கமல்ஹாசன் உடன் ஒரு போட்டோ எடுக்க ஆசைப்பட்டேன்! ஆனால் அவர் செய்த செயல் மறக்க முடியாது! பாடகி உருக்கம்
சென்னை: பாடகி பத்மலதா சமீபத்தில் பகிர்ந்த ஒரு அனுபவம், ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. ஒரு பெரிய கலைஞனை நேரில் சந்தித்த தருணம் எப்படி வாழ்நாள் முழுவதும் நினைவாக மாறுகிறது என்பதற்கு அவர் கூறிய இந்த சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
பாடகி பத்ம லதா தமிழில் மட்டுமல்லாமல் பல மொழிகளிலும் பல ஹிட்டான பாடல்களை பாடி இருக்கிறார். அதிலும், நேற்று இன்று நாளை படத்தில் காதலே காதலே, தனி ஒருவன் படத்தில் கண்ணாளா கண்ணாளா, ஒரு நாள் கூத்து படத்தில் அடியே அழகே, தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தில் இடம்பெற்ற தீராத விளையாட்டுப் பிள்ளை உட்பட பல பாடல்களை பாடி இருக்கிறார்.

கமல்ஹாசன் ரியாக்ஷன்
பத்ம லதா கமல்ஹாசனை ஒரு சூட்டிங் ஸ்பாட்டில் தான் முதன்முறையாக நேரில் பார்த்தாரா. அப்போது மிகவும் தயக்கத்துடன், "சார்... நான் உத்தம வில்லன் படத்தில் உங்களுடன் காதலாம் கடவுள் பாடல் பாடி இருக்கிறேன்... உங்களுடன் ஒரு போட்டோ எடுத்துக்கலாமா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு கமல் மிகவும் சாதாரணமாக, அந்த பாடலை நினைவுபடுத்திக் கொண்டு, அது மிகவும் அழகான பாடல் என்று பாராட்டியதோடு அருகில் இருந்த தனது மகள் ஸ்ருதி ஹாசனை அழைத்து, "இவங்களை யாருன்னு தெரியுதா? 'காதலாம்' பாடலைப் பாடியவர் இவர்கள் தான்" என்று பெருமையாக அறிமுகப்படுத்தியிருக்கிறார்.
அதிலும் ஆச்சரியம் என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களை ஒவ்வொருவராக அழைத்து, அவரை பற்றிக் கூறிக் கொண்டே இருந்தாராம். "இவ்வளவு பெரிய நடிகர்... ஆனாலும் எந்த விதமான பிம்பமும் இல்லாமல் இவ்வளவு இயல்பாக நடந்துகொண்டார்" என்று அந்த தருணத்தை பத்மலதா நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்கிறார்.
ஆசிர்வாதம்
பிறகு அவரிடம் ஆசீர்வாதம் பெற காலில் விழ முயன்றபோது, உடனே கமல் தடுத்து "இதெல்லாம் வேண்டாம்" என்று சொல்லியதாகவும், பின்னர் அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தனது வாழ்க்கையின் மறக்க முடியாத பொக்கிஷமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கமலின் எளிமை
ஒரு பாடகியை சந்தித்த அந்த நொடியில் கூட, அவர் செய்த சாதனைகளை நினைவில் வைத்து அங்கிருந்த அனைவரிடமும் பெருமையாகச் சொல்லிக் கொண்ட கமலின் எளிமை - அதுவே அந்த நாளை பத்மலதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டது. இது பற்றி பத்ம லதா பேசிய தகவல்களை கமல்ஹாசன் ரசிகர்கள் பகிர்ந்து அவரை பாராட்டி வருகிறார்கள்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications