பாடகர் ஸ்ரீனிவாஸ் மகள் இந்த பிரபலமா? அப்பாவை பற்றி அடுக்கடுக்காக கூறிய குற்றச்சாட்டு
சென்னை: பாடகர் ஸ்ரீனிவாஸ் மகள் சரண்யா ஸ்ரீனிவாஸ் தன்னுடைய தந்தை பற்றி சமீபத்தில் பேட்டியில் பல குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
தந்தையைப் போலவே சரண்யா ஸ்ரீனிவாஸ் ஒரு பாடகியாக தற்போது ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் சிறுவயதில் தான் பள்ளிக்கு செல்லும் போது நான் என்ன வகுப்பில் படிக்கிறேன் என்பது கூட என்னுடைய தந்தைக்கு தெரியாது என்று கூறியிருக்கிறார்.
பொதுவாக ஒரு சில குடும்பத்தில் மட்டும்தான் பெற்றோரின் வழியில் குழந்தைகளும் பயணத்தை தொடங்குகின்றனர். சிலர் வீட்டில் நடிகர்களின் குழந்தைகள் நடிகர்களாக மாறுவதில்லை. பாடகர்களின் குழந்தைகள் பாடகர்களாக மாறுவதில்லை. ஆனால் பாடகர் ஸ்ரீனிவாஸ் போலவே அவருடைய மகளும் இப்போது ஒரு பாடகியாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

பாடகர் ஸ்ரீநிவாஸ் ஒரு பாடகராகவும் பல இசை நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் இருந்து வருகிறார். குறிப்பாக ஏர்டெல் சூப்பர் சிங்கரில் பாடகி சுஜாதா மற்றும் உன்னிகிருஷ்ணன் உடன் இவரும் ஒரு நடுவராக இருந்து எந்த ஒரு குறை இருந்தாலும் போட்டியாளர்களின் மனம் கோணாதபடி சிரித்த முகமாகவே அதை சுட்டிக்காட்டி பலருடைய நன்மதிப்பையும் பெற்று இருக்கிறார்.
அதனால்தான் பாடகர் ஸ்ரீனிவாஸ்க்கு 2017 ஆம் ஆண்டு பிடித்த நீதிபதிக்கான விஜய் டிவியின் தொலைக்காட்சி விருதுகள் வழங்கப்பட்டது. அவர் அதுமட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பாடகராகவும், ஒரு இசை அமைப்பாளராகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார். தந்தைக்கு மகள் சளைத்தவர் அல்ல என்று அவருடைய மகள் சரண்யாவும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
2000 ஆண்டில் வெளியான நடிகர் கமல்ஹாசன் நடித்த தெனாலி திரைப்படத்தின் ஆலங்கட்டி மழை என்ற பாடலை ஏ ஆர் ரகுமான் இசையில் முதன்முதலாக பாடி திரைத்துறையில் ஒரு பாடகியாக அவதாரம் எடுத்த சரண்யா அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் பழகிட்டு பாடல்களையும் பாடிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் தான் சமீபத்தில் ஒரு பேட்டியில் தன்னுடைய தந்தையை பற்றி பல தகவல்களையும் பகிர்ந்திருக்கிறார். அதில் தன்னுடைய தந்தை வீட்டில் அதிகமாக இருக்கவே மாட்டார் என்றும் அடிக்கடி சூட்டிங் சென்று விடுவார். அப்படியே வீட்டில் இருந்தாலும் அவர், அவர்கள் இருக்கும் ஏரியாவின் செக்ரெட்டியாக இருப்பதால் அங்கே தண்ணீர் வரவில்லை அது பிரச்சனை இது பிரச்சனை என்று பல பிரச்சனைகள் வந்து கொண்டிருப்பதற்கு இவர் ஃபோன் பண்ணி தீர்த்து வைத்துக் கொண்டே இருப்பார் என்றும் கூறியிருக்கிறார்.

அதுபோல ஒரு முறை பாடகி சரண்யா தன்னுடைய அப்பாவிடம் பள்ளிக்கு போக வேண்டும் என்று கூப்பிட்டாராம். அதற்கு நீ எந்த வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறாய் என்று ஸ்ரீனிவாஸ் கேட்டிருக்கிறார். அந்த அளவிற்கு தான் எங்கள் அப்பா வீட்டில் நேரத்தை ஒதுக்கி கொண்டிருக்கிறார் என்று கூறியிருக்கிறார். அதோடு நான் பள்ளி படிப்பு முடித்து கல்லூரி படிப்பு எல்லாம் முடித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால் ஒரே ஒருமுறை எல்கேஜியில் என்னை ஸ்கூல் சேர்ப்பதற்காக மட்டும்தான் என்னுடைய அப்பா எனக்காக வந்திருக்கிறார் என்றும் பல ரகசியங்களையும் உடைத்து இருக்கிறார்.
தற்போது சரண்யா ஸ்ரீனிவாஸ்க்கு திருமணமே முடிந்துவிட்டது. ஆனாலும் அவருடைய அப்பா வெளியே தான் நேரத்தை எப்போதும் செலவழித்துக் கொண்டு இருப்பார் என்று அவரை அருகில் வைத்துக் கொண்டே அவரை கலாய்த்து எடுத்திருக்கிறார்.
-
“வைகை அணையில் கூலி வேலை பார்த்த இளையராஜா, இசைஞானி ஆனது எப்படி? முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா?” -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications