பாடகி ராஜலட்சுமி கணவர் குறித்து உருக்கமான பதிவு.."குறைகளால காதல் தொலஞ்சிராம” காரணம் இதுதானாம்
சென்னை: பாடகி ராஜலட்சுமி தன்னுடைய கணவர் குறித்து தன்னுடைய 11 வது திருமண நாளில் காதல் கவிதைகளை பொழிந்து இருக்கிறார்.
திருமண நாளில் தனக்காக தன்னுடைய கணவர் 11 வருடங்களாக தனக்கு தந்த சம பாதி உரிமைகள் குறித்து அந்த கவிதையில் கலந்திருக்கிறார்.
அதுபோல ராஜலட்சுமி குறித்தும் அவருடைய கணவர் இறைவன் தந்த வரமே என்று உருக்கமாக வார்த்தைகளை பகிர்ந்திருக்கிறார்.

நாட்டுப்புற கலைஞர்களாக ஒரு சில இடங்களில் மட்டுமே பரிச்சயமாகி இருந்துவந்த ராஜலட்சுமி மற்றும் செந்தில் கணேஷ் ஜோடி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலமாக பட்டி தொட்டி எல்லாம் பிரபலமாக தொடங்கியிருக்கின்றனர். இவர்கள் இருவருமே திரைப்படங்களில் பின்னணி பாடல்கள் பாடிக் கொண்டிருக்கும் முன்னணி பாடகர்கள் ஆக மாறி இருக்கின்றனர்.
ஆரம்பத்தில் இவர்கள் திருவிழாக் கூட்டங்களிலும் கச்சேரிகளிலும் பாடல்களைப் பாடி கொண்டிருந்தவர்கள் இன்று உலகம் முழுவதும் இவர்களுடைய பாடல் முனுமுனுக்க தொடங்கி இருக்கின்றது. ஆரம்பத்தில் கடை கோடியில் இருந்தவர்கள் முன்னேற்றத்தின் பாதையில் பயணிக்கத் தொடங்கியதும் ஏராளமான கருத்துக்கள் வருவது போலத்தான் இவர்களுக்கும் அதிகமான நெகட்டிவ் கமெண்டுகள் வந்து கொண்டு இருக்கிறது.
சமூக வலைத்தளத்தில் இவர்கள் ஆக்டிவாக இருந்து வருவதால் பல்வேறு கருத்துகளையும் இவர்கள் சந்தித்து தான் வருகின்றனர். ரசிகர்கள் பலர் இவருக்கு ஆதரவு கொடுத்தாலும், ஒரு சில நெட்டிசன்கள் இவர்கள் செய்யும் செயல்களுக்கு அதிகமாக கலாய்த்து வருகின்றனர். எப்போதுமே தங்களுடைய ரசிகர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் இவர்கள் தங்களுடைய முன்னேற்றத்தில் கவனமாக இருந்து வருகின்றனர்.
இந்த நிலையில் தங்களுடைய 11 வது திருமண நாளுக்காக instagram பக்கத்தில் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ் இருவரும் மாறி மாறி போஸ்ட்களை தட்டி விடுகின்றனர். அதில் ராஜலட்சுமி தனக்கு தன்னுடைய கணவர் மேடையில் பூ கொடுத்ததம்,தானும் தன்னுடைய கணவரும் இதுவரைக்கும் ஜோடியாக எடுத்த பல வீடியோக்களையும் அதில் பகிர்ந்து இருக்கிறார்.

அதுபோல இன்னொரு பதிவில் ராஜலட்சுமி," காதலிக்கும் போது காதல் மட்டுமே கண்ணுக்கு தெரியும். ஆனால் காதல் ஒன்றாக சேர்ந்து வாழும் போது தான் குறைகளும் தெரிய ஆரம்பிக்கும். குறைகளால் காதல் தொலைஞ்சுராம காப்பாத்த பேரன்பு இருந்தா தான் சாத்தியம். என்னோட குறைகளோடு சேர்த்து என்னையும் கல்யாணம் ஆகி 11 வருஷம் கொஞ்சமும் சலிக்காமல் இன்னமும் இன்னும் அதிகமா காதலிக்கும் அன்பாளன்.
கலவியில் மட்டுமின்றி பொது வாழ்விலும் குடும்பம் சார்ந்த எல்லா முடிவுகளிலும் எப்போதும் சமபாதி தரும் முற்போக்கு சிந்தனையாளன். நரைக்கூடும் வயதிலும் கரம் பற்ற நீ அருகில் இருந்தால் போதும். வாழும் வாழ்க்கை சொர்க்கமே என்று ஒரு கவிதையும் பகிர்ந்து இருக்கிறார்.
சாண்டி மாஸ்டர் மகள் இவ்வளவு வளர்ந்து விட்டாரா? பிறந்த நாளில் குவியும் வாழ்த்துக்கள்
அதுபோல செந்தில் கணேஷ், நானும் உன் மீது பாசம் குறைவாக வைத்திருக்கும் ஆள் கிடையாது என்பது போல, இறைவன் தந்த வரமே என்னை உன்னை அன்றி யார் அறிவார். என்னை இந்த இனிய நாளில் உன்னை கரம் பிடித்து இன்றோடு பதினோரு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. இன்னும் பல ஆண்டுகளை இதே பேரன்போடும் பெரியோர் ஆசியோடும் கடக்க இறைவனை வேண்டுகிறேன் என்று கூறியிருக்கிறார். இவர்கள் இருவருக்கும் தற்போது ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.
-
பாரதிராஜாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு.. தீவிர மருத்துவ கண்காணிப்பு! இமய இயக்குனருக்கு என்ன ஆச்சு -
"குடும்ப வாழ்க்கை” மொத்த சர்ச்சைகளுக்கும் போல்டாக முற்றுப்புள்ளி வைத்த நடிகை சுகன்யா.. பாராட்டும் ரசிகர்கள் -
"29 வயசுல உங்களுக்கு இந்த ஃபீலிங் வந்திருக்கா? Netflix-ல் டிரெண்டாகும் ‘29’ படம் ஏன் இளைஞர்களின் மனசை கலக்குது!" -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
திரிஷா பிரண்ட் நடிகை சார்மியோட மட்டும் ஃப்ரெண்ட்ஷிப் வச்சுக்காதீங்க! எச்சரித்த விஜய் சேதுபதி! பின்னணி காரணம் -
மன்னிப்பு கேட்டும் ஓயாத சர்ச்சை... ரவி மோகனுக்கு என்ன ஆச்சு? நீதிமன்றத்துக்கு தெரியாதா? பிரபலம் கேள்வி -
100ஐ தொடாமல் போன சூப்பர் குட் பிலிம்ஸ் RB சௌத்ரி.. காற்றில் கரைந்த ரியல் ஜென்டில்மேனின் கடைசி ஆசை -
நடிகை ஸ்வாசிகா கணவர் பற்றி சொன்ன வார்த்தை.. மலையாள ரசிகர்கள் கோபம்? ஆனால் நெட்டிசன்கள் சப்போர்ட் -
"விஜய் ஜெயிச்சதும் வீட்டிலேயே ஷாக் கொடுத்த குடும்பம்”... போஸ் வெங்கட் சொன்ன ஓபன் ஸ்டேட்மென்ட்












Click it and Unblock the Notifications