சிறகடிக்க ஆசையில் நாளை: முத்துக்கு தெரியவரும் அடுத்த ரகசியம்.. உடையும் குடும்பம்? மீனா முடிவு?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் நாளைக்கான எபிசோடின் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் முத்துவின் கண்ணில் மீனாவின் தங்கை சீதாவும் அவருடைய காதலும் சிக்குகின்றனர். இதனால் அடுத்து எதிர்பாராத சம்பவம் நடக்க இருக்கிறது.
சிறகடிக்க ஆசை சீரியலில் எப்போதுமே எல்லா பிரச்சனைகளும் முத்து மற்றும் மீனா கண்ணில் தான் சிக்கிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே கடந்த வாரத்தில் ரோகிணி பற்றிய உண்மைகளை முத்துவும் மீனாவும் கண்டுபிடித்து இருந்தனர். எல்லோரும் ஒரே திருமண பங்க்ஷனில் குடும்பமாக கலந்து கொண்டிருந்தாலும் அந்த திருமண பங்க்ஷனில் கலந்து கொண்ட மலேசிய மாமா முத்து மற்றும் மீனா கண்ணில் சிக்கியது யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட் ஆக இருந்தது.

தொடரும் பிரச்சனை
இரண்டு வாரங்களாக மலேசியா மாமாவை யார் பார்ப்பாங்க என்று ரசிகர்களின் மனதை ஏங்க வைத்துவிட்டு கடைசியில் முத்து கண்ணீர் மொத்தமாக சிக்க வைத்திருந்தார் இயக்குனர். அதுபோல ஜீவாவும் முத்துவிடம் தான் சிக்கி இருந்தார். அதைத் தொடர்ந்து இப்போது சீதாவும் முத்துவிடம் மாட்டியிருக்கிறார். ஏற்கனவே டிராபிக் போலீஸ் அருணுக்கும் முத்துவுக்கும் வாய்க்கா வரப்பு சண்டை போல பிரச்சனை நீண்டு கொண்டே போகிறது.
ரசிகர்களுக்கு ஏமாற்றம்
இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் இல்லை என்று சொல்வதுபோல மீண்டும் மீண்டும் முட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதே டிராபிக் போலீஸ்காரரும் சீதாவும் இப்போது காதலிக்க தொடங்கி இருக்கிறார்கள். இந்த காதல் விஷயம் முத்துவிற்கு தெரிய வரும்போது முத்து என்ன சொல்ல போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. ரோகினி பற்றிய உண்மைகள் தெரிய வருமா என்று காத்திருந்த ரசிகர்களுக்கு சின்னதாக ஒரு லாலிபப் மிட்டாய் கொடுத்து குழந்தையை ஏமாற்றுவது போல ரோகிணியின் மலேசியா மாமா ரகசியத்தை மட்டும் உடைத்துவிட்டு சீரியல் ரசிகர்களை ஏமாற்றி விட்டார்கள்.
சீதாவின் காதல்
ரோகினி பற்றிய உண்மைகள் தெரிய வந்தும் முத்துவும் மீனாவும் வித்யாவிடம் இது பற்றி எந்த விசாரணையும் செய்யாமல் இருப்பது அதிகமாக விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் ரோகிணி கதையை அப்படியே திருப்பி விட்டுவிட்டு சீதா பக்கமாக ஃபோக்கஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாளைக்கு என்று வெளியான பிரமோவில் சீதாவும் அருணும் பைக்கில் ஒன்றாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
சிக்கும் போலீஸ்காரர்
அதே இடத்தில் முத்து தன்னுடைய நண்பரோடு சாப்பிட்டு கொண்டிருக்கிறார். அப்போது சீதா என்னை இந்த இடத்திலேயே நிறுத்தி விடுங்கள் அந்த பக்கமாக போனா எங்க அம்மாவோ அல்லது தெரிஞ்சவங்க யாராவது பார்த்திடுவாங்க அப்போ தேவையில்லாத பிரச்சனை தான் வரும் என்று சொல்ல, அப்படி வந்தா என்ன நீ என்னை காதலிக்கிற விஷயத்தை குடும்பத்தில் சொல்லிவிடு அவ்வளவுதான் என்று போலீஸ்காரர் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

முத்து பார்த்த விஷயம்
இவர்கள் இருவரும் பேசுவதை முத்து பார்த்து விடுகிறார். இதனால் நாளைக்கு என்ன ஏதுன்னு விசாரிக்காமல் போலீஸ்காரர் சட்டையை பிடித்து முத்து அடிக்க போவார். ஏற்கனவே மனோஜை போலீஸ்காரர் பிடித்து வைத்திருந்தபோது என்னுடைய அண்ணன் என்று தெரிந்து நீ என்னை பழிவாங்க என்னுடைய அண்ணனை அடைச்சு வச்சிருக்க என்று முத்து வாக்குவாதம் செய்தவர்தான்.
மீனா முடிவு
ஆனால் இப்போது சீதா நான் இவரை தான் காதலிக்கிறேன் என்று முத்துவுக்கு அதிர்ச்சி கொடுக்க போகிறார். இந்த மாப்பிள்ளை வேண்டாம் என்று முத்து சொல்ல, அதற்கு மீனா என்னுடைய தங்கச்சியின் வாழ்க்கை தான் முக்கியம் என்று பிரச்சனை செய்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் டுவிஸ்ட் என்கிற பெயரில் என்னதான் செய்யப் போகிறார்கள் என்று பொறுத்திருந்து பார்க்கலாம் மக்களே.












Click it and Unblock the Notifications