முக்கோண சிக்கலில் சின்மயி.. இளையராஜாவின் அந்தப்புரம்? கங்கை அமரன் அன்று கோமாவில் இருந்தாரா? பிரபலம்
சென்னை: நீதிமன்றத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளபோது, யார் மீது குற்றம் என்பதை உறுதி செய்யாமல், அதற்குள் சின்மயிக்கு நீதி கிடைக்க வேண்டும்? என்று டிவி சேனலில் சொல்வது எந்த வகையில் நியாயம்? குறிப்பிட்ட சேனல் இதை ஏன் டிரெண்டு செய்கிறது? சின்மயி பின்னால் உள்ள டீம்தான், பணத்தை தந்து திமுகவுக்கு எதிராக இப்படியெல்லாம் புரமோட்டும் செய்கிறது" என்று கொந்தளித்து பேசுகிறார் மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா.
King 24X7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள சேகுவேரா, "சின்மயி விஷயத்தில் அநீதி நடந்திருந்தால், அந்த அநீதியை கங்கை அமரன் கண்ணால் பார்த்திருக்க வேண்டும்.. அல்லது ஒரு பெண்ணாக இருந்து, அந்த அநீதியால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும்..

கங்கை அமரன் பேச்சு
அப்படியிருக்கும்போது, கங்கை அமரன், இன்னொரு கவிஞரை எப்படி "பிளேபாய்" என்று சொல்லலாம்? அதுவும் இத்தனை வருட கால நட்பில் இருந்துவிட்டு, இப்போது வந்து ஏன் சொல்ல வேண்டும்? "நல்ல கவிஞர், நல்ல மனிதர் கிடையாது" என்று கங்கை அமரன் அவருக்கு சர்ட்டிபிகேட் தருகிறார்..
இங்கே நல்லவர், கெட்டவர் என்று யாரை சொல்ல முடியும்? நான் யோக்கியன், நான் அயோக்கியன் என்று என்னை நானே சொல்லி கொள்ள முடியும்.. ஆனால், இன்னொருவர் அதை சொல்ல முடியாது. அதேபோல, இன்னொருவரை நல்லவர், கெட்டவர் என்று கணிக்க முடியாது.
ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்பதை ஒரு சமூகம் முடிவு செய்யும்.. இப்போது வந்து அந்த கவிஞரை கெட்டவர் என்றால், இத்தனை வருடங்களும் கங்கை அமரன் என்ன கோமாவிலா இருந்தார்?
சின்மயியிக்கு அநீதி
சின்மயிக்கு அநீதி நடந்தது இருக்கட்டும், முதல்ல கங்கை அமரன் யாரு? தான் நல்லவன் என்று கங்கை அமரன் சொல்லி கொள்ளலாம். சமூகத்துக்கென்று ஒரு பார்வை இருக்கலாம்.. நான் நல்லவன் என்று நானே சொல்லி கொள்ளலாம். ஆனால், சமூகத்துக்கு வேறு ஒரு பார்வை என் மீது இருக்கலாம்..
இளையராஜாவுக்கு அந்தபுரம்
ஒருமுறை தமிழா தமிழா பாண்டியன் அண்ணன் பேட்டி ஒன்றில், "இளையராஜாவுக்கு அந்தப்புரம் இருக்கு. நான் சொல்வது பொய் என்றால், என் மீது வழக்கு போடுங்கள் பார்க்கலாம்" என்று சவால் விட்டார்.. இந்த செய்தி அனைத்து மீடியாக்களிலும் வெளியானது.. சொந்த அண்ணன் மீது இப்படியொரு புகார் வரும்போது, கங்கை அமரன் ஏன் அப்போது வாய் திறக்கல? கோமாவில் இருந்தாரா?
இதே கங்கை அமரன், அன்று காப்பிரைட் பிரச்சனை வந்தபோது, தன் அண்ணனுக்கு எதிராகவே பேசினார்.. இப்போது மீண்டும் அண்ணனுக்கு சப்போர்ட் செய்கிறார்.. அதுபோல இன்று அந்த கவிஞரை திட்டிவிட்டு, மறுபடியும் கவிஞர் நல்லவர் என்றும் சொல்வார் கங்கை அமரன். அவர் பேசுவதை பெரிதாக எடுத்துக் கொள்ள தேவையில்லை
சின்மயி மீதான குற்றச்சாட்டு
சின்மயி விஷயத்தை பொறுத்தவரை இங்கு 3 வகையாக உள்ளது.. முதலில் கவிஞர் மீதான பாலியல் குற்றச்சாட்டு, அது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.. அது சம்பந்தமான வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.. இதில் யார் மீதும் குற்றம் இன்னும் நிரூபிக்கப்படவில்லை.
2வதாக, டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனிலும் குற்றச்சாட்டு எழுந்தது.. சந்தா பணத்தை சின்மயி கட்டவில்லை என்று, நீதிமன்றம் வரை சென்றுள்ளது.. வழக்கு நிலுவையில் உள்ளதால் அதை பற்றியும் பேச முடியாது.. சின்மயியை யூனியனிலிருந்து நீக்கியது சரியா? தவறா? என்று ராதாரவி, சின்மயி உட்பட யாருமே அதை பற்றி பேச முடியாது. அதை முடிவு செய்ய வேண்டியது நீதிமன்றம்தான்.
ஸ்டாண்டு வித் சின்மயி
இதற்கு நடுவில், 3வதாக இங்கு வேறொன்று நடக்கிறது.. ஒரு குறிப்பிட்ட சேனலில் சின்மயியை பேட்டி தரவைத்து, சின்மயிக்கு அநீதி நடந்துவிட்டதாக கூறி, "ஸ்டாண்டு வித் சின்மயி" என்று புரமோஷன் செய்கிறார்கள்..
நீதிமன்றத்தில் 2 வழக்குகளும் நிலுவையில் உள்ளபோது, யார் மீது குற்றம் என்பதை உறுதி செய்யாமல், அதற்குள் சின்மயிக்கு நீதி கிடைக்க வேண்டும்? என்று சொல்வது எந்த வகையில் நியாயம்? குறிப்பிட்ட சேனல் இதை ஏன் டிரெண்டு செய்கிறது? சின்மயி பின்னால் உள்ள டீம்தான் இந்த பணத்தை தந்து திமுகவுக்கு எதிராக புரமோட்டும் செய்கிறது. உண்மையிலேயே டப்பிங் ஆர்ட்டிஸ்ட் யூனியனில் சின்மயி பக்கம் நியாயம் இருந்தால் அதை நீதிமன்றமே பெற்றுத்தரும்..
ஆங்கரா? வழக்கறிஞரா?
பேசுறதுக்கு ஒரு சேனல் கிடைச்சிட்டால் என்ன வேணும்னாலும் பேசறதா? ஒரு சேனலை நேர்மையாக நடத்த தெரியாதா? பணம் கிடைத்தால் என்ன வேணும்னாலும் பேசுவதா?
கவிஞர் மீதான வழக்கு வேறு, டப்பிங் யூனியன் மீதான வழக்கு வேறு.. இவை அனைத்துமே கோப்புகளில் உள்ளது.. கோப்பில் உள்ளதை சேனலில் வைத்து பஞ்சாயத்து பேச முடியாது.. அதேபோல ஒரு சேனலின் ஆங்கர் , வழக்கறிஞராகிவிட முடியாது" என்று காட்டமாக கூறியிருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications