ரஜினி கையில் இருக்கும் குழந்தை.. சினிமா பாடல் பாடணும்னு ஆசையே இல்லை..பாடியதோ 5000 மேற்பட்ட பாடல்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை; பாடகி அனுராதா ஸ்ரீராம் ஆரம்பத்தில் சினிமா பாடல்கள் பாடுவதில் ஆசை இல்லாமல் இருந்த நிலையில் அவர் எந்த சூழ்நிலையில் சினிமா பாடல்களை பாடத் தொடங்கினார் என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இதுவரைக்கும் 5000க்கும் மேற்பட்ட பாடல்கள் பாடிய அனுராதா ஸ்ரீராம் நடிகர் ரஜினிகாந்த் உடன் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கிறார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் பாடகி அனுராதா ஸ்ரீராம் அவருடைய கணவரும் ஒரு பாடகர் தான் என்பது பலருக்கும் தெரியாத ரகசியம் தான்.

ஆசை இல்லாமலே இப்படியா

ஆசை இல்லாமலே இப்படியா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் நடுவராக இருக்கும் பாடகி அனுராதா ஸ்ரீராம் அனைவருக்கும் பரிசையமானவர் தான். இவருடைய பாடல்கள் 90ஸ் கிட்ஸ் முதல் 2கே கிட்ஸ்கள் வரை பலரும் ரசிக்கும் பாடல்களாக இருந்து வருகிறது. மனதை மயக்கும் குரல் என்றால் அனைவரையும் வசீகரிக்கும் குரலுக்கு சொந்தக்காரராக இருக்கும் அனுராதா ஸ்ரீ ராம் கடந்து வந்த பாதை சுவாரஸ்யமானதாக தான் இருக்கிறது. இவர் சினிமா பாடல்கள் பாடணும் என்ற ஆசை இல்லாமல் இருந்த நிலையில் தற்போது தமிழ், தெலுங்கு, சிங்களம், கன்னடம், மலையாளம், வங்காளம் இதுவரைக்கும் கிட்டத்தட்ட 13 மொழிகளில் 5000 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறாராம்.

ஏ.ஆர் ரகுமானால் கிடைத்த வாய்ப்பு

ஏ.ஆர் ரகுமானால் கிடைத்த வாய்ப்பு

அதுமட்டுமல்லாமல் நிறைய ரியாலிட்டி ஷோக்களிலும் இவர் கலந்து கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் சினிமா பாடல்களை பாடக்கூடாது என்று இருந்தபோது இளையராஜாவின் பாடல்களை நிறைய கேட்டுகிட்டே இருந்து அந்த மாதிரி பாடி பார்ப்பாராம். அப்போதுதான் இவருக்கு ஒரு முறை பம்பாய் படத்தில் ஏ ஆர் ரகுமான் தான் இவருக்கு முதலில் கோரசில் பாட வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். முதலில் பயந்து அனுராதா மறுத்த நிலையில் அதற்கு பிறகு ரகுமானின் உற்சாகத்தால் அந்த பாடலை சரியாக பாடி இருக்கிறார். அதைத்தொடர்ந்து தேவா, வித்யாசாகர் இசையிலும் பாடி இருக்கிறாராம். அனுராதா பாடியது அதிகமாக தேவாவின் இசையில் தானாம். அதுமட்டுமல்லாமல் அனுராதாவின் கணவரோடு சேர்ந்து இவர் கிட்டத்தட்ட 2500 பாடல்களை பாடி இருக்கிறாராம்.

குடும்ப வாழ்க்கை

குடும்ப வாழ்க்கை

அனுராதாவின் சொந்த ஊர் சென்னை தானாம் கேகே நகரில் 1970 இல் பிறந்திருக்கிறார். இவருடைய அப்பா மீனாட்சி சுந்தரம் மோகன் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் வேலை பார்த்து இருக்கிறார். அவருடைய அம்மாவின் பெயர் ரேணுகா தேவியாம் இவரும் ஒரு பாடகித்தானாம். கிட்டத்தட்ட 400 பாடல்கள் வரை பாடி இருக்கிறாராம். அனுராதா ஸ்ரீராம் பி ஏ ,எம் ஏ மியூசிக்கல் படிப்பை சென்னை குயின்ஸ் மேரியில் கல்லூரியில் படித்திருக்கிறார். படிப்பு மட்டுமல்லாமல் அங்கே இவர் கோல்டு மெடலும் வாங்கி இருக்கிறார். இவர் ஆரம்பத்தில் எம் எஸ் சுப்புலட்சுமி மாதிரி வரணும்னு ஆசையாம். ஆனால் இவருடைய அம்மாவுக்கு இவர் கிளாசிக்கல் டான்ஸ் கற்று தர வேண்டும் என்று ஆசையாம். அதனால் தஞ்சாவூரில் உள்ள எஸ்சே கல்யாண ராமனிடம் ஆறு வயசாக இருக்கும்போதே இவர்கள் சேர்த்து விட்டிருக்கிறார்கள்.

ரஜினியின் கையில் அனுராதா

ரஜினியின் கையில் அனுராதா

அனுராதாவிற்கு காதல் திருமணம் தான். இவர் அவருடைய கணவரை லண்டனில் சந்தித்த பிறகு இருவருக்கும் காதலை பரிமாறிய நேரத்தில் இவர்கள் இல்லாமலே இவர்களுடைய நிச்சயதார்த்தம் முடிவடைந்து இருந்ததாம். திருமணத்திற்கு பிறகும் கணவர் ரொம்பவே ஆதரவு கொடுத்து வருகின்ற நிலையில் தன்னுடைய கணவரோடு சேர்ந்து 5 ஸ்டார் திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளாராம்.ஆசை படத்தில் மீனம்மா பாடலை இவர்தான் பாடி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் 1980 இல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஐவி சசியின் இயக்கத்தில் வெளியான காளி என்ற திரைப்படத்தில் பாடகி அனுராதா ஸ்ரீராம் அவருடைய மகளாக அசத்தியிருக்கிறார். அந்த திரைப்படத்தில் ரஜினியின் கைகளில் அனுராதா இருக்கும் அந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ரஜினியின் கையில் இருக்கும் குழந்தை யார் என்று கேள்வி பரவி வரும் நிலையில் அனுராதாவை பற்றிய பல தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+