டு விடுகிறார்கள். இந்த மீம்ஸ் களும்கூட வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.

    செம பாப்புலர்

    செம பாப்புலர்

    இதை அறிந்தும் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தன்னுடைய வேலையில் பிசியாக போட்டோஷூட் நடத்திக்கொண்டிருக்கிறார். முன்னாடி டிக்டாக்கில் ஒரே டான்ஸ் மழையா தான் இருந்தது. ஆனால் தற்போது அதை நிறுத்தி விட்டதால் யூடியூப் களிலும் வீடியோ எடுத்து போட்டு வருகிறார். இவரைப்பற்றி போடும் வீடியோக்களும் கூட லட்சங்களைத் தாண்டி வியூஸ் போய்க் கொண்டிருக்கிறதாம். அந்தளவுக்கு பாப்புலராகி கொண்டிருக்கிறார் ஷிவானி.

    ஹீரோயின் ஆக வேண்டும்

    ஹீரோயின் ஆக வேண்டும்

    இருந்தாலும் இவருக்கு இது போதாதாம். சினிமாவில் கதாநாயகியாக ஜொலிக்க வேண்டும் என்பதுதான் இவரது ஆசையாம். கதாநாயகி வாய்ப்புக்காக தான் இந்த அளவிற்கு படுபயங்கரமாக போட்டோஷூட் நடத்திக் கொண்டிருக்கிறார் என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள். இப்ப போட்டிருக்கும் இவரோட போட்டோஸ் இணையதளத்தில் வைரலாக பரவிக் கொண்டு வருகிறது. அதில் அவர் சேரில் அமர்ந்தபடி ஒய்யாரமாக போஸ் கொடுத்திருக்கிறார்.

    கவிதை மழை

    கவிதை மழை

    அதிலும் அவர் உட்கார்ந்திருக்கிற அழகை பார்த்து ரசிகர்கள் பலர் அந்த சேராக நான் இருக்கக் கூடாதா என்று ஏங்கி கமெண்ட் போட்டிருக்கிறார்கள். பல நடிகைகள் இவருடன் போட்டி போட்டு இணையத்தளத்தில் இவரைப் போலவே போட்டோஸ்கள் போட்டாலும் இவர் போட்டியில் முதலாக வந்து கொண்டிருக்கிறார்.

    காண்டாகிக் கிடக்கும் மாமியார்கள்

    காண்டாகிக் கிடக்கும் மாமியார்கள்

    இவரது போட்டோக்களை பார்த்து பல இளைஞர்கள் தூக்கத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த அளவிற்கு ரசிகர்களை கிறங்க வைத்து இருக்கிறார். சீரியல்களில் இவரை பார்த்த குடும்பத் தலைவிகள் இந்த மாதிரி மருமகள் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்பார்கள். ஆனால் தற்போது இளைஞர்கள் இவர் பின்னால் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். "மாமியார்கள்" எல்லாம் காண்டாகிக் கிடக்கிறார்களாம்!

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+