தனுஷ் என் வாழ்க்கையில் வந்த தேவதை- கலைமாமணி விருது பெற்ற ஸ்வேதா உருக்கம்! தொடரும் பந்தம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமா மற்றும் இசையுலகில் உள்ள கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்று கலைமாமணி விருது. இந்த விருதை, பிரபல பின்னணிப் பாடகி சுஜாதா மோகனின் மகள் ஸ்வேதா மோகன் பெற்றிருக்கிறார். "என் அம்மாவுக்கு 4 வருடங்களுக்கு முன்பு கலைமாமணி விருது கிடைத்தது. இப்போது எனக்கும் கிடைத்திருக்கிறது. இது எனது அடுத்தடுத்த முயற்சிகளுக்குக் கிடைத்த ஊக்கம்" என்று ஸ்வேதா மோகன் தெரிவித்திருக்கிறார்.

Swetha Mohan Sujatha Mohan Dhanush

பாடகி சுஜாதா மோகனின் பயணம்

பாடகி சுஜாதா மோகன் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் எனப் பல மொழிகளிலும், பல தலைமுறை இசையமைப்பாளர்களுடனும் பணிபுரிந்தவர். ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா போன்ற இசையமைப்பாளர்களுடன் இணைந்து இவர் பாடிய பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கின்றன. காதல் ஒரு விழி (மாலைநேரத்து மயக்கம்), சின்னத் தாயவள் (தலைவாசல்), காதல் ரோஜாவே (ரோஜா) போன்ற பாடல்கள் அவருடைய இனிய குரலுக்காகவே கொண்டாடப்படுகின்றன. தனது நீண்ட இசைப் பயணத்தில், பல விருதுகளையும், அங்கீகாரங்களையும் பெற்றிருக்கும் இவர், தனது மகளும் அதே பாதையில் பயணித்து வெற்றி பெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைந்திருக்கிறார்.

வாரிசு கலைஞரின் சாதனை

தாயைப் போலப் பிள்ளை, நூலைப் போலச் சேலை என்று சொல்வார்கள். அதற்கு ஒரு சிறந்த உதாரணம் பாடகி ஸ்வேதா மோகன். தனது தாயின் பெயரைத் தாங்கி வந்தாலும், தனது தனித்துவமான குரலால் தனக்கென ஒரு இடத்தைப் பிடிப்பதற்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். ஸ்வேதா மோகன் பாடிய பல பாடல்கள் மிகப் பெரிய ஹிட் ஆகியுள்ளன. சத்தியமா (வேலையில்லா பட்டதாரி), பூக்களே சற்று (ஐ), என்னோடு நீ இருந்தால் (ஐ), நீயும் நானும் (நானும் ரவுடிதான்) எனப் பல ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.

இந்த விருது குறித்துப் பேசிய ஸ்வேதா மோகன், நடிகர் தனுஷைப் பற்றி ஒரு உருக்கமான தகவலைத் தெரிவித்தார். "நடிகர் தனுஷை நான் என் வாழ்க்கையில் வந்த தேவதை என்றுதான் சொல்லுவேன். காரணம், அவர் எனக்கு கொடுத்த பாடல்கள் எல்லாமே தங்கம். அவருடைய படங்களில் நான் பாடிய பல பாடல்கள் எனக்கு ஹிட் கொடுத்திருக்கிறது. எனக்குக் கொடுத்த ஒவ்வொரு பாடலும் என் பெயரைச் சொல்லும் அளவிற்கு நிலைத்திருக்கிறது" என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

இரு குரல்கள்

தனுஷ் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை. புதுப்பேட்டை படத்தில் வெளியான காதலே காதலே என்ற பாடல், இன்றுவரை காதல் தோல்வி பாடல்களின் முதல் வரிசையில் உள்ளது. இந்தப்பாடலை இருவரும் இணைந்து பாடியிருந்தனர். அதுமட்டுமல்ல, திருச்சிற்றம்பலம் படத்தில் ஒரு வாய் சொல் என்ற பாடலை இவர்கள் இருவரும் பாடியுள்ளனர். அதுபோல ராயன் படம் பருவத்தில் இடம்பெற்ற வாட்டர் பாக்கெட் போன்ற ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

ஒரு கலைஞன் தனது திறமைக்குக் கிடைத்த அங்கீகாரமாகப் பார்க்கும் இந்த கலைமாமணி விருதை, ஸ்வேதா மோகன் தனது தாயின் வழியாக வந்த ஒரு பாரம்பரியமாகப் பார்க்கிறார். இந்த விருதை ஒரு தொடக்கமாக எடுத்துக்கொண்டு, இனிவரும் காலங்களில் மேலும் பல சாதனைகளைப் படைப்பார் என்று நம்பலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+