Mrs Rajalakshmi Caravan: கேரவன் வீடு மாதிரி இருக்குமா? உள்ளே போய் பாத்துரணுமே! ஏங்கிய ராஜலட்சுமி!
சென்னை: கேரவன் எப்படி இருக்கும்னு ஏங்கிக் கொண்டிருந்த காலம் போய் தற்போது நம்ம பேர் போட்டு நமக்குனு ஒரு கேரவன் கொடுத்திருக்காங்க என பூரிப்புடன் பாடகி ராஜலட்சுமி வீடியோ எடுத்து போட்டுள்ளார். விஜய் டிவியில் பக்தி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்காக இந்த கேரவன் இவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாடகி ராஜலட்சுமி தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது: "Caravan எப்டி இருக்கும். அட அது ஒரு வீடு மாதிரி எல்லாமே இருக்கும்...
அப்டியா ஒரு தடவையாவது உள்ள போயி பாத்துரனும்" மேன்னு நெனச்சது ஒரு காலம். இப்ப எங்க பெயர் போட்டு எங்களுக்குன்னு ஒரு Caravan. உண்மையாவே "Goosebumps moment"
நம்ம, நம்ம வேலைய நேசிச்சு செஞ்சிட்டு இருந்தா நம்ம வாழ்க்கை ஒரு நாளு நம்ம நினைச்ச மாதிரி.. இல்ல, நம்ம நினைச்சதை விட சூப்பரா மாறும் அப்படிங்கறதுக்கு இதுவும் ஒரு உதாரணம்.
இந்த வாழ்க்கையை தந்த இறைவனுக்கு, மக்களுக்கும், விஜய் டிவி சூப்பர் சிங்கர் மேடைக்கும், எங்க இயக்குனர் @ravoofa.h.k மேமுக்கும் நன்றி.....
(பக்தி சூப்பர் சிங்கர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ) என ராஜலட்சுமி குறிப்பிட்டுள்ளார். அந்த கேரவனில் மிஸ்டர் செந்தில் கணேஷ், மிஸ்ஸஸ் ராஜலட்சுமி என எழுதப்பட்டிருந்தது. அந்த கேரவனுக்குள் ராஜலட்சுமியும் செந்திலும் நிகழ்ச்சிக்கு ரெடியாகி கொண்டிருந்தனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை மட்டுமில்லாமல் உலக தமிழ் ரசிகர்கள் அனைவருக்கும் பரிச்சயமான இசை பாடகி ராஜலட்சுமி, செந்தில் கணேஷ் ஜோடி. இவர்கள் தற்போது பின்னணி பாடகர்களாகவும் உள்ளனர்.
இவர்கள் வெளிநாடுகளுக்கும் சென்று நிறைய இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்கள். அது தொடர்பான வீடியோக்களையும் இவர்கள் பகிர்ந்து பூரித்திருக்கிறார்கள். இவர்கள் இன்று வெளிநாடுகளுக்கு சென்று பாடுகிறார்கள் என்றால் அதன் பின்னால் ஒரு உழைப்பு உள்ளது என்பதை யாராலும் மறுக்கவே முடியாது.
அதனால்தான் இவர்களுக்கு அடுத்தடுத்து ரியாலிட்டி ஷோக்களில் வாய்ப்புகள் வந்தன. ராஜலட்சுமி கூல் சுரேஷுடன் இணைந்து ஆல்பம் பாடலையும் வெளியிட்டிருந்தார். அது போல் ராஜலட்சுமி, லைசென்ஸ் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் சார்லி சாப்ளின் 2, புஷ்பா ஆகிய படங்களில் பாடியுள்ளார். செந்தில் கணேஷும் தற்போது பாடி வருகிறார். இவர்கள் சொந்த ஊரில் வீடு கட்டியுள்ளனர். கடும் உழைப்பை நம்புவதால் இருவரும் வாழ்க்கையில் ஏற்றம் பெறுகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications