அந்த தப்பை நான் பண்ணாம இருந்திருந்தால் அப்பா இப்போ இருந்திருப்பார்.. எஸ்.பி.பியின் மகள் எமோஷனல்
சென்னை: பாடகராகவும் நடிகராகவும் பலருடைய மனதை கவர்ந்து எஸ்பிபி என்று செல்லமாக அழைக்கப்படும் பாலசுப்பிரமணியன் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் செப்டம்பர் 25ஆம் தேதி உயிரிழந்தார். இந்த நிலையில் அவருடைய இழப்பு குறித்து முதல்முறையாக அவருடைய மகளான பல்லவி பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
அதில் தன்னுடைய தந்தை கடைசி நேரத்தில் ரொம்பவும் கஷ்டப்பட்டு தான் இறந்தார். ஆனால் அவருடைய இறப்புக்கு நானும் ஒரு காரணம் என்று எனக்கு தோணுகிறது. ஒருவேளை நான் "அந்த" தப்பை மட்டும் செய்யாமல் இருந்திருந்தால் என்னுடைய தந்தை இப்போது இருந்திருப்பார் என்று உருக்கமாக அந்த பேட்டியில் பல்லவி பேசியிருக்கிறார். அவர் அந்த அளவிற்கு மனம் நொந்து பேசுவதற்கு காரணம் என்ன என்பதை பற்றி விரிவாக பேச பார்க்கலாம்.

அதாவது கொரோனா காலத்தில் தன்னுடைய தந்தையான எஸ்பிபி ஹைதராபாத்துக்கு செல்ல வேண்டாம் என்று தான் சொல்லாமல் இருந்தது தான் என்னுடைய மிகப்பெரிய தவறாக நினைக்கிறேன் என்று பல்லவி கூறி இருக்கிறார். அதோடு என்னுடைய அம்மாவும் அவ்வளவு தடுத்து பார்த்தார். ஆனால் அப்பா கேட்கவே இல்லை. ஆனால் நான் இந்த அளவிற்கு ஃபீல் பண்ணுவதற்கு காரணம் அப்பாவுக்கு ஹைதராபாத்தில் வைத்துதான் கொரோனா பரவியது.
ஒருவேளை நான் நீங்கள் அங்கு போக வேண்டாம் என்று சொல்லி இருந்தால் அவர் சென்றிருக்க மாட்டாரோ என்று எண்ணம் எனக்கு எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்கிறது. அவர் இப்போது நம்மை விட்டு சென்று விட்டார். நாங்கள் இந்த பயணத்தை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டோம். எல்லோரும் எஸ்பிபி இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை. அவர் பாடல்கள் வழியாக நம்மோடு தான் இருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

அதை பார்க்கும் போது எஸ்பிபி எங்களோடு இருந்ததை விட உங்களோடு தான் சற்று கூடுதல் சதவீதத்தோடு இருப்பதாக நினைத்துக் கொள்வேன். அதுபோல அப்பா இப்போதும் ஒரு ஊரில் இருந்து கொண்டிருக்கிறார் என்று நினைத்துதான் நான் என்னுடைய வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம் அவரைப் பற்றி ஆழமாக யோசித்தாலே நான் நொறுங்கி விடுவேன்.
அப்பாவை பற்றி நினைக்கும் போது எல்லாம் அப்பா மருத்துவமனையில் இருந்த தருணங்கள் தான் என்னுடைய கண் முன்னே வந்து கொண்டிருக்கிறது. அப்பாவுக்கு அப்படி நடந்திருக்கவே வேண்டாம் அவர் அந்த அளவு கஷ்டப்பட்டு இறக்கும் அளவிற்கு யாருக்கு என்ன செய்தார் என்பது எனக்கு தெரியவில்லை என்று கண்ணீரோடு இந்த பேட்டியில் எஸ்பிபியின் மகள் பல்லவி பேசியிருக்கிறார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications