மதுரை பொண்ணுன்னா என்ன குறைச்சலா ? ஏன் இந்த பாகுபாடு? “சிங்கப்பெண்ணே” சீரியல் நடிகை எமோஷனல்
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்க பெண்ணே சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகை தாரணி நடிக்க வந்த பிறகு அனுபவித்த பிரச்சனைகள் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அதில் மதுரையில் இருந்து நடிக்க வந்ததால் சினிமா துறையில் பட்ட கஷ்டத்தை குறித்தும் பகிர்ந்து இருக்கிறார்.
அந்த வகையில் சினிமா மற்றும் சீரியலில் ஒரு மாயை இருக்கிறது. அதாவது வெளிமாநிலத்தில் அல்லது வெளிநாட்டில் இருந்து நடிக்க வருபவர்கள் மீது ஈர்ப்பு தான் மக்களுக்கும் சினிமா துறையில் இருப்பவர்களுக்கும் இருக்கிறது. இதனால் திறமை இருந்தும் நம்முடைய சொந்த மாநிலத்திலோ அல்லது சமூகத்திலோ இருக்கும் பலருக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை.

அது குறித்து சிங்க பெண்ணே சீரியலில் நடித்து வரும் நடிகை தாரணி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். மதுரையை சேர்ந்த நடிகை தாரணி படிப்பை முடித்துவிட்டு டிஎன்பிசி எக்ஸாமிற்கு தயார் செய்து கொண்டிருந்த நிலையில் தான் அவருடைய அம்மாவிற்கு சென்னைக்கு வேலை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் குடும்பத்துடன் சென்னைக்கு வந்த நிலையில் விளம்பர மாடலாக கொஞ்சம் நாட்கள் வேலை பார்த்து இருந்திருக்கிறார்.
அப்போது கிடைத்த பிரபலத்தால் தான் இவருக்கு 'செவ்வந்தி' என்ற சீரியலில் சன் டிவியில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சின்ன கேரக்டராக இருந்தாலும் அதில் ஈடுபாட்டுடன் நடித்ததால் அதைத் தொடர்ந்து "சுந்தரி" சீரியலிலும் முக்கிய கேரக்டரில் தாரணி நடித்து வருகிறார். இதைத்தொடர்ந்து இப்போது அவருக்கு "சிங்க பெண்ணே" சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி நடித்துக் கொண்டிருக்கும் தாரணி அளித்த பேட்டியில், மதுரையில் இருந்து நான் மீடியாவுக்கு வந்தேன் என்று சொன்னதும் பலர் என்னை ஒரு மாதிரியாக பார்த்தார்கள். சிலர் காட்டும் பாரபட்சத்தை பார்த்து ஏன் சென்னை பெண்கள் மட்டும்தான் மீடியாவுக்கு வர வேண்டுமா? மதுரையிலிருந்து வரக்கூடாதா? என்ற கேள்வியை என்னுள் எழும்பி கொண்டு இருக்கிறது.
நான் சீரியலில் கதாநாயகி ஆகி மதுரை பெண்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளேன். கூடிய சீக்கிரம் கதாநாயகியாக ஒரு சீரியலில் நடிப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றும் தெரிவித்திருக்கிறார். அதுபோல நான் ஆரம்பத்தில் நடிக்க வந்ததை என்னுடைய உறவினர்களே தவறாக பேசினார்கள்.
ஆனால் என்னுடைய அம்மா, என்னுடைய தங்கை மற்றும் குடும்பத்தினர் என்னை முழுமையாக நம்புகின்றனர். அதனால் என்னால் சரியாக வேலை பார்க்க முடிகிறது. அவர்களுக்காக கண்டிப்பா நான் சீக்கிரமாக ஒரு மிகப்பெரிய இடத்தை அடைவேன் என்று தாரணி பேசி இருக்கிறார். தாரணிக்கு அவருடைய ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications