என் மூத்த மகளுக்கு இன்னும் கோபம் இருக்கு.. பெற்றோர்களும் இதை கவனிக்கனும்.. அனிதா குப்புசாமி வருத்தம்
சென்னை: பிரபல பாடகியான அனிதா குப்புசாமி தன்னுடைய குழந்தைகள் மற்றும் கணவர் குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருக்கிறார். அப்போது இன்றைய தலைமுறை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் செய்யும் தவறுகள் குறித்தும் மனம் திறந்து பேசி இருக்கிறார்.
நாட்டுப்புற பாடகர் மற்றும் பின்னணி பாடகர்களாக வலம் வருபவர்கள் தான் புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா தம்பதி. இவர்கள் இருவரும் நாட்டுப்புற இசையின் மூலமாக அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கின்றனர். சமீபத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் இடம் பெற்ற "தொட்டு தொட்டு பேசும் சுல்தானா" பாடல் பல வருடங்களுக்கு முன்பே புஷ்பவனம் குப்புசாமி பாடியதுதான். அவருடைய பாடல் இப்போது மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துக் கொண்டிருக்கிறது.

புஷ்பவனம் குப்புசாமி வாங்கிய விருது
அதுமட்டுமில்லாமல் புஷ்பவனம் குப்புசாமி தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றிருக்கிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் இவர்கள் இருவரும் சேர்ந்து படிக்கும் போது பல்வேறு போட்டிகளிலும் கச்சேரிகளிலும் ஒன்றாக பாடி இருக்கிறார்கள். அப்போது இவர்களின் இருவருக்கும் காதல் ஏற்பட்டு வீட்டில் எதிர்ப்பையும் மீறி இவர்கள் இருவரும் திருமணம் செய்து இருக்கிறார்கள். திருமணத்திற்கு பிறகு பல கஷ்டங்கள் பட்டாலும் எங்களுடைய காதல் குறைந்ததில்லை என்று இந்த தம்பதி பல இடங்களில் பேசி இருக்கிறார்கள்.
அனிதா குப்புசாமி குடும்பம்
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலக அளவில் இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் தங்களுடைய youtube சேனலில் மாடித்தோட்டம், பூஜை அறை, சமையல் அறை குறிப்பு போன்றவற்றையும் வீடியோவாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு பல்லவி, மேகா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில் இரண்டு குழந்தைகள் மற்றும் திருமண வாழ்க்கை குறித்து சமீபத்தில் அனிதா குப்புசாமி ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.
அனிதா குப்புசாமி பேட்டி
அனிதா குப்புசாமி பேசும்போது, இன்றைய அவசரமான சூழ்நிலையில் ஒரு குடும்பத்தில் இரண்டு பேரும் வேலை பார்த்து ஆகவேண்டும் என்ற சூழ்நிலை இருக்கிறது. ஆனால் குழந்தைகள் மீதும் நமக்கு அதிகமான பாசம் இருக்கிறது என்பதை அவர்கள் புரியும் வகைகள் நாம் எடுத்து சொல்ல வேண்டும். எங்களுடைய மகள்கள் சின்ன குழந்தையாக இருக்கும்போது நாங்கள் அடிக்கடி கச்சேரிக்கு போய் விடுவோம். அவர்கள் தனியாக வீட்டில் இருப்பார்கள்.

குழந்தைகளின் தனிமை
வீட்டில் தாத்தா பாட்டி இருந்தாலும் குழந்தைகள் நம்மை தானே தேடுவார்கள். ஆனால் நாம் கச்சேரிக்கு சென்றால்தான் நமக்கு வருமானம் வரும். அப்போதுதான் குழந்தைகளின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும். அவர்களுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்க முடியும். அதற்காகத்தான் நாம் நம்முடைய குழந்தைகளை கஷ்டப்பட்டு பிரிந்து போகிறோம். என்னுடைய மகள் இப்ப வரைக்கும் சொல்லிக் காட்டிக்கொண்டே இருப்பார். என்னுடைய மூத்த மகள் பல்லவிக்கு எங்க மேல இன்னும் கோபம் இருக்கு, சின்ன வயசுல நீங்க எங்களை அதிகமா தூக்கி கொஞ்சல, எங்க கூட டைம் ஸ்பென்ட் பண்ணலன்னு சொல்லிகிட்டே இருப்பாங்க.
அன்பு முக்கியம்
ஆனால் நேரம் கிடைக்கும் நேரங்களில் எங்களுடைய மகள்களுடன் தான் நாங்கள் நேரத்தை முழுமையாக செலவிடுவோம். எப்போதும் உன்னை நாங்கள் கண்காணித்துக் கொண்டிருக்கிறோம், உன் மனதில் இருக்கும் எந்த விஷயத்தையும் நீ என்னிடம் சொல்லலாம் என்று நாங்கள் அவர்களுக்கு இப்போ புரிய வைத்துக் கொண்டே இருக்கிறோம். இப்போது உள்ள இளம் தலைமுறைகள் அவர்களுடைய பெற்றோரை எதிரியாக பார்க்கிறார்கள்.
பெற்றோருக்கு அட்வைஸ்
நமக்காக இவர்கள் எதுவும் செய்யவில்லை என்பதுதான் பலருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால் பெற்றோர்களும் குழந்தைகளின் மனதை அறிந்து நடக்க வேண்டும். நேரம் கிடைக்கும் நேரத்தில் செல்போனில் மூழ்கி விடாமல் குழந்தைகளோடு மனம் விட்டு பேசுங்கள், அவர்களுக்கு பிடித்ததை செய்யுங்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்று கவனியுங்கள், ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருங்கள் என அனிதா குப்புசாமி பெற்றோர்களுக்கு அட்வைஸ் கொடுத்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications