கதறி அழுத கரூர் எஸ்பியின் அம்மா.. மேடையில் இருந்து ஓடி வந்த பாடகர் வேல்முருகன்.. பிறகு நடந்த அதிசயம்
சென்னை: பாடகர் வேல்முருகன் கரூரில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பாடிய பாடலை கேட்டு கரூர் எஸ் பி யின் அம்மா கதறி அழுத வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வேல்முருகன் மேடையில் பத்து மாசம் என்ன பெத்தெடுத்த அம்மா என்ற பாடலை பாட அதைக் கேட்டு அந்த நிகழ்ச்சியை காண வந்திருந்த எஸ் பி யின் அம்மா கதறி அழுது இருக்கிறார்.
பின்னணி பாடகராகவும், நடிகராகவும், பாடல் ஆசிரியராகவும் இருக்கும் வேல்முருகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். இந்த நிலையில் இப்போது அவர் குறித்த பேச்சு தான் இணையத்தில் அதிகமாக இருக்கிறது. அது பற்றி பார்க்கலாம்.

அத்த வகையில் பாடகர் வேல்முருகன் சுப்ரமணியபுரம் படத்தில் இடம்பெற்ற மதுரை குலுங்க என்ற பாடல் மூலமாக பாடகராக அறிமுகம் ஆகி, அதை தொடர்ந்து நாடோடிகள், ஆடுகளம் போன்ற பல திரைப்படங்களில் பல பாடல்களை பாடி மக்கள் மத்தியில் முக்கிய பிரபலமாக மாறி இருக்கிறார். இவருக்கு இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மூலமாகத்தான் ஒரு பாடகராக வாய்ப்பு கிடைத்திருக்கிறது.
தனக்கு கிடைத்த வாய்ப்பை விட்டு விடாமல் அடுத்தடுத்து பல திரைப்படங்களில் பாடல்கள் பாடி இருக்கிறார். அதிலும் இவர் பாடிய ஒத்த சொல்லால என்ற பாடல் பெரிய அளவில் ஹிட்டானது. அதுபோல ஆம்பளைக்கும் பொம்பளைக்கும் அவசரம், வேணாம் மச்சான் வேணாம், உன்னத்தான் நினைக்கையிலே, கத்திரி பூவழகி என்று பல பாடல்கள் பெரிய அளவில் ஹிட் அடித்தது.. அதுபோல 2007 ஆம் ஆண்டு வேல்முருகன் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார்.
அதுபோல 2009 ஆம் ஆண்டு ஆடுங்கடா என்ற பாடலுக்கு சிறந்த அறிமுக பின்னணி பாடகருக்கான எடிசன் விருது பெற்றிருக்கிறார். அதுபோல அசுரன் திரைப்படத்தில் இடம் பெற்ற "கத்தரி பூ அழகி" திரைப்பட பாடலுக்கு 2019 ஆம் ஆண்டு சிறந்த அறிமுக பின்னணி பாடகருக்கான விருதையும் பெற்றிருக்கிறார். இப்படியாக பல பாடல்களைப் பெற்றிருக்கும் வேல்முருகன் பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக அறிமுகமாகி சின்னத்திரை மக்களின் மனதிலும் தனி இடத்தை பிடித்திருந்தார்.
அதைத் தொடர்ந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 2 என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு இருந்தார். சின்னத்திரைக்கு தான் வந்திருந்தாலும் வெள்ளித் திரையை விட்டு விலகவில்லை என்று சொல்கிற மாதிரிதான் இப்போதும் சில திரைப்படங்களில் பாடிக்கொண்டிருக்கிறார். இப்படியான நிலையில் நேற்று அவர் கரூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடல் பாடுவதற்காக சென்று இருக்கிறார்.

அங்கு அவர் "பத்து மாசம் என்னை பெத்து எடுத்த அம்மா" என்ற பாடலை பாட அப்போது அந்த பாடலை பார்ப்பதற்காக வந்திருந்த கரூர் எஸ் பி யின் அம்மா நெகிழ்ந்து கண்கலங்கி குழந்தை போல அழுது இருக்கிறார். அதனைப் பார்த்த வேல்முருகன் மேடையில் இருந்து தடதடவென கீழே இறங்கி வந்து அந்த அம்மாவின் அருகில் நின்றபடியே அந்த பாடலை பாடி முடிக்க அந்த அம்மா கதறி அழுது கொண்டே இருந்தார். கேமரா முழுவதும் தன்னை சுற்றி வந்ததை பார்த்த அந்த அம்மா ஒரு கணத்தில் திகைத்து போய் இருந்தார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆக வருகிறது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்!












Click it and Unblock the Notifications