நான் நடிக்க வேண்டிய முக்கியமான கேரக்டர்.. ஆனால், ஜோதிகா நடித்தார்! சிம்ரன் பேச்சால் மீண்டும் திகுதிகு
சென்னை: தமிழ் சினிமாவின் இரு முக்கிய நடிகைகள் சிம்ரன் மற்றும் ஜோதிகா, 90களில் இருந்து 2000களின் ஆரம்பம் வரை திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர்கள். சிம்ரன், 'விஐபி', 'நேருக்கு நேர்', 'வாலி', 'கண்ணெதிரே தோன்றினாள்' 'துள்ளாத மனமும் துள்ளும்' 'ஜோடி' 'பிரியமானவளே' 'பார்த்தேன் ரசித்தேன்' 'கண்ணத்தில் முத்தமிட்டால்' போன்ற வெற்றி படங்களில் தொடர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஜோதிகா, 'வாலி', 'குஷி', 'தூள்' 'அருள்' 'முகவரி' தெனாலி' 'காக்க காக்க' 'மொழி', 'சந்திரமுகி' என பல வெற்றி படங்களில் நடித்தார். இருவரும் தமிழ் திரை உலகில் புது தலைமுறை பெண்களின் முகமாக உயர்ந்தனர்.
இந்த இருவருக்கும் இடையே இருந்த போட்டி, ரசிகர்கள் மற்றும் மீடியா வட்டாரங்களில் பெரிதும் பேசப்பட்டது. 'வாலி', '12B' போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தாலும், அவர்கள் நட்பு குறித்து பல்வேறு வதந்திகள் பரவின. ஆனால், நேர்முகமாக இருவரும் ஒருவரை ஒருவர் திறம்பட பாராட்டி வந்துள்ளனர். ஜோதிகா ஒரு பேட்டியில், "சிம்ரன் எனக்கு பிடித்த நடிகை. என் அம்மா கூட சிம்ரனைப் போல ஸ்லிம்மாகவும், நல்ல டான்ஸராகவும் ஆக சொல்லி ஊக்குவித்தார்" என்று பகிர்ந்துள்ளார்.

சமீபத்தில், சிம்ரன் ஒரு விருது விழாவில் உரையாற்றும் போது, "aunty" ரோல் செய்வதாக ஒரு நடிகை தன்னை கேலி செய்ததாகவும், இது தனக்கு மிகவும் வருத்தம் அளித்தது என்றும் கூறினார். மேலும், நான் எந்தவொரு கதாபாத்திரமாக இருந்தாலும், அதை பெருமையாகவே செய்கிறேன். 'aunty' ரோல் செய்யும் மகிழ்ச்சி, 'dabba' ரோல் செய்யும் தாழ்வை விட மேலானது," என்று கூறினார்.
இக்கமெண்ட், ஜோதிகா சமீபத்தில் நடித்த 'Dabba Cartel' வெப்சீரிஸை குறிக்கிறதா என ரசிகர்கள் பெரிதும் விவாதித்தனர். ஆனால், சிம்ரன் நேரடியாக பெயர் சொல்லவில்லை. இது மீண்டும் இருவருக்குள்ளான பழைய போட்டியை விவாதப் பொருளாக்கியது.
நடிகை சிம்ரன், மும்பையில் பிறந்து வளர்ந்தவர். தமிழில் 'விஐபி' படத்தின் மூலம் அறிமுகமான அவர், திருமணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து ஓய்வு பெற்றிருந்தாலும், சமீப காலங்களில் மீண்டும் திரையுலகில் சுறுசுறுப்பாக நடித்து வருகிறார். 'பேட்ட' படத்திற்கு பிறகு, 'மகான்' மற்றும் 'அந்தகன்' திரைப்படத்தில் கம்பேக் கொடுத்திருந்தார். இதையடுத்து வரிசையாக, 'குட் பேட் அக்லி' படத்தில் கேமியோ ரோல், 'டூரிஸ்ட் பேமிலி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில், ஒரு பேட்டியில் சிம்ரன், "சந்திரமுகி" படத்தில் முதலில் ஜோதிகா நடித்த கதாபாத்திரத்திற்கு தன்னைத் தான் தேர்வு செய்திருந்தார்கள் என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த நேரத்தில் திருமணத்துக்குப் பிறகு குடும்பத்திற்காக அந்த வாய்ப்பை விட்டுவிட்டதாகவும், அதன் காரணமாக ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு தப்பிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஆனால், பின்னர் 'பேட்ட' படத்தில் ரஜினிகாந்த் உடன் நடித்ததன் மூலம் அந்த ஆசை நிறைவேறியது என்றும் சிம்ரன் பகிர்ந்துள்ளார்.
சிம்ரன்தான் முதலில் தேர்வு செய்யப்பட்டு அந்த இடத்திற்கு ஜோதிகா வந்தார் என்ற தகவலால் மீண்டும் இரு நடிகைகளின் ரசிகர்களையும் சமூக வலைத்தளங்களில் சண்டை போட தூண்டிவிட்டுள்ளது என்றுதான் சொல்ல வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications