செம ஜாலிப்பா.. சரியா புடிச்சாங்க பாடகர் மனோவை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஒரு நிகழ்ச்சி என்றாலும் சரி, சீரியல்கள் என்றாலும் சரி, சன் டிவியைப் பொறுத்தவரை ஸ்ட்ரிக்ட் ஆஃபீசர். டாக் ஷோ சிங்கிங் ஷோ என்று எதை எடுத்துக் கொண்டாலும் சீரியஸ் மூடில்தான் அது இருக்கும்.

ஆனால், விஜய் டிவி, ஜீ தமிழ் டிவி இதெல்லாம் கொஞ்ச ஜாலி டைப்பில் நிகழ்ச்சியை நடத்தும். ரியாலிட்டி ஷோக்களை அவ்வளவு சீக்கிரத்தில் மற்ற இரண்டு சேனல்களும் முடித்துவிட மாட்டார்கள்.

அத்துடன், நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக எதையும் பேசலாம். ஆனால், சன் டிவியில் அப்படி கிடையாது. சொல்லி கொடுத்ததை சொல்லிக் கொடுத்த மாதிரிதான் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் பேச வேண்டும்.

singer mano joins sun tv super singer

ஆதவன் முத்து நடத்தும் காமெடி ரியாலிட்டி ஷோவைத் தவிர, மற்ற ரியாலிட்டி ஷோக்களை கவனித்தால் சன் டிவி ஸ்டிரிக்ட் ஆஃபீச்சர் என்று தெரியும். ஆனால், இவர்களும் தங்களது பாணியை மாற்றிக்கொள்ள .வேண்டும் என்று,மக்களை குதூகலப்படுத்த வேண்டும் சில நிகழ்ச்சிகளில் என்று முடிவு செய்து இருக்கிறது சன் டிவி.

சன் சிங்கரில் மனோவை அழைத்து இருப்பதன் ரகசியமும் இதுதான். பாடகர் மனோ நிறையவே நகைச்சுவை உணர்வு கொண்டவர். இவரோடு,சிலர் சேரும் போது நிகழ்ச்சி கலகலக்கும். இதை உணர்ந்த சன் டிவி நடுவர்களில் ஒருவராக பாடகர் மனோவை அழைத்து அமர வைத்துள்ளனர்.

இப்போது சன் டிவியின் சன் சிங்கர் நிகழ்ச்சி ரொம்ப ஜாலியாக சென்றுகொண்டு இருக்கிறது. ஒரு சில எபிசோடுகளில் ஆதவன் வந்து நகைச்சுவை என்கிற பெயரில் ஏதோ செய்துக்கொண்டு இருப்பதை சகிக்க முடியாமல் போன நிலையில், சன் டிவியே அவரின் வரவை நிறுத்தி விட்டது.

இப்போது ஞாயிறு தோறும் பகல் 2 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சன் சிங்கர் நிகழ்ச்சியில் மனோ சார் நகைச்சுவை, திறமையான போட்டியாளர்களின் இனிமையான பாடல்கள் என்று நிகழ்ச்சியே மனோ-களை கட்டி உள்ளது. நிகழ்ச்சியை ஜாலியாக ரசிக்க முடிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+