பாடகி ஸ்வாகதா-விடம் ஜேம்ஸ் வசந்தன் சில்மிஷம் செய்ததாக வரிசையாக வந்த கமெண்ட்ஸ்.. கூல் பதில்
சென்னை: பிரபல பின்னணி பாடகி ஸ்வாகதா கிருஷ்ணன் தன்னிடம் ஒரு இசையமைப்பாளர் பாலியல் தொந்தரவு செய்ததாக வெளிப்படையாக கூறியிருப்பது, கோலிவுட் வட்டாரத்தையே அதிரவைத்துள்ளது. இந்த விவகாரம் தற்போது சமூக வலைத்தளங்களில் தீவிரமாக பேசப்பட்டு வருவதோடு, யார் அந்த இசையமைப்பாளர் என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது. இந்த நிலையில் ஒரு சிலர் அந்த இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் என்று கமெண்ட் கொடுத்து வருகின்றனர் இது குறித்து ஜேம்ஸ் வசந்தன் கூலாக பதில் கொடுத்திருக்கிறார்.

பாடகி ஸ்வாகதாவின் பயணம்
மதுரையில் பிறந்து வளர்ந்த ஸ்வாகதா, சிறு வயதிலேயே இசையில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்றவர். பின்னர் சினிமாவில் வாய்ப்பு பெற்று, 200-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடி தனக்கென ஒரு இடத்தைப் பெற்றார். "காற்றின் மொழி", "நோட்டா" போன்ற படங்களிலும், பல மேடை நிகழ்ச்சிகளிலும் தனது குரலால் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
பயங்கர குற்றச்சாட்டு
சமீபத்தில் அளித்த யூடியூப் பேட்டியில், தன்னுடன் பணியாற்றிய ஒரு இசையமைப்பாளர் தான் மீது பாலியல் வன்முறை நடத்தியதாக ஸ்வாகதா குற்றம் சாட்டினார். சம்பளம் சரியாக வழங்காததோடு மட்டுமல்லாமல், பணம் வாங்கி ஏமாற்றியதுடன், பாலியல் தொந்தரவு செய்து அதை வீடியோவாக பதிவு செய்து மிரட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தால் மனஅழுத்தத்திற்கு ஆளான அவர், சினிமாவை விட்டு விலகி ரிஷிகேஷில் புதிய வாழ்க்கையைத் தொடங்கியதாக கூறினார். அதே நேரத்தில், நடந்ததை மறக்கமாட்டேன், சட்டப்படி போராடுவேன், சரியான நேரம் வரும்போது அந்த இசையமைப்பாளர் யார் என்று நான் சொல்வேன் எனவும் பேசி இருந்தார்.
பழைய பதிவுகள் மீண்டும் வைரல்
இந்த விவகாரம் பேசப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், ஸ்வாகதா தனது பழைய சமூக வலைத்தள பதிவையும் பகிர்ந்துள்ளார். அதில், "இந்த சம்பவம் நடந்ததிலிருந்து பல மாதங்கள் சிகிச்சை எடுத்தேன். இன்னும் நினைத்தாலே நடுங்குகிறேன். இப்போது அந்தப் பாலியல் குற்றவாளி இசை அமைப்பாளரிடம் மாணவர்கள் என்ன அனுபவிக்கிறார்கள் என்று சிந்தித்துப் பாருங்கள்" என அவர் பதிவிட்டிருந்தது மீண்டும் வைரலாகி வருகிறது.
ஜேம்ஸ் வசந்தன் ஆதரவு
இந்த விவகாரத்தில் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் வெளிப்படையாக ஆதரவு தெரிவித்தது பரபரப்பை அதிகரித்துள்ளது. தனது சமூக வலைத்தளப் பதிவில், "இதை அதிகமாக பகிருங்கள். இது யாரையும் குறை சொல்ல அல்ல. ஆனால் அந்த இசையமைப்பாளரின் செயல்கள் இன்னும் தொடர்கின்றன என்று ஸ்வாகதா கூறியிருப்பது கவலைக்குரியது. மேலும் பெண்கள் பாதிக்கப்படாமல் இருக்க அவர் யார் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வர வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், ஸ்வாகதாவை பெயரை வெளிப்படுத்த வற்புறுத்த முடியாது என்றாலும், அவர் அளித்த தகவல்களை வைத்து அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். #AbuserMusicDirector, #TNPolice, #WomensCommission போன்ற ஹாஷ்டேக்குகளையும் பயன்படுத்தி இந்த விவகாரத்தை கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

ஜேம்ஸ் வசந்தன் கூல் பதில்
ஜேம்ஸ் வசந்தனின் பதிவுக்குக் கீழே பலர் கமெண்ட்ஸ் மூலம் பல்வேறு பெயர்களை குறிப்பிடத் தொடங்கினர். அதில் சிலர் நேரடியாக அவருடைய பெயரையே கூறி வைத்திருக்கிறார்கள் . "கமெண்ட் செக்ஷனில் உங்கள் பெயரைத்தான் பலரும் சொல்கிறார்கள்" என்று ஒருவர் குறிப்பிட்டதற்கு, ஜேம்ஸ் வசந்தன் மிக அமைதியாக "அதனால்தான் அவர்களை 'ஹேட்டர்ஸ்' என்று சொல்கிறோம்" என்று பதிலளித்துள்ளார். இந்த பதிலும் தற்போது வைரலாகி வருகிறது.
சமூக விவாதமாக மாறிய பிரச்சனை
இந்த சம்பவம் தற்போது ஒரு தனிப்பட்ட குற்றச்சாட்டை தாண்டி, பெரிய சமூக விவாதமாக மாறியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு, சினிமா துறையில் உள்ள மறைமுக பிரச்சனைகள், #MeToo போன்ற இயக்கங்கள் மீண்டும் பேசுபொருளாகியுள்ளன.
-
இந்த வார இறுதியில் ஓடிடியில் என்ன பார்க்கலாம்? ‘வாரண்ட்’ சீரிஸ் விமர்சனம்! விலங்கு கொடுத்த அதே தரமா? -
அஜித்துக்கு அடுத்த பேரிழப்பு.. தந்தையை தொடர்ந்து தாயாரும் மறைவு.. சோகத்தில் பிரபலங்கள் வருத்தம் -
“ஒரு சூப்பர் ஸ்டார் நடிகர் செய்த துரோகம்.. சினிமாவை விட்டே போனேன்” - சோனா பேட்டி.. கிளம்பிய சர்ச்சை -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்!












Click it and Unblock the Notifications