ஏ.ஆர் ரகுமானை பார்த்து பயந்த எம்.எஸ் விஸ்வநாதன்.. தூது போன பாடகர் எஸ்.பி.பி.. "நெகிழ்ச்சியான” காரணம்
சென்னை: இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ராமமூர்த்தி உடன் இணைந்து சில படங்கள், இளையராஜாவுடன் சேர்ந்து மூன்று படங்கள், தனியாக 950 திரைப்படங்களுக்கு இசையமைத்த தமிழ் சினிமாவின் பெரும் சாதனைக்கு சொந்தக்காரர் ஆவார்.
அதுமட்டுமின்றி இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், கங்கை அமரன், தேவா, துவங்கி இப்பொழுதுள்ள யுவன் சங்கர் ராஜா,ஜி.வி.பிரகாஷ் வரை பிற இசையமைப்பாளர்கள் இசையில் பாடல்களையும் பாடியுள்ளார்.
இதில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாடும் பொழுது தனது தந்தை எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை அவரது மகன் கூறியுள்ளார்.
நாம் பள்ளிகளில், பொது நிகழ்ச்சிகளில் தொடக்க நிகழ்ச்சியாக பாடப் பெரும் "நீராரும் கடலுடுத்த" என்று துவங்கும் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு இசை அமைத்தவரும், தமிழ் சினிமாவின் மெல்லிசை மன்னர் என்று போற்றப்பட்ட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பற்றி அவரது மகன் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ள வீடியோவில் உள்ள சம்பவங்கள் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் வெள்ளந்தி குணத்திற்கு மேலும் ஒரு சான்றாக இருப்பதாக விஸ்வநாதன் பற்றி அறிந்த பலர் அவரது நினைவுகளை கமெண்ட் பாக்ஸ்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

சங்கமம் படத்தில் ஏ ஆர் ரகுமான் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களை பாடுவதற்கு அழைத்த போது முதலில் சம்மதம் தெரிவித்து விட்டார். பின்பு என்னதான் நாம் பெரிய இசை அமைப்பாளராக இருந்தாலும் மூன்றாம் தலைமுறை இசையமைப்பாளர்களின் இசை ரசனையுடன் நம்முடைய இசை ரசனை ஒத்து போகுமா..? என்று யோசித்த அவர், ஏ.ஆர்.ரகுமானிடம் சென்று எப்படியாவது இந்தப் பாடலை பாடுவதில் இருந்து தன்னை விட்டு விடும்படியும், வேறு யாரையாவது வைத்து ரெக்கார்ட் செய்து கொள்ளும்படியும் சொல்வோம் என்று எண்ணி ஏ.ஆர் ரகுமான் ஸ்டுடியோவிற்கு சென்றுள்ளார்.
ரெக்கார்டிங் ஸ்டுடியோவிற்கு எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் சென்று பார்த்த பொழுது ஸ்டுடியோவே ஒரே அலங்காரமயமாக காட்சியளித்திருக்கிறது.என்ன.. ..ஏது..?என்று விசாரித்த பொழுது அன்று ஏ ஆர் ரகுமான் பிறந்தநாள் என்றும் அதை கொண்டாடுவதற்காக இந்த அலங்காரம் செய்யப்பட்டிருப்பதாகவும் அறிந்து கொண்டார்.
பிறந்தநாள் அதுவுமாக ஏ ஆர் ரகுமான் சங்கடப்படும் படி எதுவும் சொல்ல வேண்டாம் என நினைத்து, வந்தது தான் வந்து விட்டோம் பாடலை பாடிவிட்டே சென்று விடுவோம் என்று முடிவு செய்துள்ளார். ரெக்கார்டிங் ஸ்டூடியோவிற்குள் சென்று எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் பாடுவதற்கு தயாரான பொழுது ஆர்மோனிய பெட்டியை வாசிப்பவரை வெளியே அனுப்பிவிட்டு அந்த ஹார்மோனி பெட்டியில் வந்து அமர்ந்து ஏ ஆர் ரகுமான் வாசிக்க ஆரம்பித்துள்ளார்.
ஐயா நான் பாடல் சொல்லித் தர மாட்டேன் நீங்களாகவே பாடுங்கள் என்று ஏ ஆர் ரகுமான் சொல்ல... தம்பி நானாக பாட மாட்டேன் நீ சொல்லித் தருவதை தான் பாடுவேன் என்று எம் எஸ் விஸ்வநாதன் ஒருபுறம் அடம்பிடிக்க..... நான் ராகத்தை சொல்கிறேன், நீங்கள் உங்கள் இஷ்டப்படி அந்த ராகத்திற்கு ஏற்றவாறு பாடுங்கள் என்று ரகுமான் கூற ஒரு வழியாக ரெக்கார்டிங் ஆரம்பித்தது. சுமார் 4மணி நேரம் நடந்த ரெக்கார்டிங் முடிந்த பின்பு பாடலை இசைத்து காட்டுமாறு எம் எஸ் வி ரகுமானிடம் கேட்டுள்ளார்.
ஐயா இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது நான் பிறகு உங்களுக்கு போட்டு காட்டுகிறேன் என்று ஏ ஆர் ரகுமான் கூறியுள்ளார். ஒருவேளை நாம் சரியாக பாடவில்லையோ..!! இல்லை நாம் பாடிய பாடல் ரகுமானுக்கு பிடிக்கவில்லையோ..!? என்று குழப்பத்தோடு சென்ற எம் எஸ் விஸ்வநாதன் பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தை பார்த்து ரகுமானிடம் சொல்லி அந்தப் பாட்டை கொஞ்சம் போட்டு காட்ட சொல்லுப்பா என்று ரெக்கமண்ட் கேட்டுள்ளார்.
எஸ் பி பாலசுப்ரமணியம் ரகுமானிடம் சென்று எம்எஸ் விஸ்வநாதன் அவர்கள் கேட்டபடி பாடலை போட்டு காட்ட சொல்லி கேட்டிருக்கிறார்.ரகுமானும் பாடலை ஓரளவிற்கு முடித்துவிட்டு போட்டுக் காட்டியுள்ளார். அதை கேட்ட எம் எஸ் விஸ்வநாதன் தான் பாடிய பாடலா இவ்வளவு அருமையாக வந்துள்ளது என்று ஆச்சரியப்பட்டு போனாராம்.
-
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர்












Click it and Unblock the Notifications