பிரம்மாண்டமாக நடந்த பாடகர் உன்னிகிருஷ்ணன் மகன் திருமணம்.. கவிஞர் வைரமுத்து போட்ட ஸ்பெஷல் ட்வீட்
சென்னை: பாடகர் உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ண உத்ரா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். இந்த திருமணத்தில் கலந்து கொண்ட கவிஞர் வைரமுத்து உன்னிகிருஷ்ணன் குறித்தும் அவருடைய குடும்பத்தினர் குறித்தும் நெகிழ்ந்து போஸ்ட் போட்டு இருக்கிறார். இதற்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகிறார்கள்.
தமிழ் சினிமா உலகில் பிரபல பாடகராக வலம் வரும் உன்னிகிருஷ்ணன் ஆரம்பத்தில் வாய்ப்புக்காக பல முயற்சிகளை எடுத்து இன்று பலருக்கும் பிரபலமாக மாறி இருக்கிறார் அவருடைய வீட்டில் இப்போது திருமண கொண்டாட்டம் நடைபெற்று இருக்கிறது. பாடகர் உன்னிகிருஷ்ணன் 1994 ஆம் ஆண்டில் பிரியா என்பவரை திருமணம் செய்திருந்த நிலையில் இந்த தம்பதிக்கு உத்ரா மற்றும் வாசுதேவ் என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.

அதில் உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவனுக்கு இன்று திருமணம் நடைபெற்று இருக்கிறது. அவர் உத்ரா என்பவரை திருமணம் செய்து இருக்கிறார். உன்னிகிருஷ்ணனின் மகள் பெயரும் உத்ரா, மருமகள் பெயரும் உத்ரா என்பது பலரையும் வியக்க வைத்திருக்கிறது. அதுபோல உன்னிகிருஷ்ணனின் மகள் உத்ரா சைவம் படத்தில் இடம்பெற்ற "அழகே அழகு" என்ற பாடலை பாடி பிரபலமடைந்திருந்தார்.
அதற்கு பிறகு பிசாசு, லட்சுமி போன்ற படங்களிலும் பாடல்கள் பாடி இருக்கிறார். உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். இந்த நிலையில் வாசுதேவ் திருமணத்தை உன்னிகிருஷ்ணன் பிரம்மாண்டமாக நடத்திருக்கிறார். இந்த திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்திருக்கின்றனர். அதில் கவிஞர் வைரமுத்துவும் கலந்து கொண்டிருக்கிறார்.

அப்போது எடுத்த புகைப்படத்தை வைரமுத்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். அதில், "பாடகர் உன்னிகிருஷ்ணன் இல்ல திருமணம். நான் எழுதிய ஒரு பாட்டுக்கு உன்னிகிருஷ்ணன் தேசிய விருதை பெற்றார். அவர் பாடிய என் பாட்டுக்கு தேசிய விருதை நான் பெற்றேன். உள்ளம் கவர் பாடகர் குடும்பத்தை உள்ளன்போடு வாழ்த்தினேன்" என்று கூறி இருக்கிறார்.
அதோடு, "மணமகனின் மைண்ட் வாய்ஸ் இதுதான் என்று, என்னவளே அடி என்னவளே என்ற இதயத்தை தொலைத்து விட்டேன்.. கோகிலமே நீ குரல் கொடுத்தால் உன்னை கும்பிட்டு கண்ணடிப்பேன்.. கோபுரமே உன்னை சாய்த்து கொண்டு உன் கூந்தலில் மீன்பிடிப்பேன்.. வெண்ணிலவே உன்னை தூங்க வைக்க உன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்.. வருட வரும் பூங்காற்றை எல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்.." என்று வாழ்த்துக்கள் கூறி இருக்கிறார்.
ரியல் தம்பதியாக போகும் விஜய் டிவி பிரபலங்கள்.. திருமண தேதியை அறிவித்த சங்கீதா.. குவியும் வாழ்த்து
அதுபோல பாடகர் உன்னிகிருஷ்ணன் சினிமா பாடல்களை விடவும் பக்தி பாடல்கள் அதிகமாக பாடி இருக்கிறார். லக்ஷ்மன் சுருதி இசை குழுவின் சார்பாக ஒவ்வொரு ஆண்டும் சென்னை காமராஜர் அரங்கில் நடைபெறும் சென்னையில் திருவையாறு இசை மற்றும் நாட்டிய விழாவில் தொடர்ந்து பல வருடங்களுக்கு மேலாக உன்னிகிருஷ்ணன் பாடிக்கொண்டு வருகிறார்.
அதுபோல உன்னிகிருஷ்ணன் கர்நாடக இசையையும் முறைப்படி கற்று இருக்கிறார். இவர் கேரளாவை பூர்வீகமாக கொண்டவர். தன்னுடைய 12 வயதிலேயே கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்றுக் கொண்டார். ஆனால் கல்லூரி படிப்பை முடித்ததும் மிட்டாய் கம்பெனி ஒன்றில் தான் இவருக்கு வேலை கிடைத்தது.

அங்கு நிர்வாகியாக வேலை பார்த்து வந்தார். அதற்கு பிறகு இதிலே இருந்து கொண்டு இருந்தால் நம்முடைய திறமையை வெளியே கொண்டு வர முடியாது என்று அந்த வேலையில் இருந்து விலகி பாடகராக வேண்டும் என்ற லட்சியத்தோடு அதற்காக வாய்ப்பை தேடி இருக்கிறார்.
கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி ரியல் ஜோடி.. அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி.. குவியும் வாழ்த்து
அந்த நேரத்தில் திரை உலகில் உன்னி கிருஷ்ணனை அழைத்து வந்து பாடகராக மாற்றியது ஏ ஆர் ரகுமான் தான். அதற்குப் பிறகு தமிழ், மலையாளம், கன்னடம் மொழிகளிலும் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி இருக்கிறார். அதுபோல சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலும் நடுவராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் உன்னிகிருஷ்ணனின் மகன் வாசுதேவ் கிருஷ்ணனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications