சைந்தவி, ஜி.வி. பிரகாஷூக்கு விவாகரத்து வழங்கப்பட்டது.. குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: ":வெளியில் இருந்து வரும் பலர் இப்படி செய்து இருக்கலாம், அப்படி செய்து இருக்கலாம் என பல ஆலோசனைகள் கூறுவார்கள். ஆனால், இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே உண்மை நிலை தெரியும்" என்று சமீபத்தில் அளித்திருந்த பேட்டியில் ஜிபி பிரகாஷ் குறித்து பாடகி சைந்தவி இவ்வாறு கூறியிருந்தார்.. இந்நிலையில், ஜிவி பிரகாஷ் -சைந்தவி இருவருக்கும் சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் இன்று விவாகரத்து வழங்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் ஜிவி பிரகாஷ் குமார்... இவரும் பாடகி சைந்தவியும் பள்ளிக்காலத்திலிருந்தே நட்பில் இருந்து வந்த நிலையில், ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

Sainthavi gv prakash divorce case

சைந்தவி - ஜி.வி. பிரகாஷ்

மகிழ்ச்சியுடன் சென்ற இவர்களது காதல் வாழ்க்கை, கடந்த வருடம் முடிவுக்கு வந்தது.. இதையடுத்து இருவரும் பிரிய போவதாக அறிவித்தனர். இதைக்கேட்டு ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.. இருவருமே மனம் மாறி ஒன்று சேர்ந்து வாழ வேண்டும் என்று இருவரின் ரசிகர்களும் உரிமையுடன் கருத்துக்களை சொன்னார்கள்..

எனினும் தம்பதி இருவரும் விவாகரத்து கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகி, வழக்கு தாக்கல் செய்தனர்.. மனமொத்து பிரிவதாக அறிவித்தார்கள்.

தம்பதி இசை நிகழ்ச்சி

இருவருமே தங்களது பிரிவை அறிவித்தாலும் இசை நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொண்டனர்.. ஜிவி இசையில் சைந்தவி பாடிய பாடல்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலம் என்பதால், இசை நிகழ்ச்சிகளிலும் அந்த பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.. ஒரே மேடையில் ஜிவி இசைக்க, சைந்தவி பாடுவது, ரசிகர்களுக்கு ஆரவாரத்தை ஏற்படுத்தி வருகிறது..

சொந்த வாழ்க்கை வேறு, தொழில் வேறு என்று இருவருமே பக்குவத்துடன் நடந்து கொள்வதையும் ரசிகர்கள் கவனித்தே வருகின்றனர்.. பிரிவுக்கு பின்பும் இருவரிடமும் சுமூகமாக நட்பு இன்னமும் தொடர்கிறது..

எதிர்மறை உணர்வுகள்

சமீபத்தில் சைந்தவி ஒரு பேட்டியில், எங்களுக்குள் பரஸ்பர மரியாதை உள்ளது. நானும் ஜிவியும் இப்போதும் நண்பர்கள். இணைந்து பணியாற்றியும் வருகிறோம். வாழ்க்கை மிகவும் குறுகியது, எந்த நேரத்தில் யாருக்கு வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். இப்படி இருக்கும் இந்த வாழ்க்கையில் எதிர்மறை உணர்வுகளைச் சுமக்க வேண்டிய அவசியம் இல்லை. இருவரும் சேர்ந்து தான் மகளை வளர்க்கிறோம்.

அவள் என்னுடனும், ஜிவியுடனும் மாறி மாறி இருப்பாள். எங்களுடைய பிரிவுக்குப் பிறகு, மகளின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. மகளுக்குத்தான் நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம், அவளுக்காக எங்கள் அன்பில் எந்தக் குறையும் இல்லை, அவளுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் என்று கூறியிருந்தார்.

ஒரே காரில் வந்த தம்பதி

அந்தவகையில், குடும்ப நல கோர்ட்டில் இவர்களின் விவாகரத்து வழக்கு தொடர்ந்து வருகிறது.. கோர்ட்டிலும் ஆஜராகி பிரிவதாக நீதிபதி முன்பு சொன்னார்கள்.. சமீபத்தில்கூட நீதிமன்றத்துக்கு ஜிவி பிரகாஷ், சைந்தவி இருவரும் ஒரே காரில் ஒன்றாக வந்தனர்.

இவ்வளவு அன்புடன் இருக்கும் தம்பதி ஒன்று சேர கூடாதா? எதற்காக இருவரும் பிரிகிறீர்கள்? என்று அப்போதும் ரசிகர்கள் கேட்டார்கள்.. "இவர்களின் விவகாரத்தை புரிஞ்சிக்கவே முடியலியே" என்று குழம்பிப்போய் நெட்டிசன்கள் கமெண்ட் செய்தனர்.

இன்று தீர்ப்பு

கடந்த 25ந் தேதி நடைபெற்ற விசாரணையின்போது ஜி.வி.பிரகாஷ், பாடகி சைந்தவி இருவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அப்போது, பிரியும் முடிவில் உறுதியாக இருக்கிறீர்களா? என்று நீதிபதியும் கேள்வி எழுப்பினார்.. தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று ஜிவி பிரகாஷ், சைந்தவி 2 பேருமே கூறினார்கள்.

சைந்தவியுடன் குழந்தை வளருவதற்கு தனக்கு எவ்விதமான ஆட்சேபனையும் இல்லை என்று ஜிவி பிரகாஷ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.. இதனை கேட்டப் பிறகு இந்த வழக்கின் தீர்ப்பை செப்டம்பர் 30ம் தேதி அறிவிப்பதாக நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், பிரகாஷ் -சைந்தவி இருவருக்கும் விவாகரத்து வழங்கி சென்னை குடும்பநல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+