வாராஹி அம்மனால் என் வாழ்க்கை மாறியது.. கோவிலில் நடந்த நிகழ்வு! நடிகை ஸ்ருதிஹாசன் எமோஷனல்
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசன் பேசிய ஒரு பேட்டி, ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. சினிமா, இசை என பல துறைகளில் தொடர்ந்து வரும் அவர், தனது ஆன்மீக அனுபவங்களை பகிர்ந்திருப்பது பேசுபொருளாகியுள்ளது. தான் என்னதான் மார்டனாக இருந்தாலும் கடவுள் நம்பிக்கை தனக்கு எவ்வளவு மாற்றத்தை கொடுத்தது என்று அவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

தனி அடையாளம்
நடிகர் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன், குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தைத் தொடங்கி, பின்னர் ஹிந்தி சினிமா வழியாக ஹீரோயினாக அறிமுகமானார். தமிழில் 'ஏழாம் அறிவு' படத்தின் மூலம் முக்கிய நடிகையாக உருவெடுத்தார். முதல் படமே இவருக்கு பெரிய அளவில் பெயர் வாங்கிக் கொடுத்தது. அதிலும் தமிழுக்காக இவர் குரல் கொடுத்த விதம் அந்த நேரத்தில் அதிகமாக பேசப்பட்டது. அதற்குப் பிறகு தனுஷுடன் 3 திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்திலும் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
நடிப்புடன் சேர்த்து இசையிலும் அதிக ஈடுபாடு கொண்ட அவர், 'உன்னைப்போல் ஒருவன்' படத்துக்கு இசையமைத்ததுடன், தனிப்பாடல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் வெளியாகிய 'பவழ மல்லி' பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பிஸியாக நடித்துவரும் அவர், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள 'ட்ரெய்ன்' படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவுகிறது.

சர்ச்சைகள் மத்தியில் முன்னேற்றம்
ஸ்ருதி ஹாசனின் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் இடையே பேசப்பட்டிருந்தாலும், அவற்றைத் தாண்டி தனது வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருகிறார். அதுமட்டுமல்ல எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் அங்கே மனதில் பட்டதை எல்லாம் ஓபனாக பேசி விடுவார். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சிக்கு போன இடத்தில் ஒருவர் இவரை அம்மா என்று அழைக்க, என்னது நான் உங்களுக்கு அம்மாவா? என்று அவர் கடுப்பாகி அந்த நபரிடம் பேசிய வீடியோக்கள் கூட ரசிகர்களிடையே வித்தியாசமான வரவேற்பைப் பெற்றுள்ளது.
ஆன்மீக அனுபவம்
இந்த நிலையில் ஸ்ருதி ஹாசன் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது வாழ்க்கையில் ஏற்பட்ட ஆன்மீக அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, "என் வாழ்க்கையில சமீபத்தில் தான் வாராஹி அம்மன் வந்தாங்க. ஏன்னா நம்ம மட்டும் இல்ல, கடவுள்களும் நம்மள தேர்ந்தெடுக்கிறார் என்று நம்புறேன். என் நண்பன் ஒருமுறை என்னிடம் , நீ கொஞ்சம் வித்தியாசமா இருக்க வா கோயிலுக்கு போயிட்டு வரலாம்னு கூப்பிட்டாரு.
நானும் சரி என்று போனேன். அது ஒரு சின்ன கோவில்தான். உள்ளே போன உடனே உண்மையான ஒரு பக்தியை உணர்ந்தேன். சின்ன கோயில், ஆடம்பரம் இருக்காது, நன்கொடை கிடையாது, விஐபி வரிசை எதுவும் இல்லை... வாராஹி அம்மன் சக்தி வாய்ந்த ஒரு தெய்வமா இருக்காங்க என்பது எனக்கு புரிந்தது என்று ஸ்ருதிஹாசன் எமோஷனலாக பேசியிருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications