“எள்ளு வய பூக்கலையே” பாடலுக்கு பிறகு பட்ட கஷ்டம்.. ரத்த வாந்தி எடுத்தேன்.. மனம் திறந்த சைந்தவி
சென்னை: பாடகி சைந்தவி பல பாடல்கள் தான் பாடியிருந்தாலும் அசுரன் படத்தில் இடம்பெற்ற எள்ளு வய பூக்களையே என்ற பாடல் பாடிய பிறகு தனிப்பட்ட கஷ்டங்கள் குறித்து பேட்டி ஒன்றில் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இது இணையத்தில் பலருடைய கருத்துக்களை பெற்று வருகிறது.
சைந்தவி, 12 வயதில் இருந்தே பாடல் பாடத் தொடங்கி இருந்தாலும் அன்னியன் படத்தில் இடம்பெற்ற "அண்டங்காக்கா கொண்ட காரி" என்ற பாடல் மூலமாக தான் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார். அதற்குப் பிறகு எண்ணற்ற மெலடி மற்றும் காதல் பாடல்களை பாடி இருக்கும் சைந்தவி சில சீரியல்களுக்கு டைட்டில் பாடல் பாடி இருக்கிறார்.

அதிலும் அத்திப்பூக்கள், வள்ளி, தமிழ்ச்செல்வி, தாலாட்டு, கானா, மீனா, சிங்க பெண்ணே போன்ற சீரியலில் டைட்டில் பாடலை சைந்தவி தான் பாடி இருக்கிறார். அதோடு பள்ளி பருவத்தில் இருந்தே காதலித்து வந்த நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷை திருமணம் செய்து கொண்ட சைந்தவி சமீபத்தில் தான் ஜீவி பிரகாஷை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார்.
அந்த நேரத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் மனம் ஒத்து தங்களுடைய பிரிவை அறிவித்திருந்தனர். அதே நேரத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிலையில் தான் பல பாடல்கள் பாடியிருந்தாலும் அதில் மறக்க முடியாத பாடல்கள் பற்றி சைந்தவி ஒரு பேட்டியில் பேசி இருக்கிறார். அதில் நான் எத்தனையோ பாடல்கள் பாடி இருந்தாலும் "அசுரன்" திரைப்படத்தில் இடம்பெற்ற "எள்ளு வய பூக்கலையே" பாடலை மறக்க முடியாது. அந்த பாடல் வந்த பிறகு அதிகமான பாடல்கள் எனக்கு அதுபோலவே வந்தது.

எல்லோரும் அந்தப் பாடலைப் போலவே பாட சொல்வார்கள். அந்தப் பாடல் கத்தி தொண்டை கிழிய பாட வேண்டும். அதுவும் அடிவயிற்றில் இருந்தே மொத்த எக்ஸ்ப்ரஸனையும் காட்டி அழுதபடித்தான் பாட வேண்டும். சொல்லப்போனால் ஒப்பாரி மாதிரி தான் இருக்கும். அந்த பாடல் பாடும் போது இன்னும் கத்தி பாடுங்க, இன்னும் கத்தி பாடுங்கனு சிலர் சொல்லுவாங்க. இந்த மாதிரி கத்தி பாடுவதால் தொண்டை எல்லாம் ரொம்ப வலிக்கும்.
சில நேரங்களில் ரத்தமே வந்துவிடும். அந்த அளவிற்கு அந்த பாடல்களில் கஷ்டம் இருக்கும் என்று சைந்தவி பேசி இருக்கிறார். சைந்தவி பாடிய பல பாடல்கள் மன கவலைகளை கரைத்து விடும். சில பாடல்கள் காதலை மேலும் பெருக்கெடுக்க வைக்கும். அதோடு ஒரு சில உணர்வுபூர்வமான பாடல்கள் மட்டும் கேட்கும் போதே கண்ணீரை வரவழைக்கும்.
உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் சுறா படத்தில் இடம்பெற்ற தஞ்சாவூர் ஜில்லா காரி பாடல் கேட்கும் போது டான்ஸ் ஆட வைக்கும். அதுபோல மதராசபட்டினம் திரைப்படத்தில் இடம் பெற்ற "ஆருயிரே ஆருயிரே" என்ற பாடல் காதலை ஃபீல் பண்ண வைக்கும், அதுபோல "தெய்வத்திருமகள்" திரைப்படத்தில் இடம் பெற்ற "விழிகளில் ஒரு வானவில்" என்ற பாடல், சகுனி திரைப்படத்தில் இடம் பெற்ற "மனசெல்லாம் மழையே", சுந்தரபாண்டியன் திரைப்படத்தில் இடம் பெற்ற "நெஞ்சுக்குள்ள", தலைவா திரைப்படத்தில் இடம் பெற்ற "யார் இந்த சாலை ஓரம்", தெகிடி திரைப்படத்தில் இடம்பெற்ற "விண்மீன் விதையில்" இப்படி பல பாடல்களை சொல்லிக் கொண்டே போகலாம். அதில் உங்களுக்கு சைந்தவியின் எந்த பாடல் ரொம்ப பிடித்தது என கமெண்டில் தட்டி விடுங்க.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications