ஊஞ்சலில் ஆடும் இளமை.. சேலையி்ல ஜொலிக்கும் ஷிவானி.. பரபரக்கும் ரசிகர்கள்!
சென்னை: இன்ஸ்டாகிராம் பக்கத்தை திறந்தாலே ஷிவானியின் கலக்கல் அட்ரா சிட்டிதான்.. சும்மா கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது இவர் ஊஞ்சலில் கலக்கல் போஸ் கொடுத்து அவரது ரசிகர்களுக்கு பகல் நிலவாக ஜொலித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் பரபரப்பாக உலா வரும் இளம் நாயகிகளில் ஷிவானிக்கும் தனி இடம் உண்டு. டிவியில் அறிமுகமானாலும் வெள்ளித்திரையில் சூப்பர் ஹீரோயினாக வலம் வரக் கூடிய தகுதியுடன் காணப்படுகிறார் ஷிவானி.
உயரமும் அழகும் இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக அமைந்து இருக்கிறது. முதன்முதலில் பகல் நிலவு சீரியல் ஆடிஷனில் கலந்து கொள்ளும் போது நடிப்பதற்கு கொஞ்சமும் பயப்படதான் செய்திருக்கிறார். ஆனால் இவர் நடித்ததை பார்த்ததும் பகல் நிலவு டீமுக்கு இவரை பிடித்துவிட்டது. முதன் முதலில் சீரியலில் நடிக்கும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருந்து இருக்கிறார்.

நடிப்பும் படிப்பும்
அப்போது இவர் பிளஸ்டூ படித்துக் கொண்டிருந்தார். இதனால் படிப்பையும், நடிப்பையும் ஒன்றாக மெயின்டைன் பண்ணுவது ரொம்பவும் கஷ்டமாக இருந்திருக்கிறது. இருந்தாலும் ஸ்கூலில் இருந்தவர்களும் பெற்றோர்களும் நல்ல சப்போர்ட் செய்ததால், மட்டும்தான் இவரால் பாஸ் பண்ண முடிந்தது. ஆனால் இந்த சீரியலில் இவர் நடிக்கும் போது பலர் இவரை கிண்டல் பண்ணி இருக்கிறார்கள். ரொம்ப குண்டாக இருக்கிறீர்கள் என்று.

முயன்று மெலிந்தார்
அது இவருக்கு மனதில் ரொம்பவே பாதித்து இருக்கிறது. அதை தொடர்ந்து இவர் தீவிர உடற்பயிற்சியில் குதித்தார். சாப்பாட்டையும் கன்ட்ரோல் செய்தார். வாயைக் கட்டினார். விளைவு.. சிக்கென மாறி விட்டார். ஷிவானி காரைக்குடி பொண்ணாம். அங்குதான் பிறந்து வளர்ந்துள்ளார். அதன்பிறகு சென்னையில் குடியேறி இருக்கிறார்கள். அங்கு இவருடைய பாட்டி வீட்டுக்கு அடிக்கடி வருவார். இவருக்கு காரைக்குடியை விட சென்னைதான் ரொம்பப் பிடிக்குமாம்.

காரைக்குடியிலிருந்து சென்னைக்கு
இதன் காரணமாக குடும்பமே காரைக்குடியை விட்டு சென்னைக்கு ஷிப்ட் ஆகி விட்டது. தற்போது இவர் சென்னையில் தான் இருக்கிறார். வீட்டுக்கு இவர் ஒரே குழந்தை என்பதால் இவரை எல்லோரும் செல்லமாக பாப்பா என்று தான் இன்று வரையிலும் அழைப்பார்களாம். (ரசிகர்களும் கூட செல்லமாக இப்படித்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்களாம்).

ரியாலிட்டி ஷோ
பகல் நிலவு சீரியலைத் தொடர்ந்து இவர் ரியாலிட்டி ஷோக்களில் நாடனத்தில் பட்டைய கிளப்பியிருப்பார். இவருக்கு ஸ்கூல் படிக்கும்போதே டான்ஸில் நல்ல இன்டரஸ்ட் என்பதால் இவர் முறைப்படி நடனம் கற்றிருக்கிறார். அதைத் தொடர்ந்துதான் இவர் டப்ஸ்மாஷ்களில் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார். அதில் அடித்த பம்பர் பரிசு இன்று இணையதளத்தில் இவருக்காக பெரும் ஆர்மியே உருவாகும் அளவுக்குப் போய் விட்டது.

காதல் கிசுகிசு
அசீம் என்பவருடன் கலக்கல் டான்ஸ் ஆடியது விஜய் டிவியில் பெரும் ரசிகர் பட்டாளத்தை இவருக்கு வாங்கித் தந்தது. இந்த சீரியலில் இவருடன் நடித்த அசீம்க்கும் இவருக்கும் காதல் என்று பல செய்திகளும் கிசுகிசுக்களும் பரவி வந்த நிலையில் அவசர அவசரமாக மறுத்தார். அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். அதேபோல அசீமும் எனக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து சந்தோஷமாக போய்க்கொண்டிருக்கிறது. அதில் குட்டையைக் குழப்பாதீர்கள் என்று கூறியிருந்தார்.

நாயகியும் நானே வில்லியும் நானே
முதல் சீரியலில் பெரும் கிசுகிசுப்பு ஏற்பட்டாலும் இவர் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். பகல் நிலவு சீரியல் முடியும்போது இவர் ரொம்பவே கஷ்டமும் பட்டிருக்கிறார் .ஆனால் அதை தொடர்ந்து இரட்டை ரோஜா சீரியல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் கதையை கேட்டு இவர் உடனே சம்மதம் சொல்லி புக் ஆனார். இதில் வில்லியும் இவரே நாயகியும் இவரே..

பாடிய வாயும் சும்மா இருக்காது
ஆனால் தற்போது இந்த சீரியலை விட்டு இவர் விலகி விட்டார். இருந்தாலும் ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காதுல்லியா.. எனவே போட்டோக்களாகப் போட்டு ரசிகர்களுடன் டச்சிலேயே இருந்து வருகிறார். ரசிகர்களும் இவரை விடாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். பேஸ்புக் , டிவிட்டர், இன்ஸ்டா என செம பிசியாக இருக்கிறார் ஷிவானி. ஷிவானியின் புகைப்படங்கள் ரசிகர்களுக்கு தினசரி அல்வா சாப்பிடுவது போல.. காத்திருந்து வேட்டையாடுகிறார்கள்.

ரசிகர் கூட்டம்
சீரியலில் இவருக்கு இருக்கும் ரசிகர்களை காட்டிலும் இணையதளத்தில் இவருக்கு அதிகமாக ரசிகர்கள் இருக்கிறார்கள். இன்ஸ்டாகிராமில் இவர் நேரம் தவறாமல் போடும் போஸ்டர்களும் இவருக்கு ரசிகர்களை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. பல ரசிகர்கள் இவரை நாக மோகினி சீரியலில் வரும் நடிகையை போலவே இருக்கிறார் என்றும் பல ரசிகர்கள் இவரை சமந்தாவின் சாயலில் இருக்கிறார் என்றும் கூறுகின்றார்கள்

சமந்தா போல ஆக வேண்டும்
இவருக்கு இவர்கள் இருவருமே ரொம்பவும் பிடித்தவர்களாம். இவர்களைப் போலவே சினிமாவில் பட்டையைக் கிளப்ப வேண்டும் என்பதுதான் எனது ஆசை. என்னுடைய சினிமா வாழ்க்கையில் சீக்கிரமாக நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக தான் சின்னத்திரையில் இருந்து இவர் வெளி வந்து இருக்கிறார் என்றும் பல செய்திகள் வெளியாகி வருகின்றன. நாளுக்குநாள் இவரின் கவர்ச்சி களேபரத்துக்கு அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப விதவிதமாக போஸ் கொடுத்து ரசிகர்களை உசுப்பேற்றி வருகிறார்.

ரசிகர்களை கலக்க வேண்டும்
கலாச்சார உடை என்றாலும் சரி மாடல் உடை என்றாலும் சரி தன்னால் செமையாக கலக்க முடியும் என்று ரசிகர்கள் அனைவரும் இவரை திரும்பிப் பார்க்கும் அளவிற்கு இவர் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டு வருகிறார் . ஒரு சேரில் அமர்ந்தபடி மேலே மட்டும் ஷர்ட் போட்டுகொண்டு கீழே பேண்ட் போடாமல் ஒய்யாரமாக அமர்ந்து கலக்கல் போஸ் கொடுத்திருக்கிறார். இதை பார்த்து ரசிகர்கள் ரசித்தும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள் .யார் என்ன சொன்னாலும் நான் இப்படித்தான் என்று சவால் விட்டு யாரையும் கண்டுக்காமல் தன்னுடைய வேலையை மட்டும் சிறப்பாக செய்து இன்ஸ்டாகிராமில் அலற விட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications