ரசிகர் செய்த இந்த காரியத்தால் கண்கள் முழுக்க கண்ணீர்.. இதற்கு நான் தகுதியானவளா? ஃபைனஸில்ட் ஸ்ருதிகா
சென்னை: எனக்கு சொல்ல வார்த்தைகளே இல்லை, கண்கள் முழுவதும் கண்ணீர் வருகிறது. என் மீது இத்தனை அன்பா, இதற்கெல்லாம் நான் தகுதியானவளா என கேட்டு குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் ஃபைனலிஸ்ட் ஸ்ருதிகா அர்ஜுன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பழம்பெரும் நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தி நடிகை ஸ்ருதிகா. இவர் சூர்யாவுடன் இணைந்து ஒரு முதல் படத்தில் நடித்திருந்தார். பின்னர் சில படங்களில் நடித்த இவருக்கு பட வாய்ப்புகள் பெரிதாக இல்லாததால் இத்தனை நாட்களாக இவர் குறித்த விவரங்கள் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் விஜய் டிவியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஸ்ருதிகா கலந்து கொண்டார். அவரது கணவர் அர்ஜுன், இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் இவர் எப்போதும் சிரித்த முகத்துடனும் எல்லாவற்றையும் விளையாட்டாகவே எடுத்துக் கொள்வதும் ரசிகர்களை இவர் பக்கம் திருப்பியது.

12 பேர்
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் 12 பேர் கலந்து கொண்டனர். கடந்த 6 மாதங்களாக நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியில் இறுதியாக ஸ்ருதிகா, தர்ஷன், வித்யூலேகா, அம்மு அபிராமி, வேட்டை முத்துக்குமார் ஆகியோர் உள்ளனர். இவர்களில் ஸ்ருதிகா முதல் ஃபைனலிஸ்ட்டாக தேர்வு செய்யப்பட்டுவிட்டார்.

முதல் ஃபைனலிஸ்ட்
முதல் ஃபைனலிஸ்ட் என செஃப் பட், தாமோதரன் அறிவித்ததும் ஸ்ருதிகா ஆனந்த கண்ணீரில் மூழ்கினார். அவருக்கு சக போட்டியாளர்களும் கோமாளிகளும் வாழ்த்துகளை சொல்லினர். இந்த நிலையில் அவரது ரசிகர் ஒருவர் தாகம் அறக்கட்டளையில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும் ஒரு வேளை உணவு வழங்கி ஸ்ருதிகாவுக்கு வாழ்த்துகளை அந்த குழந்தைகளை சொல்லி சொல்லியுள்ளார்.

ஸ்ருதிகா
இந்த வீடியோவால் நெகிழ்ந்த ஸ்ருதிகா அதை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். மேலும் அவர் கூறுகையில் எனக்கு வார்த்தைகளே வரவில்லை. கண்கள் முழுக்க கண்ணீர்தான். இந்த குழந்தைகளை யார் போய் பார்த்து இந்த வீடியோவை செய்தார்கள் என எனக்கு தெரியாது. ஆனால் யாராக இருந்தாலும் எந்த நாட்டில் இருந்தாலும் நீங்கள் செய்தது மிகப் பெரிய தாக்கத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

தகுதியானவளா
இத்தனை அன்புக்கு நான் தகுதியானவளா என எனக்கு தெரியவில்லை. என் உள் மனசிலிருந்து உங்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். இந்த காப்பகம் எங்கே இருக்கிறது என்பதை எனக்கு சொல்லுங்கள், இந்த குழந்தைகளை நானும் போய் சந்தித்துவிட்டு வருகிறேன். யாரென்றே தெரியாத ஒரு நபரிடம் இருந்து என் வாழ்வில் இத்தனை பெரிய பரிசு, எல்லையற்ற அன்பு கிடைக்கும் என நினைத்து கூட பார்த்ததில்லை என குறிப்பிட்டுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications