சீரழிச்சுட்டான்..சிறகடிக்க ஆசை ஸ்ருதி நாராயணன் வீடியோ.. வீடியோ போட்டவனை கேளுங்க.. கோபத்தோடு போஸ்ட்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும் நடிகை ஸ்ருதி நாராயணன் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ என ஸ்ருதி நாராயணன் விளக்கம் அளித்து இருந்தார். இந்த நிலையில் தொடர்ந்து தன்னைப் பற்றியே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் வீடியோ வெளியிட்டதற்கு பின்னால் இருக்கும் ஆண் குறித்து பேசவில்லை எனவும், பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் அந்த நபர் குறித்து ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை? என காட்டமாக கூறியிருக்கிறார்.
விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக போய்க் கொண்டிருக்கிறது சிறகடிக்க ஆசை சீரியல். மீனா, ரோகிணி, முத்து ஆகியோரை சுற்றி அந்த சீரியல் பின்னப்பட்டிருக்கும் நிலையில் தனது பொய்களால் மாட்டிக் கொண்ட ரோகிணி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டு இருக்கிறார். அவருக்கு உதவி வருகிறார் அவரது தோழியான வித்யா.
வித்யா கேரக்டரில் நடித்திருப்பவர் தான் ஸ்ருதி நாராயணன். ஆரம்பத்தில் மாதத்திற்கு ஒரு முறை அவர் சீரியலில் தோன்றி வந்த நிலையில் தற்போது அவரை சுற்றி ஒரு காதல் கதை பின்னப்பட்டிருக்கிறது. ரோகிணி வீட்டில் மாட்டிக்கொண்ட பின் வித்யாவின் முக்கியத்துவம் சீரியலில் அதிகரிக்கப்பட்டு இருக்கிறது.

ஒவ்வொரு எபிசோடிலும் குறைந்தபட்சம் இரண்டு முதல் ஐந்து நிமிடங்களாவது அவர் வந்து விடுகிறார். இந்த நிலையில் தான் கடந்த சில தினங்களாகவே அவர் குறித்த சர்ச்சை சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன்பு ஸ்ருதி நாராயணனின் தனிப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. வாய்ப்புக்காக ஒருவரிடம் அவர் வீடியோ காலில் பேசியதாக அந்த வீடியோ பகிரப்பட்ட நிலையில் அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என விளக்கம் அளித்திருந்தார்.
மேலும்,"ரொம்ப கடினமான காலகட்டத்தில் இருக்கிறேன். நானும் ஒரு பெண். எனது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். எல்லாவற்றையும் காட்டு தீ போல பரப்பாதீர்கள். உங்களுக்கும் தாய், சகோதரி இருக்கிறார்கள். அவர்களும் பெண் தான். வேண்டுமென்றால் அவர்களின் வீடியோக்களை பகிர்ந்து என்ஜாய் செய்யுங்கள்" என பதிலடி கொடுத்திருந்தார். அதே நேரத்தில் கடந்த ஒரு வாரமாகவே அவர் குறித்த பேச்சு தான் சமூக வலைதளங்களில் இருந்திருக்கிறது. வாய்ப்புக்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? என ஸ்ருதி நாராயணனை விமர்சித்து வந்தனர்.
இந்த நிலையில் தொடர்ந்து தன்னைப் பற்றியே விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில் வீடியோ வெளியிட்டதற்கு பின்னால் இருக்கும் ஆண் குறித்து பேசவில்லை எனவும், பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கும் அந்த நபர் குறித்து ஏன் யாரும் கேள்வி கேட்கவில்லை? என காட்டமாக கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டா ஸ்டோரியில்,"இப்போது நடந்து கொண்டிருப்பது எல்லாம் லிமிட்டை கடந்து போய்க்கொண்டு உள்ளது.
இந்த வீடியோ குறித்து கருத்துச் சொல்லும் அனைவரும் பாதிக்கப்பட்ட பெண் செய்தது சரியா தவறா என்ற கோணத்தில் தான் பேசுகிறார்கள். ஆனால் யாருமே அந்த வீடியோவுக்கு பின்னால் இருக்கும், ஆண் குறித்து பேசவில்லை. பெண்களின் வாழ்க்கையை சீரழித்துக் கொண்டு இருக்கும் அவனை கேள்வி கேட்கவில்லை. அந்த வீடியோவைப் பார்த்ததும் பெரும்பான்மையானவர்கள் அடடா புது வீடியோ, புது கன்டென்ட் கிடைத்து விட்டது எனக் கூறி, பகிர்ந்தார்களே தவிர, யாருமே இந்த வீடியோவால் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கை, பொது வாழ்க்கை, மனநிலை முதற்கொண்டு அனைத்தும் பாதிப்பை சந்திக்கும் என இரண்டு நொடிகள் கூட நினைக்கவில்லை.
காமவெறி கொண்டு காட்டுத் தீ போல அந்த வீடியோவைப் பகிர்ந்தார்கள். ஒரு பெண்ணாக நான் இந்த விஷயத்தில் உங்களிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அந்த வீடியோ விவகாரம் ஒரு பெண்ணை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உணர்வு ரீதியாகவும் பெரும் பாதிப்பை உண்டாகியிருக்கும் என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள்" என பதிவிட்டுள்ளார். இதற்கிடையே ஸ்ருதி நாராயணனின் வீடியோ உண்மையோ? பொய்யோ? ஆனால் தனிப்பட்ட ஒரு பெண்ணின் வீடியோவை பொதுவெளியில் பகிர்வதும், அவர் குறித்த அவதூறான கருத்துக்களை முன்வைப்பதும் மிக மிக தவறானது. வீடியோவுக்கு பின்னால் இருக்கும் நபர்களை கைது செய்ய வேண்டும் என அவருக்கு ஆதரவு பெருகி வருகிறது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications