வேற லெவல்.. இவர் யார் தெரியுதா? “பாடி பில்டர்" கிடையாதுங்க.. தமிழ் சினிமாவின் டாப் பாடகராக இருந்தவர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நம்முடைய சந்தோஷங்களையோ துக்கங்களையோ கொண்டாடுவதற்கும் அல்லது அதை ஃபீல் பண்ணுவதற்கும் நம்முடைய மனதிற்கு பிடித்த பாடல்கள் மிக மிக அவசியம். அந்த மாதிரி ஒரு சில பாடகர்கள் பாடிய பாடல்கள் எப்போதும் எவர்கிரீனாக மனதில் இருக்கும். அந்த வகையில் பலருடைய மனம் கவர்ந்த பாடகர் ஜெயச்சந்திரனின் பிறந்த நாள் நேற்று பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது.

அதே நேரத்தில் பாடகர் ஜெயச்சந்திரனின் சில புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதை பார்த்ததும் ரசிகர்கள் வியந்து போயிருக்கின்றனர். 80 வயதை கடந்து விட்ட ஜெயச்சந்திரன் இப்போதும் இளமை குரல் குறையாமலும், உடம்பை கட்டுக்கோப்பாக வைத்து பலருக்கும் முன்மாதிரியாக இருக்கிறார். அதே நேரத்தில் ஜெயச்சந்திரன் என்கிற பெயர் சிலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் எத்தனை பாடல்கள் பாடி இருக்கிறார்? இத்தனை திரைப்படங்களில் வெற்றிக்கு காரணமாக இருந்திருக்கிறார் என்ற ரகசியம் பலருக்கும் தெரிந்திருக்காது அது பற்றி விரிவாக பார்க்கலாம்.

singer Jayachandran latest photos and he singing good songs

ஒரு சிலருடைய குரல்கள் தான் எல்லோருக்கும் பிடித்த குரலாக இருக்கும். முக்கியமாக எல்லா இசையமைப்பாளர்களுக்கும் அந்த குறிப்பிட்ட ஒரு சிலருடைய குரல் பேவரைட் ஆக அமைந்திருக்கும். அப்படி இசையமைப்பாளர்களின் உணர்வுக்கு தக்க குரல் கிடைத்துவிட்டால் அவர்கள் உணர்வுகளை உசுப்பி விடும் பாடல்களை அந்த குரல் நமக்கு கடத்தி வந்துவிடும். அந்த வகையில் பல இசையமைப்பாளர்களை கவர்ந்து மக்களின் மனதை மயக்கிய குரல்தான் ஜெயச்சந்திரனின் குரல்.

இவர் கடவுளின் தேசம் என்று சொல்லப்படும் கேரளாவில் பிறந்து இருக்கிறார். அதுபோல ஜெயச்சந்திரனின் அப்பா மிகப்பெரிய இசை கலைஞர். கொச்சி அரச பரம்பரையை சார்ந்தவர். ஆனாலும் எளிமையாக தன்னைப் போலவே தன்னுடைய மகனின் வாழ்க்கையை கொண்டு போய் இருக்கிறார். ஆனால் ஜெயச்சந்திரன் தன்னுடைய அம்மாவின் ஆசை படி மிருதங்கம் கற்று இருக்கிறார். பள்ளியில் படிக்கும் போது மிருதங்கம் வாசித்து பல பரிசுகளை பெற்று இருந்த ஜெயச்சந்திரன் அடுத்த கட்டமாக பாட்டு போட்டியிலும் கலந்து கொள்ள ஆரம்பித்திருக்கிறார்.

அதிலும் அவருக்கு பரிசுகள் கிடைக்க தொடங்கி இருக்கிறது.. மாநில அளவிலான மாணவர்களுக்கான போட்டியில் மிருதங்கத்துக்காக முதல் பரிசு பெற்ற ஜெயச்சந்திரன் தேவாலயங்களில் பாட்டு பாடி பலரையும் மெய்மறந்து போக வைத்திருக்கிறார். அதற்கு பிறகு பட்டப்படிப்பை முடித்துக் கொண்டு சென்னைக்கு வந்த ஜெயச்சந்திரன் கையில் டிகிரியையும் மிருதங்கத்தையும் வைத்திருந்தாலும் தன்னுடைய பாட்டு திறமையின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருக்கிறார்.

அந்த நேரத்தில் தான் 1965 ஆம் ஆண்டு போருக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்று இருக்கிறது. இதில் ஜெயச்சந்திரன் மெய் உருக பாடி பலரையும் வியக்க வைத்திருக்கிறார். அப்போது அந்த பாடலை இந்தியாவின் ஒளிபரப்பு மேதை என்று பலராலும் போற்றக்கூடும் கூடிய இயக்குனர் ஸ்ரீதரின் ஆஸ்தான ஒளிப்பதிவாளரான வின்சென்ட் தயாரிப்பாளர் ஆர் எஸ் பிரபு இருவரும் கேட்டிருக்கிறார்கள்.

singer Jayachandran latest photos and he singing good songs

அப்போது அவர்கள் ஜெயச்சந்திரனை அழைத்து கைகுலுக்கி, தோள்தட்டி பாராட்டி குஞ்சாலி மரக்கார் எனும் படத்திற்கு வாய்ப்பு வழங்கி இருக்கிறார்கள். இந்த படம் தான் ஜெயச்சந்திரன் வாழ்க்கையில் முதல் படமாகவும் அவருடைய திறமைக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் இருந்திருக்கிறது. அதைத் தொடர்ந்து களித்தோழன் என்ற படத்தில் இவருடைய குரலைக் கேட்டு கேரளா மக்கள் கட்டுண்டு இருந்து இருக்கிறார்கள்.

அதை தொடர்ந்து 1972 ஆம் ஆண்டு மெல்லிசை மன்னர் என்று அனைவராலும் அழைக்கப்படும் எம் எஸ் விஸ்வநாதன் பணி தீராத வீடு என்ற மலையாள படத்தில் இவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அந்த படம் மிகப்பெரிய ஹிட் அடித்தது அதற்குப் பிறகு விஸ்வநாதன் மூலமாகத்தான் தமிழில் மூன்று முடிச்சு என்ற திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தில் இரண்டு பாடல்களை கமனுக்காக ஜெயச்சந்திரன் பாடியிருக்கிறார்.

அதுவும் அந்த படத்தில் இடம்பெற்ற "வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்" என்ற பாடலும் "ஆடி வெள்ளி தேடி உன்னை" என்ற பாடலும் பலருடைய ஃபேவரைட் பாடல்களாக இடம் பிடித்தது. தமிழில் முதல் படத்தில் கமலின் குரலை ஒன்றும் அவருடைய ஸ்டைலிலேயே இந்த பாடல்கள் இடம் பிடித்திருந்ததால் இவருக்கு ரசிகர்கள் உருவாக்க தொடங்கியிருந்தனர். கேரளாவில் சார்ந்தவராக இருந்தாலும் அவருடைய பாடல்களில் மலையாளவாசம் இல்லாமல் இருந்தது இவருக்கு மேலும் சிறப்பாக அமைந்தது.

அதனாலையே ரசிகர்கள் இவருடைய குரலில் ஜெயச்சந்திரன் உடைய குரலில் ஜேசுதாஸ் ஸ்டைல் பாதியும் எஸ்பிபி ஸ்டைல் பாதியும் இருக்கு ஆனால் இது ஒரு புதிய விதமான ட்ராகாக இருக்கு என்று இவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாக தொடங்கி விட்டார்கள். எழுபதுகளின் மத்தியில் இளையராஜா எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் காற்றினிலே வரும் கீதம் என்ற திரைப்படத்திற்கு இளையராஜா இசை அமைத்தார்.

இந்த திரைப்படத்தில் சித்திரச்செவ்வானம் சிரிக்க கண்டேன் என்ற பாடலை ஜெயச்சந்திரன் பாடி இருக்கிறார். அதைத்தொடர்ந்து இளையராஜாவின் மனம் கவர்ந்த பாடகராகவும் ஜெயச்சந்திரன் மாறி இருக்கிறார். அதுபோல பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் 'மாஞ்சோலை கிளிதானே மான் தானோ வேப்பம் தோப்புக்குயிலும் நீ தானோ' என்ற பாடல்களில் இவர் பாடிய விதத்தைக் கேட்டு கண்மூடி பாடல் கேட்கும் ரசிகர்களையும் நீரோடையை காண செய்துவிட்டார்.

அதுபோல ஏ ஆர் ரகுமான் இசையில் கிழக்கு சீமையிலே படத்தில் இடம்பெற்ற "கத்தாழம் காட்டுவழி" என்ற பாடல் மூலமாக திருமணம் ஆகி கணவர் வீட்டுக்கு போகும் பெண்களின் வலியை பாடலாக உதிர்த்திருந்தார். அந்த பாடலுக்காக தமிழக அரசின் விருதையும் பெற்றிருந்தார். அதுபோல 1973 ஆம் ஆண்டு லலிதா என்பவரை திருமணம் செய்து கொண்ட ஜெயச்சந்திரனுக்கு ஒரு மகளும் ஒரு மகனும் இருக்கின்றனர்.

இவர் என்பது வயதை தாண்டி 81 வது வயதில் பயணிக்கிறார். இசைத்துறையில் 75 ஆண்டு பயணிக்கிறார். இவரை பாராட்டி நிகழ்ச்சிகள் நடத்துவதற்காக யாரேனும் சென்றால் கூட அவர் அதற்கு ஒத்துக்கொள்வது கிடையாது. அதுபோல ரீமேக் என்ற பெயரில் வரும் கலாச்சாரத்தை இவர் ஏற்று கொள்வதும் கிடையாது. அது மட்டுமல்லாமல் ஆங்கில மொழி கலந்து பாடவும் இவர் மறுத்து விடுகிறார்.

singer Jayachandran latest photos and he singing good songs

80 வயதை கடந்தாலும் இவருடைய குரல் இன்னும் மார்க்கண்டேயன் மாதிரி இளமையாக ஒலித்துக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் இவர் பாடிய ஒரு சில பாடல்களை உங்களுக்காக நினைவுபடுத்த விரும்புகிறோம். வைதேகி காத்திருந்தால் திரைப்படத்தில் இடம் பெற்ற ராசாத்தி உன்னை காணாத நெஞ்சு,

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி,

கொடியிலே மல்லிகைப்பூ,

மயங்கினேன் சொல்ல தயங்கினேன்,

வெள்ளையாய் மனம் பிள்ளையாய்,

சொல்லாமலே யார் பார்த்தது,

ஒரு தெய்வம் தந்த பூவே,

பொன்னென்ன பூவென்ன கண்ணே,

உன் கண்ணாடி உள்ளத்தில் முன்னே,

கல்யாண பெண்ணாக உன்னை,

தாலாட்டுதே வானம் தள்ளாடுதே மேகம்... என்று பல பாடல்கள் இருக்கிறது. அதில் உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கமெண்டில் தட்டி விடுங்க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+