கரையுது விஜயகாந்த் சொத்து.. ஆண்டாள் அழகர் காலேஜில் இப்படியா நிஜமா? வெளியே தெரியலியே.. கிரேட் கேப்டன்

Subscribe to Oneindia Tamil
சென்னை: அதேபோல, அரசியலுக்கு வந்தபிறகு சில சொத்துக்களை விற்றார் விஜயகாந்த்.. இதை அவரே சொல்லியிருக்கிறார்.. எப்படி, கல்லூரியில் சம்பாதிக்கவில்லையோ, அதுபோல, அரசியலிலும் விஜயகாந்த் எதையும் சம்பாதிக்கவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா கூறியிருக்கிறார்.. அத்துடன், விஜயகாந்தின் ஆண்டாள் அழகர் கல்லூரி குறித்தும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.
BBTCinema என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "கடந்த 2017-லிருந்தே விஜயகாந்த்துக்கு சிகிச்சை தரப்பட்டது. எனவே, குடும்பத்திலுள்ள பண நெருக்கடி பற்றி நமக்கு தெரியாது. ஆனால், ஆன்மா உலவக்கூடிய இடங்கள் என்று சில உள்ளன.. அந்தவகையில் விஜயகாந்த்தின் ஆன்மா, அவரது வீடு, நடிகர் சங்கம், கோயம்பேடு கல்யாண மண்டபம், ஆண்டாள் அழகர் கல்லூரி போன்ற இடங்களில் உலவும் என்றே நம்புகிறேன். அந்த கல்லூரியின் பெயரை கேட்டாலே, கொரோனா நேரத்தில் விஜயகாந்த் செய்த உதவிதான் கண்முன் வருகிறது.. கொரோனா உச்சத்திலிருந்தபோது, கடுமையான நெருக்கடி தமிழகத்துக்கு ஏற்பட்டது. பிணங்களை புதைப்பது என்பது சவாலாக இருந்தது.. பல சர்ச்சைகளும் ஏற்பட்டன..
மகாத்மா விஜயகாந்த்
பிணங்களை புதைத்தாலே கொரோனா பரவிவிடும் என்ற செய்திகள் பரவி, மக்களிடம் அச்சம், பதற்றமும் அப்போது தொற்றிக் கொண்டிருந்தன.. அந்த நேரத்தில் விஜயகாந்த்துக்கும் உடல்நிலை சரியில்லை.. ஆனாலும், கொரோனாவால் இறந்தவர்களை புதைக்க வேண்டுமானால், தன்னுடைய கல்லூரி வளாகத்தை பயன்படுத்தி கொள்ளுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்..
தமிழ்நாட்டில் எந்த கல்லூரி தந்தைகளும், கல்வித்தந்தைகளும் இப்படியொரு அறிவிப்பை அன்று வெளியிடவில்லை. சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்கள்கூட, பிணங்களை புதைத்து கொள்ள அனுமதி தரவில்லை. கோடி கோடியாக பணம் வைத்திருப்பவர்களும் அப்படி சொல்லவில்லை.. ஆனால், இயங்கி கொண்டிருக்கும் கல்லூரி என்றும் பாராமல், இதன் விளைவு எப்படியிருக்குமோ? என்றெல்லாம் கவலைப்படாமல் நெருக்கடி நேரத்தில் இடம் தந்து உதவியவர் விஜயகாந்த்.
யாருமே அப்படி சொல்ல மாட்டாங்க
இப்படியெல்லாம் யாருமே சொல்ல மாட்டாங்க.. ஆனால் விஜயகாந்த் சொன்னார்.. அப்படி சொல்வதற்கும் ஒரு மனசு வேணும். அதனால்தான் நான் அவரை மகாத்மா என்று சொல்வேன். சென்னையில் 2015, 17 வெள்ளம் வந்தபோதுகூட, கோயம்பேடு அலுவலகத்தை பொதுமக்களுக்காக திறந்துவிட்டார்.
இப்போது ஆண்டாள் அழகர் கல்லூரியை இன்னொரு தனியார் நிறுவனத்துக்கு கை மாற்றிவிட உள்ளதாக செய்திகள் வருகின்றன.. இது அவர்களது குடும்பத்தில் எடுக்கப்படும் முடிவு.. அதை பற்றி நாம் எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஆண்டாள் அழகர் என்றே கல்லூரி பெயர் அப்படியே இருக்கும், அது மாற்றப்படாது என்கிறார்கள்.. அது விஜயகாந்தின் பெற்றோரின் பெயராகும்.
ஆண்டாள் அழகர் கல்லூரி
அதேபோல, அந்த கல்லூரி வளாகம் கட்டியபிறகும்கூட, பெரிய தொகையை விஜயகாந்த் ஈட்டவில்லை என்கிறார்கள்.. இதற்கு காரணம் விஜயகாந்த்தானாம்.. ஏனென்றால் அரசு கோட்டாவில் வரும் மாணவர்களுக்கு மட்டுமே அட்மிஷன் போடுவாராம் விஜயகாந்த். அப்போதுதான் ஏழை பிள்ளைகள் வந்து படிக்க முடியும் என்பதால், அரசு கோட்டா மாணவர்களுக்கே முன்னுரிமை தந்துள்ளார்.. ஆனால், இது எதுவுமே வெளியே கடைசிவரை தெரியவில்லை..
அரசு எந்த கட்டணத்தை விதிக்கிறதோ அந்த கட்டணத்தை மட்டுமே வாங்கியிருக்கிறார்.. அதுமட்டுமல்ல, அந்த கட்டணத்தைகூட செலுத்த முடியாத மாணவர்களுக்கு விஜயகாந்த்தே ஃபீஸை கட்டிவிடுவாராம். அப்படிப்பட்ட கல்லூரி இன்று கைமாறுகிறது என்பதை கேட்பதற்கு வருத்தமாக இருக்கிறது. ஆனால், நம்மால் வருத்தப்பட மட்டுமே முடியும்.
சொத்துக்களை விற்ற விஜயகாந்த்
அதேபோல, அரசியலுக்கு வந்தபிறகு சில சொத்துக்களை விற்றார் விஜயகாந்த்.. இதை அவரே சொல்லியிருக்கிறார்.. எப்படி, கல்லூரியில் சம்பாதிக்கவில்லையோ, அதுபோல, அரசியலிலும் விஜயகாந்த் எதையும் சம்பாதிக்கவில்லை.
கூட்டணி பேரம் நடத்தி பணம் வாங்குகிறார்கள் என்று சொல்வார்கள். அப்படியெல்லாம் இருந்தால் இன்று ஏன் கல்லூரியை விற்கும் நிலைமை அவர்களுக்கு வருகிறது? கணவனை நன்றாக பார்த்து கொண்டதில் பிரேமலதாவை குறையே சொல்ல முடியாது.. இனி 2 பிள்ளைகளின் எதிர்காலம் என்று உள்ளது.. இன்று கல்லூரி கைமாறினாலும், அங்கு படிக்கும் ஒவ்வொரு பிள்ளைக்கும், விஜயகாந்தின் முகம் நினைவுக்கு வந்து போகும்" என்று தெரிவித்துள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+