விஜய் பேசிய அந்த கெட்ட வார்த்தை.. 5 ஆண்டாக துடிதுடித்து போனேன்.. என்ன சொல்கிறார் பாடகி சின்மயி?
சென்னை: லியோ படத்தில் திரிஷாவிறகு டப்பிங் பேசிய சின்மயி, அதில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை குறித்து யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோ படம் பல்வேறு விமர்சனங்களை பெற்றுள்ளது. அதாவது அதன் டிரெயிலரில் பெண்களை மிகவும் அவதூறாக கூறப்படும் ஒரு கெட்ட வார்த்தையை விஜய் கூறியிருப்பார்.

அது சினிமாவில் பீப் ஒலி போடப்பட்டாலும் டிரெய்லரில் வந்துவிட்டது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜய் அரசியலுக்கு வரும் எண்ணத்தில் இருக்கும் நிலையில் அவர் எப்படி அப்படி ஒரு வார்த்தையை பேசலாம், ஏன் டிரெய்லரிலும் பீப் போட்டால்தான் என்ன?
பீப் போடாத அளவுக்கு படத்திற்கு அத்தனை தேவையான டயலாக்கா அது என்றெல்லாம் கேள்வி எழுப்பப்பட்டது. இந்த படத்தில் விஜய்யின் மாறுபட்ட நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. அது போல் எல்சியு படம் என்பதாலும் அது ரசிகர்களை பெருமளவில் குதூகலித்துள்ளது. இந்த திரைப்படத்தில் திரிஷாவுக்கு சின்மயிதான் டப்பிங் பேசியுள்ளார்.
இவர் பாடகி, டப்பிங் கலைஞர், சமூக ஆர்வலர் உள்ளிட்ட பன்முகங்களை கொண்டுள்ளார். இவர் மீ டூ இயக்கத்தின் மூலம் அளித்த புகாரை அடுத்து தமிழ் சினிமாவில் பணியாற்ற 5 ஆண்டுகள் தடைவிதிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது அவர் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்த படம் குறித்து அவர் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில் விஜய் பேசியிருக்கும் அந்த கெட்ட வார்த்தை டிரெய்லர் வெளியான நிலையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் நான் டப்பிங் பேசிய போது அதை கவனிக்கவில்லை. ஆனால் விஜய் அப்படியொரு வார்த்தையை பேசியதில் எனக்கு வருத்தம் இருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாக தன்னை விஜய் கூறிய கெட்ட வார்த்தையை வைத்துதான் பலர் விமர்சித்து வந்தனர். இதனால் நான் மனதளவில் மிகவும் கஷ்டப்பட்டேன். முதலில் எனக்கு கவலையாக இருந்தாலும் , தொடர்ந்து அந்த வார்த்தையை என் மீது பயன்படுத்தியதால் எனக்கு அது மரத்து போய்விட்டது என்றார். மீ டூ என்ற ஹேஷ்டேக் மூலம் பெண்கள், குழந்தைகள் தனக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறார் சின்மயி. அப்படி இவர் கொண்டு வந்ததுதான் சென்னையில் பிஎஸ்பிபி பள்ளியில் ஆசிரியர் ராஜகோபாலன் தனது மாணவிகளிடம் நடந்த அத்துமீறல் சம்பவம்! அவர் சிறையில் அடைக்கப்பட்டது எல்லாமே!












Click it and Unblock the Notifications