சந்திரலேகா ஸ்வேதா பந்தேகர் வீட்டில விஷேசங்க..கண் கலங்க கணவருக்கு கொடுத்த ஸ்வீட் சர்ப்ரைஸ்
சென்னை: தான் கர்ப்பமாக இருப்பதை கண் கலங்க சந்தோஷத்துடன் கணவரிடம் பகிர்ந்துள்ளார் சின்னத்திரை நடிகை ஸ்வேதா பந்தேகர் ..மனைவியின் அச்சத்தை போக்க நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்தியிருக்கிறார் கணவர் மால்முருகன். சந்திரலேகா சீரியலில் நடித்த ஸ்வேதா தான் தாயான விசயத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் பலரும் வாழ்த்து கூறியுள்ளனர்.
சினிமாவில் நாயகியாக நடித்து சின்னத்திரைக்கு வந்தவர் ஸ்வேதா பந்தேகர். சன் டிவியில் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியல்தான் இவரை மக்கள் மத்தியில் அடையாளப்படுத்தியது. 8 ஆண்டுகளுக்கு மேல் 2000 எபிசோடுகளைத் தாண்டி ஒளிபரப்பானது சந்திரலேகா சீரியல்.
சில சீரியல்கள் எப்போது முடியும் என்று எதிர்பார்ப்பார்கள். ஆனால் தினம் தினம் ஒரு ட்விஸ்ட் உடன் ஒளிபரப்பான சந்திரலேகா சீரியலை பார்க்க தனி ரசிகர்கள் இருந்தனர். இந்த சீரியலில் சந்திரா என்ற கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்வேதா.

நடிகை ஸ்வேதா பந்தேகர்
பொறியியல் படிப்பை முடித்திருந்தாலும் மீடியா மீதான ஆர்வத்தில் விளம்பர படங்களில் நடித்தார். கடந்த 2007ஆம் ஆண்டு அஜீத் நடித்த ஆழ்வார் படத்தில் தங்கையாக நடிக்க ஸ்வேதாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து ஹீரோயின் வாய்ப்பும் வந்தது. 2008ஆம் ஆண்டு சத்யா நடிப்பில் வெளியான வள்ளுவன் வாசுகி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படம் பெரும் தோல்வியை தழுவியதால் நடிகை ஸ்வேதாவிற்கு அடுத்தடுத்து கதாநாயகி வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி துணை கதாபாத்திரத்தில் தொடர்ந்து வாய்ப்பை வந்தார்.

சந்திரலேகா டிவி சீரியல்
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். இதுவரை இவர் 9 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இறுதியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான 'பூலோகம்' படத்தில் நடித்திருந்தார். அதன் பின் இவர் சினிமாவில் வாய்ப்பு குறையவே கடந்த 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'மகள்' என்ற தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இதனையடுத்தே சந்திரலேகா சீரியலில் ஹீரோயின் ஆக நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த சீரியலில் தான் தாயாக வேண்டும் என்று ஆசைப்படுவார். கர்ப்பமான பின்னர் நிறைய பிரச்சினைகளை சந்திப்பார் ஸ்வேதா.

ஸ்வேதாவின் திருமணம்
ஸ்வேதாவிற்கு கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. சன் மியூஸிக் முன்னாள் தொகுப்பாளர் மால் முருகன் என்பவரை தான் இவர் காதலித்து கரம் பிடித்துள்ளார். இந்த ஜோடி சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் இணைந்து பங்கேற்றுள்ளனர்.

சூப்பர் ஜோடி
ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஜோடி நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து நடனமாடியுள்ளனர். பொங்கல் பண்டிகையை கண்டாங்கி புடவை கட்டி கிராமத்து பாணியில் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

கர்ப்பமான ஸ்வேதா
கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடந்த நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதை தனது கணவருக்கு சர்ப்ரைஸ் ஆக கூறியுள்ளார் கண் கலங்க சந்தோஷத்தை பகிர்ந்த சுவேதா..நெற்றியில் முத்தமிட்டு வாழ்த்திய கணவர் மால்முருகன். தாயாக வேண்டும் என்பது திருமணமான பல பெண்களின் கனவு. அந்த வரத்திற்காக பல பெண்கள் தவமிருக்கின்றனர். தனக்கு குழந்தை வரம் கிடைத்ததை கணவனிடம் கண் கலங்க கூறி ஆனந்த கண்ணீர் விட்டிருக்கிறார் ஸ்வேதா.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications