இளையராஜா கேட்ட ஒரு வார்த்தை.. எம்.ஏ டிகிரியையே தியாகம் செய்துவிட்டாராமே சித்ரா..!?
சென்னை: பாடகி சித்ரா இளையராஜா வார்த்தையை மீற முடியாமல் தன்னுடைய எம்.ஏ எக்ஸாமை தவற விட்டு விட்டதாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
ஒரே ஒரு பாடலுக்காக தன்னுடைய தன்னுடைய எம்.ஏ படிப்பை தியாகம் செய்த சித்ரா அது குறித்து மேலும் பல தகவல்களை கூறியிருக்கிறார்.
"சின்னக்குயில்" சித்ரா என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் சித்ரா எப்போதும் சிரித்த முகமாக இருப்பதைத்தான் அனைவரும் பார்த்திருப்பார்கள். பலருக்கும் சோகத்தில் இருந்து விடுபடுவதற்கு சித்ராவின் பல இனிமையான பாடல் தேவைப்படுகிறது.

தென்னிந்திய சினிமாவில் காதல், மெலடி, சோகம், தெய்வீகம் என பலவிதமான பாடல்களையும் பாடி ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்த பின்னணி பாடகி சித்ரா 1985 ஆம் ஆண்டு வெளியான "சிந்து பைரவி" திரைப்படத்தில் இடம்பெற்ற "நான் ஒரு சிந்து" என்ற பாடல் மூலமாகத்தான் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.
அந்த பாடலில் இடம் பெற்ற "என் விதியை அப்பவே தெரிந்திருந்தால் கர்ப்பத்தில் நானே கரைந்து இருப்பேன்" என்ற வரிகள் பலருடைய ஸ்டேட்டஸ் சாங்குகளில் தவறாமல் ஒலிக்கும் ஒரு பாடலாக இடம் பிடித்து விடுகிறது. பொதுவாக நம்முடைய நண்பர்களின் ஸ்டேட்டஸில் இந்த ஒரு பாடல் ஏதாவது ஒரு நண்பர் கண்டிப்பாக வைத்து விடுகிறார். அந்த அளவிற்கு இப்போதும் பலருடைய மனதில் அந்த பாடல் ரிங்காரம் இட்டுக் கொண்டிருக்கிறது.
சிந்து பைரவி திரைப்படத்தை தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து அதிகமான ரசிகர்களை தன்னுடைய பாடலுக்கு அடிமையாக வசியப்படுத்தி வைத்திருக்கிறார். இளையராஜா, ஏ.ஆர் ரகுமான், கங்கை அமரன், சங்கர் கணேஷ், எம்.எஸ்.வி, தேவா உட்பட பல இசையமைப்பாளர்களின் இசையில் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள சித்ராவிற்கு ஆறு முறை சிறந்த பாடகிக்கான தேசிய விருதும் கிடைத்திருக்கிறது.
இந்த நிலையில் பிரபல youtube சேனல் ஒன்றுக்கு சித்ரா பேட்டி அளிக்கையில், சிந்து பைரவி படத்தில் "பாடறியேன் படிப்பறியேன்" என்ற பாடலை பாட மறுத்ததாக கூறப்படுகிறது என்ற கேள்விக்கு நான் அப்படி பாட முடியாது என்று சொல்லல்ல, என்னை "நான் ஒரு சிந்து" என்ற பாட்டுக்கு தான் இளையராஜா சார் கூப்ட்டு இருந்தாரு.

ஆனா காலையில் அந்த பாடலை நான் பாடி முடிச்சிட்டேன். அப்புறம் மாலையில் எங்க அப்பா ட்ரெயின் புக் பண்ணி இருந்தார். அதனால நாங்க கிளம்பிட்டு இருந்தப்போ ராஜா சார் இன்னொரு பாட்டு இருக்கு அதையும் பாடிட்டு போக முடியுமான்னு கேட்டார்.அப்போ அப்பா எனக்கு நாளைக்கு எம்.ஏ முதலாம் ஆண்டு எக்ஸாம் இருக்குன்னு சொன்னார்.
அதற்கு ராஜா சார் எம்.ஏ எல்லாம் அப்புறம் பண்ணிக்கலாம். அதுக்கு மேல இதுல வரப்போகுது என்று சொன்னார். ராஜா சார் சொல்லும்போது தவிர்க்க முடியல. அந்த பாட்டை பாடிட்டு போனேன். அதனால அடுத்த நாள் எம்.ஏ எக்ஸாம் எழுதல. ஆனா அப்பா அந்த எக்ஸாம் கண்டிப்பா எழுதணும்னு சொன்னாரு. ஆனா நான் கொஞ்சம் சோம்பேறி என்பதால் அந்த எக்ஸாம் எழுதல. என்று சிரித்தபடியே பேசி இருக்கிறார்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம்












Click it and Unblock the Notifications