வீட்ல விசேஷம்.. கேக் வெட்டி மகிழ்ச்சி செய்தி பகிர்ந்த ஸ்ரேயா- சித்து தம்பதி.. குவியும் வாழ்த்து
சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வள்ளியின் வேலன் சீரியலில் நடித்து வரும் நிஜ தம்பதியான ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து ஜோடி இன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள் மகிழ்ச்சியாக கொண்டாடிய பிறந்தநாள் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்கள். இவர்களுக்கு ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
சின்னத்திரையில் காதலித்து திருமணம் செய்து கொண்ட பிரபலங்கள் ஏராளமானோர் இருக்கிறார்கள். அந்த வரிசையில் நடிகை ஸ்ரேயா அஞ்சன் மற்றும் சித்து பலருக்கும் பரீட்சயமானவர்கள் தான். இவர்கள் இருவரும் ரசிகர்களுக்கு பிரபலமானது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பான திருமணம் என்ற சீரியல் மூலமாக தான்.

முதல் சீரியலில் ஒன்றாக நடித்து பிறகு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்திற்கு பிறகு சித்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி 2 சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்தார். அதுபோல ஜீ தமிழில் ஒளிபரப்பான ரஜினி சீரியலில் ஸ்ரேயா நடித்துக் கொண்டு வந்தார்.
பிறகு இருவர் நடித்த இரண்டு சீரியலும் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து சில மாதங்களாக இவர்கள் இருவரும் எந்த சீரியலிலும் நடிக்காமல் இருந்தனர். அந்த நேரத்தில் தான் ஜீ தமிழில் இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடியாக நடிக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதாவது வள்ளியின் வேலன் என்ற சீரியலில் இவர்கள் இருவரும் கதாநாயகன், கதாநாயகியாக நடித்து வருகிறார்கள்.

ரஞ்சித் வெளியே செல்லும்போது பிக் பாஸ் கொடுத்த மறக்க முடியாத கிப்ட்.. இது வேற லெவலில் இருக்கே!
இவர்கள் இருவருக்கும் அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். சீரியலில் இவர்கள் ரீல் காதலர்களாக இருந்தாலும் நிஜத்தில் இவர்கள் ரியல் காதலர்கள். திருமணத்திற்கு பிறகு பல இடங்களுக்கு அடிக்கடி சுற்றுலா செல்லும் இவர்கள் அங்கு எடுக்கும் புகைப்படங்களை தன்னுடைய ரசிகர்களோடு பகிர்ந்து வருவது வாடிக்கை.

இந்த நிலையில் இன்று சித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டு இருக்கிறார். அதில் தன்னுடைய காதல் மனைவியான ஸ்ரேயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார். அதில், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் பொண்டாட்டி.. நீங்கள் செய்யும் விந்தையை இந்த பூமியில் உள்ள யாராலும் உணர முடியாது.
வாழ்க்கை எனக்கு வழங்கிய மிக அழகான பரிசு நீங்கள். எல்லா வகையிலும் நீங்கள் என்னை பூர்த்தி செய்வீர்கள். உங்கள் பிறந்த நாள் உங்களைப் போல அற்புதமாக இருக்கட்டும். என்னிடம் உள்ள எல்லாவற்றிலும் நான் எப்போதும் உன்னை நேசிப்பேன் என்று போஸ்ட் போட்டு இருக்கிறார். அதற்கு ஸ்ரேயா "நன்றி புருஷா.. லவ் யூ" என்று கூறியிருக்கிறார்.

இந்த போஸ்டில் ஸ்ரேயாவிற்கு அதிகமான ரசிகர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். ஸ்ரேயாவின் பிறந்தநாளை துபாயில் சித்து கொண்டாடி இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications