கர்ப்பத்தை அறிவித்த சன் டிவி ரியல் ஜோடி.. அத்தனை வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி.. குவியும் வாழ்த்து
சென்னை: சன் டிவியில் ஒளிபரப்பான நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலம் அடைந்த நடிகை ஸ்ரீதிகா சில மாதங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் ஆரியனை காதலித்து திருமணம் செய்திருந்தார். இவர்களுடைய திருமணம் குறித்து இணையத்தில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வந்தது. அதையெல்லாம் தாண்டி தற்போது இந்த தம்பதி தாங்கள் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கின்றனர்.
சீரியல் நடிகை ஸ்ரீதிகாவிற்கு இணையத்தில் அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு பிரபலம் கொடுத்தது நாதஸ்வரம் சீரியல் மலர் கேரக்டர்தான். அந்த சீரியல் மூலமாகத்தான் சின்ன திரையில் இவருக்கென்று தனி ரசிகர்கள் உருவாகி இருந்தனர்.

நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து தொடர்ச்சியாக சன் டிவியில் பல சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் அவரோடு மகராசி சீரியலில் கதாநாயகனாக நடித்த ஆரியனை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஆரியனுக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து அவருக்கு விவாகரத்து முடிந்து விட்டது.
ஆரியனும் சன் டிவி சீரியல் நடிகை ஒருவரை தான் காதலித்து திருமணம் செய்திருந்தார். ஆனால் திருமணத்திற்கு பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் விவாகரத்து செய்து இருந்தனர். அதுபோல ஆரியனின் திருமணத்தில் ஸ்ரீதிகா கணவரோடு கலந்து கொண்டார். இப்போது இருவரும் முதல் திருமண வாழ்க்கையில் இருந்து விலகி இரண்டாவது திருமணம் செய்திருந்தனர்.

இது சில மாதங்களுக்கு முன்பு பெரிய அளவில் பேசப்பட்டது. இவர்கள் இருவரும் காதலித்ததால்தான் முதல் திருமணத்தில் இருந்து விலகி விட்டார்கள் என்று எல்லாம் வதந்திகள் பரவி வந்தது. அதற்கெல்லாம் ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் விளக்கம் கொடுத்திருந்தனர். தாங்கள் இருவருமே தங்களுடைய முதல் திருமண வாழ்க்கையில் இருந்து பல விஷயங்களை கற்றுக் கொண்டிருந்ததாகவும் சொல்லியிருந்தனர். அதுபோல ஆரியன் மற்றும் ஸ்ரீதிகா இருவருமே தங்களுடைய முதல் தம்பதிகள் குறித்து எந்த இடத்திலும் குறை சொல்லியது கிடையாது.
இந்த நிலையில் ஸ்ரீதிகா மற்றும் ஆரியன் தம்பதி தாங்கள் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சி செய்தியை நேற்று தன்னுடைய ரசிகர்களிடம் பகிர்ந்து இருக்கிறார்கள். இந்த தம்பதிக்கு அதிகமானோர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள். இணையத்தில் முகத்தை காட்டாத பலர் இவர்கள் குறித்து விமர்சனங்கள் எழுப்பி வந்த நிலையில் இவர்கள் இருவரும் அதிலிருந்து மீண்டு வந்து தங்களுடைய திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

அதோடு ஆரியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் பெரிய சக்தியுடன் பெரிய பொறுப்பு வருகிறது. எங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களின் அளப்பரிய அன்பு மற்றும் ஆதரவுடன் எங்கள் பயணம் தொடர்கிறது. எனவே நாங்கள் இப்போது பெற்றோர் ஆகி நம் வாழ்வின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பகுதிக்குள் நுழைகிறோம்.
3வது முறையாக கர்ப்பமாக இருக்கும் சீரியல் நடிகரின் மனைவி.. ஆனால் இப்படி ஒரு போஸ்ட் எதிர்பார்க்கல!
எல்லாம் வல்ல இறைவனின் அனைத்து ஆசீர்வாதங்களுடன் நாங்கள் கர்ப்பமாக இருக்கிறோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சியுடன் உலகிற்கு அறிவிக்கிறோம். எங்களுக்கு சமூக ஊடக நண்பர்களும், குடும்பத்தினரும் நிபந்தனை அற்ற அன்பையும் ஆதரவையும் எதிர்பார்க்கிறோம். உங்களை தவிர வேறு யாரும் எங்களுக்கு இல்லை என்பது போன்று அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார். இந்த தம்பதிக்கு சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications