நடிகர் கார்த்திக் குமார் பற்றிய சுசித்ரா குற்றச்சாட்டு! உயர்நீதிமன்றம் வெளியிட்ட அதிரடி உத்தரவு
சென்னை: நடிகை சுசித்ரா தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் குறித்து பல குற்றச்சாட்டுகளை சமீபத்தில் பேட்டிகளில் பேசிக் கொண்டிருந்த நிலையில், கார்த்திக் குமார் தரப்பில் இருந்து ஒரு கோடி மானநஷ்ட ஈடு கோரி வழக்கு தொடர்ந்த நிலையில் அதில் சென்னை உச்ச நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
அதில் நடிகர் கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

ரேடியோ ஜாக்கியாக பிரபலமான பாடகி சுசித்ரா தமிழ், மலையாளம், தெலுங்கு என்று பல மொழிகளில் பாடல்கள் பாடி இருக்கிறார். அதோடு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளான தமன்னா, மாளவிகா, ஸ்ரேயா, லட்சுமி ராய் போன்ற பல நடிகைகளுக்கு டப்பிங் பேசியிருக்கிறார். தமிழில் வெளியான "லேசா லேசா" என்ற பாடல் மூலம் தான் பாடகியாக சுசித்திரா அறிமுகம் ஆகி இருந்தார். அதைத்தொடர்ந்து பல பாடல்கள் பாடி இருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருந்தார்.
அதே நேரத்தில் யாரடி நீ மோகினி, கண்ட நாள் முதல் போன்ற திரைப்படத்தில் துணை நடிகராக நடித்த நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமண 2005 ஆம் ஆண்டு நடைபெற்றது. 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவருக்கும் விவாகரத்து ஆனது. 2016 ஆம் ஆண்டு இவர்களுடைய டுவிட்டர் பக்கத்தில் சுசி லீக்ஸ் என்ற பெயரில் பல நடிகர் நடிகைகள் பற்றி பல்வேறு விஷயங்கள் பகிரப்பட்டது.
அது குறித்து பல வருடங்கள் கழித்து இப்போது சுசித்ரா பேசியிருக்கிறார். அதில் என்னுடைய கணவர் மற்றும் அவருடைய நண்பர்கள் சேர்ந்து தான் என்னுடைய பாஸ்வேர்டை திருடி பல நடிகர் நடிகைகள் பற்றி பல விஷயங்களை போட்டு என்னை சிக்க வைத்து விட்டனர் என்று கூறியிருந்தார். அதோடு தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் மீது மேலும் சில குற்றச்சாட்டுகளையும் கூறியிருந்தார்.
அதில் என்னுடைய கணவர் ஓரின சேர்க்கையாளர் தான். அதை அவருக்கு வெளியே சொல்ல தைரியம் கிடையாது. திருமணமான இரண்டு வருடத்தில் நான் அதை கண்டுபிடித்து விட்டேன். என்னுடைய கணவருக்கும் தனுஷுக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்தது. ஒரு நாள் குடித்துவிட்டு இருவரும் ஒரே அறைக்குள் போய்விட்டனர். அங்கு என்னவெல்லாம் பண்ணுனார்கள் என்பது எனக்கு தான் தெரியும்.
எனக்கும் கார்த்திக்கும் பெற்றோர்கள் பார்த்து தான் திருமணம் செய்து வைத்தார்கள். இதனால் நான் அவரிடம் காதலை எதிர்பார்க்கவில்லை. நான்தான் முதலில் விவாகரத்து கேட்டேன். ஆனால் அவர்தான் சுச்சி லீக்ஸுக்கு காரணம் என்று கூறியிருந்தார். அந்த நிலையில் சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.
அதில் நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதை வெளியே சொல்வதற்கு நான் அசிங்கப்படக்கூடிய ஆள் கிடையாது. செக்ஸ் விஷயம் தனிப்பட்டவர்களுடைய விருப்பம். அதில் நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால், தைரியமாக நான் இப்படித்தான் என்று வெளியே சொல்லி இருப்பேன். எந்த இடத்திலும் அதை மறைத்து வைத்து இன்னொருவரை கஷ்டப் படுத்த வேண்டிய அவசியம் எனக்கு கிடையாது.
அதே நேரத்தில் சென்னையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் கலந்துகொள்ளும் பிரைட் மார்க் நிகழ்ச்சியில் நான் எந்த நாட்டில் இருந்தாலும் தவறாமல் வந்து கலந்து கொள்வேன். அதற்கு ஓரினச்சேர்க்கையாளராக இருக்க வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. ஓரின சேர்க்கையாளர்களுக்கு நான் சப்போர்ட் கொடுக்கிறேன் என்பதால் நான் ஓரினச்சேர்க்கையாளர் என்று இல்லை. அப்படி இருந்தால் நான் ஆமாம் என்று சந்தோசமாக தான் சொல்லுவேன். அதை வெளியே சொல்ல அசிங்கப்பட மாட்டேன் என்று அதில் கார்த்திக் பேசி இருந்தார்.
அதற்குப் பிறகு கார்த்திக் குமார், சுசித்ரா தன்னை பற்றியும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் தொடர்ச்சியாக அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதனால் தானும் தன்னுடைய குடும்பமும் மன வருத்தத்தில் இருப்பதாகவும், அதனால் பாடகி சுசித்ரா தன்னைப் பற்றியும் தன்னுடைய குடும்பத்தை பற்றியும் கருத்து தெரிவிப்பதற்கு இடைக்கால தடை தெரிவிக்க வேண்டும் என்றும்,
அதே நேரத்தில் சுசித்ரா தங்களுடைய நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் வழக்கு தொடுத்து இருக்கிறார். இந்த நிலையில் அந்த வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற நீதிபதிகள் சுசித்ரா, கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க இடைக்கால தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications