பாடகி ராஜலட்சுமிக்கு இவ்வளவு கடனா? விரக்தியில் இப்படி ஒரு முடிவா? நெருடலான வார்த்தை
சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலம் அடைந்த பாடகி ராஜலட்சுமி தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்த கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
எல்லோரும் வெளியில் இருந்து பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருப்பது போல தான் தெரியும் ஆனால் உள்ளே அவர்களுடைய நிலைமை எவ்வளவு கஷ்டமானது என்பது பற்றி அவர்கள் சொல்லும்போது தான் பலருக்கும் தெரிகிறது.
அந்த மாதிரி தான் பாடகி ராஜலட்சுமி வீடு கார் என புதியதாக வாங்கிக் கொண்டு இருந்தாலும் தான் கடனில் இருப்பதாகவும் பல சோகங்களை பகிர்ந்து இருக்கிறார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பட்டி தொட்டி எல்லாம் பிரபலமடைந்த செந்தில்- ராஜலட்சுமி ஜோடி பலருக்கும் பரீட்சயமானவர்கள் தான். இவர்கள் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி இப்போது வெள்ளி திரையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கின்றனர்.

ஒரு பாடகியாக அறிமுகமான ராஜலட்சுமி இப்போது திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். விரைவில் ராஜலட்சுமி நடிக்கும் "லைசன்ஸ்" திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி உருக்கமாக பேசுகிறார்.
ஆரம்பத்தில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ராஜலட்சுமி மற்றும் செந்தில் ஜோடியை பார்த்து அதிகமான ரசிகர்கள் பாராட்டிக் கொண்டிருந்தனர். ஆனால் நாட்கள் செல்ல செல்ல அவர்களுக்கு அடுத்தடுத்த வளர்ச்சி பெற்று வருவதை பார்த்து சிலரால் பொறுத்துக் கொள்ள முடியாமல் சமூக வலைத்தளத்தில் அவர்களை திட்டிக் கமாண்டுகளை வெளியிட்டுக் கொண்டிருந்தார்கள்.
அதுவும் அடுத்தடுத்து ராஜலட்சுமி புது கார், வீடு என என செட்டில் ஆனதை பார்த்து அதிகமானோர் இவர்களுக்கு என்ன இப்போ நல்லா வளர்ந்துட்டாங்க லட்சக்கணக்குல சம்பாதிக்கிறாங்க என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால் சமீபத்தில் பேட்டியில் ராஜலட்சுமி தன்னுடைய உண்மையான நிலவரம் என்ன என்பது பற்றி மனம் திறந்து பேசி இருக்கிறார்.
அதில் அவர் பேசுகையில் எங்களுடைய தொழிலும், வாழ்க்கையிலும் நிறைய சவால்கள் இருக்கிறது. நாங்கள் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டோம். நிறைய சம்பாதித்து விட்டோம் என்று எல்லாரும் சொல்றாங்க. அது பற்றி நிறைய விமர்சனங்கள் வரும். ஆனால் அது உண்மையல்ல. நாங்கள் கொரோனா காலத்தில் பணமில்லாமல் மிகவும் கஷ்டப்பட்டோம்.
வீடு கார் எல்லாமே நாங்க லோன் போட்டு தான் வாங்கினோம். கடனை அடைப்பதற்காக பணம் இல்லாமல் இருந்த நிலையில் பட்ட கஷ்டங்கள் ஏராளம். இப்ப கூட நான் என் கணவர் கிட்ட கேட்பேன் இன்னும் ஒரு முறை கொரோனா காலம் மாதிரி கஷ்டம் வந்தால் நாம என்ன பண்றதுன்னு, அதுக்கு அவர் இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மீண்டும் கிராமத்துக்கே போய்விடலாம் என்று கூறுகிறார். என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications